Saturday, December 04, 2010
தமிழ்-யுனிக்கோடு: கிரந்த வியாபாரிகளிடம் தொடர்ந்து ஏமாறும் தமிழக அரசு - பகுதி-3/3
தமிழ்-யுனிக்கோடு: கிரந்த வியாபாரிகளிடம் தொடர்ந்து ஏமாறும் தமிழக அரசு - பகுதி-2/3
தள்ளுபடியாகிவிட்டது. இனி அடுத்த சரவலுக்கு வருவோம்.
கிரந்த எழுத்துக்களை தமிழ் எழுத்துக்களில்
போதும், தமிழ் எழுத்துக்களைக் கொண்டுபோய்
கலக்கும் முன்மொழிவை ஏற்கவிருந்த சூழலில்
நன்கு கலந்தாலோசித்துக் கருத்துரைக்க
அவசரப்பட்டு எதுவும் செய்யாமல்,
ஆனால் கிரந்த வியாபாரிகள் இந்த
அதற்கு ஏற்ற கூட்டணிகளை உருவாக்கியிருக்கிறார்கள்.
சூழல் என்ன?
இதுவரை யுனிக்கோடுவில் கிரந்தக்
யுனிக்கோடுவில், உலகில் இருக்கின்ற
இந்திய நடுவணரசு சர்மாவின் முன்மொழிவைக்
சர்மா கேட்டிருந்தது, பல மொழிகளிலும்
ஆனால் கணேசன் சூழ்ச்சி முன்மொழிவோ,
"சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி"
அமைந்துவிட்டது.
மட்டும் எடுத்துக் கொண்டு கணேசனின்
தானே ஒரு தமிழ் கலந்த கிரந்த
இதுதான் இன்றைக்குப் பூதமாகியிருக்கிறது.
உலகில் உள்ள மொழிகளின் எழுத்துக்கள்,
இடம் ஒதுக்கி பன்னாட்டு மொழிகள் ஒருங்கிய
யுனிக்கோடுவில் கிரந்தக் குறிகளுக்கென
கிரந்தக் குறிகளே இருக்கக் கூடாது என்று
நமக்கு அது தேவையுமில்லை. கவலையுமில்லை.
அது முட்டாற்றனமும் கூட.
ஆனால், "வேலியிலே போகின்ற ஓணானை
கிரந்தக் குறியேற்றத்தை ஒரு ஓரப்பாத்தியில்
கிரந்தத்தோடு ஒட்ட வையுங்கள்" என்று
செய்தவர் நாசா விஞ்ஞானியும்
நா.கணேசனே நடுவணரசு இப்படியான
இணையக் குழுக்களிலும் எழுதிப் பெருமையும்
இப்படியான சூழலில் தமிழ்நாட்டரசு
எப்படி நிகழ்கிறது என்பதை ஆழ்ந்து பார்த்தால்
(தொடரும்)
அன்புடன்
நாக.இளங்கோவன்
தமிழ்-யுனிக்கோடு: கிரந்த வியாபாரிகளிடம் தொடர்ந்து ஏமாறும் தமிழக அரசு - பகுதி-1/3
ஏறத்தாழ ஒரே நேரத்தில், கிரந்தம் தொடர்பான
1) உலகளாவிய மொழிகளின் எழுத்துக்கள்
2) இருக்கின்ற தமிழ்-யுனிக்கோடுவில்
3) புதிதாக உருவாக்கப் படுகின்ற கிரந்த-யுனிகோடுவில்
இந்த மூன்று செய்திகளும் தமிழக அரசிற்குத்
இந்தச் செயற்பாடு ஒருபுறம் கிளர்ந்து எழ,
(Logical Technical Reasoning) தேவைப்பட்டது.
தமிழ்-யுனிக்கோடுவில் 27 கிரந்த எழுத்துக்களை
ஆழ்ந்த நுட்பியற் கருத்துக்கள்
தெளிந்த யுனிக்கோடு புலமை கொண்ட
அவர் விரும்பும் வடமொழி நூல்களை எப்படி
திரு.முத்து நெடுமாறன்,
அக்கருத்தைச் செயலாக்கித் திரையிலும்
மேலே கூறிய 3 கிரந்த முயற்சிகளில்
ஆர்வலர்கள், யுனிக்கோடு அறிஞர்கள் ஆகியோரின்
இங்கே விதயத்தை நன்கு உள்வாங்கி ஒத்திசைவுடன்
ஆக ஒரு விதயத்தில் தமிழர்களால் தமிழைக் காக்க முடிந்தது.
ஆக, மீதி இரண்டு விதயங்கள்.
(தொடரும்)
அன்புடன்
நாக.இளங்கோவன்
Saturday, October 23, 2010
காஞ்சி காமகோடிப் பீடத்தின் ஆசியில் தமிழ்-யுனிகோடு படுகொலை
எத்தனைத் தமிழ்க் கேடுகளைச் செய்யமுடியுமோ
தமிழக அரசும் இந்தப் போதையில் மயங்கிப் போய்,
பல இலட்ச உரூவாய் செலவில் தமிழ் இணைய
மாநாடு முழுக்க அங்கே ஏற்பாடு செய்யப்பட்ட
ஈயோட்டிக் கொண்டிருந்தன.
வந்த கூட்டமே அரங்கத்தை நிறைத்தது.
சொன்னால் “தமிழ் இணையம் என்ற பெயரில்”
அரசாங்கத்தின் கண்களையும் கட்டிவிட்டு
பலரும் அறிவர்.
இது கணி சார்ந்தது, இணையம் சார்ந்தது
அறிவிக்கும் நிலையில் உள்ளவர்கள்
நடக்கின்றன என்பது இன்னும் அரசு உணராமல் இருக்கின்றது.
அப்படிப் பட்ட மோசடிகளில் மிகப்பயங்கரமான
பயன்படுத்தும் யுனிகோடுவை சமசுக்கிருதமயமாக்கும்
ஏற்கனவே தமிழ் எழுத்தில் Ja Jaa Ju Juu
அந்தக் கிரந்த எழுத்துக்களை ஏற்கனவே
இருப்பவை இதுவரை எந்தத் தமிழனும் பார்த்துக் கூட
தமிழக அரசு வழியாக இதைச் செய்ய முடியாது
யுனிகோடு சேர்த்தியம் (unicode consortium) வழியாக
தமிழோடு சேர்த்து விட்டு, அதனை "Extended Tamil"
இப்போது Extended என்ற சொல்லையும்
யுனிகோடு சேர்த்தியத்தோடு நெருக்கத்தில்
சில அமைப்புகளின் உறுப்பினர்களும்
என்ற செய்திகள் கவலைக்குள்ளாக்குகின்றன.
இது பற்றிக் கவலைப்படுவது போல,
நடாத்திய உத்தமம் (INFITT.org) என்ற குழு
ஒரு கடிதம் எழுதுவதோடு நிறுத்திக் கொண்டது.
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட யுனிகோடுவிற்கு
தமிழக முதல்வர், தமிழக தகவல்+கணித்துறை
போன்ற யாருக்கும் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார்கள்
அமைச்சரோ ஒரு வரி மறுப்பை யுனிகோடு
ஆனால் அரசாங்கம் யாரையெல்லாம்
அந்த அதிகாரிகளும் ஆர்வலர்களும் அரசிடம்
மறைக்கிறார்கள் என்ற செய்திகள் இணையம்
அறிந்த வல்லுநர்களைத் துயரமடையச் செய்கின்றன.
மரணப்பள்ளத்தாக்கில் இருக்கும் தமிழ்
வெளியிட்டது. ஆனால் அது முடிந்த
முயற்சிகள் ஏறத்தாழ வெற்றிபெற்ற
தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் உரையாற்றிய
தமிழுக்கு ஏற்படவிருக்கும் பல ஆபத்துக்களைப் பற்றி
இந்தப் பேராபத்து. Sanskritizing Tamil Unicode என்ற
செயப்படும் இந்தச் சமசுக்கிருதமயமாக்கலின்
யுனிகோடு சேர்த்தியத்திற்கு எழுதப்பட்டதாகும்.
தொடர்புடைய பல மேற்கோள்களும் ஆதரவாளர்களும்
யுனிகோடு சேர்த்தியத்திற்கு மறுப்பினை
இருந்தால் மட்டும் பற்றாது என்று எல்லா
தமிழக அரசால் வளர்க்கப்பட்ட யுனிகோடு,
http://www.archive.org/stream/bhojacharitrama00sastgoog#page/n30/mode/1up
மேற்கண்ட சுட்டியில், அடையாளம் இன்னதென்று
அவையெல்லாம் தமிழில் புகக் காத்திருக்கும்
கீழே இணைப்பில் இந்த முனையலின் ஆதாரக்
இப்பொழுது வேண்டும் என்றே விட்டு விட்டு
திட்டி அரசியல் செய்வதற்குப் பதில் தமிழ்க்காவலர்கள்
அன்புடன்
நாக.இளங்கோவன்
Monday, August 16, 2010
குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! - பகுதி-3
http://nayanam.blogspot.com/2010/08/1.html
http://nayanam.blogspot.com/2010/08/2.html
முந்தைய கட்டுரையின் இறுதியில் சொல்லப்பட்ட
பன்னூறு ஆண்டுகளாக நிகழ்வில் இருக்கும்
இவரின் கொள்கை:"ஆங்கில மொழி எப்படி
அமைதியானந்தரின் தமிழ்ப்பற்று ஓங்கி உயர்ந்தது.
புரட்சித் தமிழர்களின் புரட்சித் தமிழில் இதோ கே,ஙே,சே,ஞே.

கி,ஙி,சி,ஞி எப்படி இருக்கும் என்பதனைக் கேட்டுவிட்டால்
சகலகலா வல்லவர்களான எழுத்துச் சீர்திருத்தவாதிகளின்
கீழே உள்ளவை ”கை” வரிசையாகும்.
அதுமட்டுமா? நோயாளிகள், முதியோரிடம்

தமிழ் மண்ணின் காளைகள், யானைகளின்
அன்புடன்
நாக.இளங்கோவன்
Saturday, August 14, 2010
குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! - பகுதி-2
http://nayanam.blogspot.com/2010/08/1.html
வா.செ.குழந்தைசாமி இப்படிச் சொல்கிறார் என்றால்,
உயிர்மெய் எழுத்துக்களில் 72 எழுத்துக்களை
இது எந்த எழுத்துக்களுக்கான புதிய வரிவடிவம்

தமிழ் மொழியில் ந, ன, ண என்று எதற்கு
Friday, August 13, 2010
குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! - பகுதி-1
தமிழ் எழுத்து வடிவங்களை எப்படியாவது மாற்றி
இன்றைய நிலையில் தமிழ் உலகில் உலவுகின்ற

இகர வரிசையில் செய்ய வேண்டிய வடிவ மாற்றத்தை எடுத்துரைக்கிறார் வா.செ.குழந்தைசாமி. மேலே படத்தில் இருப்பது போல வடிவ மாற்றம் செய்தால் குழந்தைகள் எளிதாகக் கல்வி கற்பர் என்கிறார். ஈகார வரிசைக்கும் இதே முறையில் வேறு ஒரு குறியை போட்டுவிடுகிறார் வா.செ.கு. கீழே காண்க.

என்ன இது? கி, கீ, நி, நீ எழுத்துக்களில் இருக்கும் துணைக் குறிகளை அப்படியே நகர்த்தி ஒரு மில்லி மீட்டர் தள்ளிப்போட்டுவிடுவது சீர்திருத்தமாகுமா? இதுதான் சீர்திருத்தம் என்றால் எவ்வளவோ செய்யலாமே,செய்து பெரியார் ஆகிவிடலாமே என்ற அவாவில் இன்றைக்குப் பலரும் இதனைத் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் வியப்பு ஏற்படுவது தவிர்க்க ஏலாதது.


(வா.செ.கு போன்று பலர் செய்ய முனையும் மாற்றங்கள், சிதைவுகளை வரும் கட்டுரைகளில் தொடரும்)
அன்புடன்
நாக.இளங்கோவன்
Tuesday, May 18, 2010
உயர்ந்த தமிழ்ப்பணி: புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்துக்குப் பாராட்டுக்கள்!
Sunday, May 16, 2010
வஞ்சின விளக்கேற்றிக் காத்திருப்பேன்!

கருப்பு நாளல்ல
ஆளுக்கொரு கையை
பின்னால் நின்று பிடித்துக் கொள்ள
சீனத்தின் சதிக்கண்கள்
சீரிளைமையில் குறிவைக்க
சிங்களத்தின் கத்தி பல
குத்திக் குத்திக் கிழிக்கின்றது அவளை
திராவிடத்தின்
உச்சிப் பொழுது உமிழ்கின்ற ஒளியில்.
காப்பியமாம் மணிமுடியும்
கலைந்து சரியச் சரிய
காலணிந்த சிலம்போடு
சங்கிலிகள் தளையத் தளைய
வளையாத வளையின்று
நெரிய நெரிய
நெற்றிச் சூடுமணி
எற்றி அலைய அலைய
சிந்தாமணிகள்
சிதறச் சிதற
சிந்துகின்ற குடர்க்கீழே
மேகலையோ மறைய மறைய
ஓலமிட்டுக் கதறுகிறாள்
ஓடிவரக் கூவுகிறாள்
நாதியில்லை நானிலத்தில்
பாரெங்கும் விண்ணெங்கும் பார்த்து நிற்கும்
ஊரெங்கும் பார்த்துப் பார்த்து அலறுகிறாள்
பேதையவள் தேம்பித் தேம்பி அழுகின்றாள்
சுற்றிச் சுற்றிச் சுழல்கின்றாள்
சுட்டுவிழி கொட்டக் கொட்டப்
பெற்றுவிட்ட பிள்ளைகளை
உற்று உற்றுப் பார்க்கின்றாள்.
ஓட்டைத் துலாவோடு ஊத்தை பேசும் பிள்ளைகள்
சாட்டையொன்றும் தருகின்ற தறிதலைப் பிள்ளைகள்
எந்தச் சாதிக்காரியோ ஏனிங்கு எனுங்கூட்டம்
எந்தன் மதம் இவளோவென்று எட்டிப் பார்க்க வருங்கூட்டம்
வெந்ததெல்லாம் தின்றலையும் வேடிக்கைப் பெருங்கூட்டம்
சிந்தையிலே மந்தி வளர் செந்தமிழர் இவரிங்கு
சந்தமொடு பேசிப் பேசி சாகசங்கள் செய்கின்றார்
பந்தமென படுபாவி இன்னுமவள் நினைக்கின்றாள்!
சொந்தப்பிள்ளை மந்தங்கண்டு அவளை மேலும்
சிந்தச் சிந்தக் குத்துதடி சிங்களமும்
கத்தி தீட்டித் தீட்டிக் கொடுக்குதடி காந்தியமும்
நித்தஞ் செத்துச் செத்துக் குறைகின்றாள் - மைந்தர்மேல்
பித்தம் மிகை வைத்துவிட்டப் பாவிமகள்;
பித்தர்களைப் பெற்றுவிட்டப் பெண்பாவி;
எத்தர்களை வார்த்ததனால் ஏங்கி ஏங்கி
நித்தமிவள் சாகின்றாள் பெயர் தமிழன்னை!
மொத்தமாகச் சாநாளும் ஆமாவோ? அம்மவோ
கருப்பு நாள் இல்லையடி சொல்வார்போல் - அந்த
இருண்ட காலமே மீண்டதடி! அண்டத்து
இருட்டையெல்லாம் திரட்டி வந்து சூழ்ந்ததடி!
இருள் சூழ்ந்ததடி! பேரிருள் சூழ்ந்ததடி!
------
கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்ட என் குலத்திற்குக் கண்ணீர் அஞ்சலிகள்
...நாக.இளங்கோவன்
Saturday, May 15, 2010
தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு
16-05-2010 ஞாயிறு
காலை 10 முதல் மாலை 6 மணிவரை
வணிக அவை (பாரதி பூங்கா எதிரில்), புதுச்சேரி
................................................
தொடக்க நிகழ்வு
காலை 10.00 மணி முதல் 11.30 மணிவரை
தலைமை"
திரு.இரா.சுகுமாரன் அவர்கள்
ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
வரவேற்பு:
திரு.ஏ.வெங்கடேஷ் அவர்கள்,
திரட்டி
மாநாட்டைத் தொடக்கி வைத்து உரை:
முதுமுனைவர் -செந்தமிழ் அந்தணர்- கழக இலக்கிய செம்மல்
திரு. இரா. இளங்குமரனார் அவர்கள்
நூல் வெளியீடு:
தமிழ் வரிவடிவ சீர்திருத்தமா? சீரழிப்பா?.
தொகுப்பு: புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள்
வெளியிடுபவர் :
பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்
முதல் படி பெறுபவர்
திரு கோ.சுகுமாரன்
செயலர், மக்கள் உரிமைக்கூட்டமைப்பு - பொதுக்குழு உறுப்பினர், உத்தமம்,
(INFITT).
முற்பகல் 11.30 மணி முதல் 1.30 மணிவரை
முதல் அமர்வு
தலைமை
பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள், புதுச்சேரி
முன்னிலை:
திரு ஓவியர் இரா.இராசராசன் அவர்கள்
திரு ம.இளங்கோ, அவர்கள்
திரு க. அருணபாரதி அவர்கள்,
மென்பொருள் வல்லுநர்,
கருத்துரை:
திரு.இராம.கி அவர்கள் பொறியாளர்
பொதுக்குழு உறுப்பினர், உத்தமம் INFITT), சென்னை
திரு மணி.மு.மணிவண்ணன் அவர்கள், பொறியாளர் சென்னை,
முனைவர் சொ.சங்கரபாண்டி அவர்கள்
தமிழ்மணம்- வலைப்பதிவுகளின் திரட்டி, அமெரிக்கா,
திரு விருபா.குமரேசன் அவர்கள்
விருபா.காம், சென்னை
---------------------------------------------
உணவு இடைவேளை: பகல் 1.30 மணிமுதல் 2.30 மணிவரை
மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
---------------------------------------------
பிற்பகல் அமர்வு
பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை
தலைமை:
திரு.தமிழ நம்பி அவர்கள்
விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு
முன்னிலை:
திரு.வீரமோகன் அவர்கள்
திரு. சீத்தா .பிரபாகரன் அவர்கள்,
திரு.ஓவியர்,பா.மார்கண்டன் அவர்கள்
கருத்துரை:
பேராசிரியர். செல்வக்குமார் அவர்கள்,
வாட்டலூ பல்கலைக்கழகம். கனடா,
திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா,
திரு. மா,பூங்குன்றன் அவர்கள்,
தென்மொழி, சென்னை.
திரு.சுப.நற்குணன் அவர்கள், மலேசியா,
திரு, சீனு,அரிமாப்பாண்டியன் அவர்கள்,
செயலர், தனித்தமிழ்க் கழகம, புதுச்சேரி,
திரு. க.தமிழமல்லன் அவர்கள்
தலைவர், தனித் தமிழ் இயக்கம் புதுச்சேரி,
திரு.ந.மு தமிழ்மணி அவர்கள்
அமைப்பாளர் , செந்தமிழர் இயக்கம்,புதுச்சேரி
திரு. கோ.தாமரைக்கோ அவர்கள்,
பாவலர் அரங்க. நடராசன் அவர்கள்
தமிழ்வளர்ச்சி நடவடிக்கைக்குழு, புதுச்சேரி
திரு. ப. திருநாவுக்கரசு அவர்கள்
தலைவர், நண்பர்கள் தோட்டம், புதுச்சேரி
திரு. எழில் . இளங்கோ அவர்கள்
தமிழியக்கம், விழுப்புரம்,
நிறைவு நிகழ்வு
மாநாட்டு நிறைவுரை:
பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்
நன்றியுரை:
திரு. இரா. மோகனகிருஷ்ணன் அவர்கள்
புதுவை.காம்
----------------------------------------
வெளிநாடுகளில் இருந்து உரையாற்றும் அறிஞர்களின் உரை இணைய வழியாக
நேரடியாக ஒளி/ஒலிபரப்பப்படும்.
------------------------------------------
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
20,4- வது தெரு விரிவாக்கம், அன்னைதெரசா நகர்
மூலக்குளம் புதுச்சேரி -605010.பேசி: +91 94431 05825
மின்னஞ்சல்: rajasuguma...@gmail.com, இணையம் : www.pudhuvaitamilbloggers.org
வலைப்பூ : www.puduvaibloggers. blogspot.com
அனைவரும் வருக,
--
Saturday, April 24, 2010
சீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்!
என்பதுவும் உண்டு.
9. சீ cī : (page 1471)
தூயதாக்குதல். (சூடா.) 5. cf. siv. To sharpen; கூர்மையாகச் சீவுதல்.
சீ&sup5; cī
, < šrī. n. 1. Lakṣmī; இலக்குமி. சீத னங்கோடு புயங்கை கொண்டார் (கந்தரந்.
====================================பார்க்க - செ.ப.பே.அ
இன்றும் பெருவலமாகப் புழக்கத்தில் உள்ளன.
என்ற சொல்லுக்கு நேரானவள், நேர்மையானவள், உறுதியானவள் என்றெல்லாம்
பொருள்களுண்டு. தமிழில் இருந்து வடக்கே சென்ற சொற்களில் இதுவும் ஒன்று
என்று அறிஞர் சொல்லுவர். இந்தியில் சீதா என்றால் நேராக, நேரான என்று
பொருள்.
தமிழ்ச் சொல். சீதம், சீம்பால், சீக்கை, சீசீ போன்ற சொற்களைத் தனியே எழுத
வேண்டும். )
விகுதி என்றும் சொல்லுவர்.
மலையமான், மருமான் போன்ற சொற்களில் பயிலும் மான் என்ற பின்னொட்டு
மிகத் தொன்மையானது.
மான் என்றால் மகன் என்ற பொருளும் உண்டு. (மலையாளிகள் மோன்,
மோனே என்று சொல்லுதல் நோக்கத்தக்கது)
98. வேண்மான் vēṇ-māṉ : (page 3825)
அந்துவஞ் செள்ளை (பதிற்றுப். 9-ஆம் பதி.).
வேண்மான் vēṇ-māṉ
, n. < வேள் + மான்². Male member of Vēḷir-tribe; வேளிர் குலத்து மகன்.
==========================================செ.ப.பே.அ
நன்மகன் என்ற அருமையான பொருள்களே கிடைக்கின்றன. இன்னும் பொருத்தமாகச்
சொல்லவேண்டுமானால் "திருமகன்" என்பது சரியான பொருளாக இருக்கும்
இல்லை. உயர்ந்த பணிகள் செய்யும் மதிப்பிற்குரிய கொளத்தூர் மணி அவர்கள்
இச்சொல்லை வடமொழி என்று சொல்வதற்குத் திராவிட பக்தி காரணமாகிவிடக் கூடாது. "சீ"
சிறீயாக விட்டு விட்டுப்
பின்னர் சீ என்று புழங்குதலை வடசொல் என்றால் யாருக்கு இழப்பு?
நாக.இளங்கோவன்
Wednesday, April 21, 2010
பாரதிதாசன் வாரம் - 2010
Thursday, March 18, 2010
எழுத்துச் சீர்திருத்த மறுப்பு: தமிழ்மணத்திற்குப் பாரட்டுகள்! வாழிய!
சீர்திருத்தம் என்று சொல்லும் நிலை தமிழ் அறிஞர்
உலகில் ஏற்பட்டிருப்பது ஆழ்ந்த கவலைக்குரிய விதயம்.
காலங் கருதி அதில் தனது நிலைப்பாட்டைத்
தெளிவுறச் சொல்லியிருக்கும் தமிழ்மணத்தார்க்கு
என் மனமார்ந்த பாராட்டுகள்.
தமிழ்மணம் நண்பர்களே,
எனக்கு "இரட்டை" மகிழ்ச்சி.
தமிழ்மணம் வாசிக்கத் தந்த சுட்டிகளில் விட்டுப்போன
ஒன்று. இதனையும் வாசியுங்கள்.
பேராசிரியர் செல்வாவின், எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு http://tamilveli.blogspot.com/2008/12/blog-post.html
அன்புடன்
நாக.இளங்கோவன்
Saturday, March 06, 2010
எழுத்துச் சீர்திருத்தம்: இரா.இளங்குமரனார் கடும் கண்டனம்
மேலும் படிக்க: http://thirutamil.blogspot.com/2010/03/blog-post_06.html
Thursday, March 04, 2010
எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-12/12
4.1: கணிநுட்பம் கைவந்தபிறகு, தனித்தன்மை நிறைந்த தமிழ் எழுத்துகளில் இன்றல்ல, இனி என்றுமே கை வைப்பது சரியல்ல. அது மொழியை மட்டுமல்லாது, குடியின் கட்டமைப்பையே கெடுத்துவிடும்.
4.2: இத்தாலியினின்று இங்கு வந்து, குறுகிய காலத்தில் தமிழ் கற்று அறிஞராகிய வீரமாமுனிவர் உரைத்த சீர்திருத்தத்தின் தாக்கம் 6-7% அளவே ஆதலால் பெரும் பாதிப்பு இல்லாது போனது.
4.3: 1978ல் பெரியார் செய்த சீர்திருத்தம் 4% அளவிற்கே தமிழ்ச்சொற்களில் மாற்றம் விளைத்தது. அந்த மாற்றத்தினால் கல்வி கற்பதில் முன்னேற்றம், குழந்தைகட்கு நேரம் மிச்சமாகிறது என்று யாரும் கூறியதில்லை. கணியால் எதையும் செய்ய முடியும் என்ற நிலை பெரியார் காலத்தில் இருந்திருந்தால் எழுத்துச் சீர்திருத்தம் வந்தேயிருக்காது. குழந்தைகளுக்கு, அறிவியலின் துணை கொண்டு, மேலான முறையில் தமிழ் கற்றுக் கொடுப்பதைக் குறிக்கோளாய்ப் பெரியார் கொண்டிருப்பார்.
4.4: முன்னே தமிழ் எழுத்துகளில் கைவைத்து விளைந்தனவெல்லாம் தமிழ்க்கல்விக்கும், பிள்ளைகளுக்கும், அறிவியலுக்கும் எந்த பங்களிப்பையும் செய்து விடவில்லை. தற்போது முன்வைக்கப் பட்டிருக்கும் சீர்திருத்தமும் அது போன்றதே. இந்த வடிவ மாற்றங்கள், அறிவியல் வகையாலோ, ஏரண வகையாலோ, குமுக வகையாலோ, குழந்தைக் கல்வி மேம்பாட்டு வகையாலோ, ஆசிரியர் மேம்பாட்டு வகையாலோ, மெய்யியல் வகையாலோ, கணி வகையாலோ, சிறிதும் ஆராய்ச்சி அடிப்படையற்றன. இந்தச் சீர்திருத்தத்தால், தமிழுக்கு இழப்பு வரும் வாய்ப்புகளே மிகுந்திருக்கின்றன.
4.5.: குழந்தைகளுக்கும், புலம்பெயர்ந்த தலைமுறைகளுக்கும் தமிழ்கற்பிக்க ஏதுவாக, ”கற்பித்தலில் பிழையா? கற்றுக் கொள்வதில் பிழையா?” என்று முறையான ஆய்வு நடத்தப்பட வேண்டும். கற்பித்தலில் உள்ள பிழைகளைப் புறந்தள்ளி, எழுத்து வடிவ மாற்றம் செய்யப் புகுவது, “பச்சைப் பிள்ளைகளின் மேல் பழிபோடும் செயலாகும்”. வள்ளுவனாரின் “நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்ற மொழியை உணர்ந்து குழந்தைகளின் தமிழ்க்கல்வியைச் சரிசெய்ய வேண்டும்.
4.6: தமிழீழம், சிங்கை, மலேசியா, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, செருமனி, பிரெஞ்சு, ஆத்திரேலியா போன்ற நாடுகளில் வாழ்வோரின் தமிழ்ப்படிப்பிற்கு தமிழக மொழியுலகம் வேராக இருப்பது உண்மையானால், தமிழகத்தை விட பன்மடங்கு நாகரிகத்திலும், அறிவியலிலும் உயர்ந்திருக்கும் அந்த நாடுகளின் தன்மைகளை உணர்ந்து அங்கு வாழும் தமிழர் எதிர்பார்க்கின்ற தரத்தின் அடிப்படையில், மொழி கற்றலையும் பயன்பாடும் திட்டமிட்டுச் செய்யப்படவேண்டுமே தவிர, மேலோட்டமான கருத்துகளை உலகம் முழுதும் புகுத்தி உலகத் தமிழரின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்து தமிழகம் பேரெடுத்துவிட முடியாது.
“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.”
ஆதாரங்கள்:
1) தமிழ் வரிவடிவச் சீரமைப்பு --- பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி http://infitt.org/ti2000/papers/papersA.pdf (2000ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப் பட்டது)
2) தமிழ் எழுத்துச் சீரமைப்பு --- பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி http://www.infitt.org/ti2003/papers/54_vckulan.pdf (2003ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப் பட்டது)
3) தமிழ் எழுத்து வடிவ மாற்றங்கள் --- முனைவர் கொடுமுடி சண்முகன் http://infitt.org/ti2000/papers/papersA.pdf (2000ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப் பட்டது)
4) Tholkaapiyam Reviewed --- முனைவர் கொடுமுடி சண்முகமன் http://www.infitt.org/ti2003/papers/53_kodumu.pdf (2003ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப் பட்டது)
5) உரோமன் எழுத்து ஒழுங்கு: (எழுத்துக்களின் உயரவேறுபாடு)
http://www.writingwizard.longcountdown.com/files/worksheet2006422446846.html
http://www.writingwizard.longcountdown.com/files/worksheet20064224421232.html)
6) அரபி எழுத்து ஒழுங்கு: (எழுத்துக்களின் உயரவேறுபாடு)
http://www.guidedways.com/lessons/unit1_writing.php
7) தொல்காப்பியமும் குறியேற்றங்களும் - முனைவர் இராம.கிருட்டிணன்
http://valavu.blogspot.com/2006/11/5.html
http://valavu.blogspot.com/2006/11/6.html
http://valavu.blogspot.com/2006/12/7.html
8) Digital South Asia Library: Tamil Lexicon -- University of Madras http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex
9) தமிழ் இணையப் பல்கலைக்கழகம்:
http://www.tamilvu.org/courses/diploma/d051/d0511/html/d0511665.htm
10) தமிழ் எழுத்துமுறை: தமிழ் விக்கிப்பீடியா: தமிழ் எழுத்துமுறை">http://ta.wikipedia.org/wiki/தமிழ் எழுத்துமுறை
11) மொழி கற்றல்: ஆங்கில விக்கிப்பீடியா http://en.wikipedia.org/wiki/Language_acquisition
12) நன்னூல் இலக்கணம்
13) தொல்காப்பியம்
14) தமிழ் எழுத்துகளின் நுண்மை விளக்கம் [The Tamil Alphabet: Its Mystic Aspect] -- பொறிஞர் பா.வே.மாணிக்க நாயகர், (கழக வெளியீடு)
15) அமெரிக்கக் கல்வித் துறை -- http://www.ed.gov/
16) தமிழக அரசின் 2007 ஆம் ஆண்டின் கல்வித் திட்ட அறிவுறுத்தல்
17) தமிழக அரசு பாட நூல் நிறுவனத்தின் ஒன்றாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல்: http://www.textbooksonline.tn.nic.in/Books/01/Tamil/Front%20Pages%20&%20Contents.pdf
பின்-இணைப்பு-1:
தமிழக அரசு 2007 ஆம் ஆண்டு பள்ளிகளுக்கு வழங்கிய பாடத் திட்டம், கல்வி நேரத் திட்டம் ஆகியவை உள்ளடக்கிய அறிவுறுத்து நூலின் ஒரு பக்கம்:

பாரதிதாசன் பல்கலையில் வழங்கிய இக்கட்டுரைத் தொடர் நிறைவடைகிறது.
=====================================================================
இக்கட்டுரை எழுத்துச் சீர்திருத்த மறுப்பின் முதல்பாகம்.
சின்னாட்களில் இரண்டாவது பாகம் வெளிவரும்.
படித்தோர்களுக்கும் பின்னூட்டு அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்
முந்தைய பகுதிகள்:
பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html
பகுதி-2:http://nayanam।blogspot.com/2010/02/blog-post.html
பகுதி-३: http://nayanam.blogspot.com/2010/02/3.html
பகுதி-4: http://nayanam.blogspot.com/2010/02/4.html
பகுதி-५: http://nayanam.blogspot.com/2010/02/5.html
பகுதி-६:http://nayanam.blogspot.com/2010/03/6_01.html
பகுதி-7: http://nayanam.blogspot.com/2010/03/7.html
பகுதி-8: http://nayanam.blogspot.com/2010/03/8.html
பகுதி-௯:http://nayanam.blogspot.com/2010/03/9.html
பகுதி-௧0: http://nayanam.blogspot.com/2010/03/1012.html
பகுதி-11: http://nayanam.blogspot.com/2010/03/1112.html
எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-11/12
தமிழ் மொழியின் திருவே கெட்டழியும் காட்சியைக் காணுக. ஊர், பேர், பண்பாட்டுத் தொன்மங்கள் என்ற அனைத்தும் சீரழிவதைக் காணுக! இது சீர்திருத்தமா? சீரழிப்பா?
(படத்தின் மேல் மூசியை வைத்துச் சொடுக்கினால் படம் பெரிதாகத் தெரியும்ம்)
(அடுத்த பகுதியொடு நிறைவுறும்)
முந்தைய பகுதிகள்:
பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html
பகுதி-2:http://nayanam।blogspot.com/2010/02/blog-போஸ்ட்.html
பகுதி-३: http://nayanam.blogspot.com/2010/02/3.html
பகுதி-4: http://nayanam.blogspot.com/2010/02/4.html
பகுதி-५: http://nayanam.blogspot.com/2010/02/5.html
பகுதி-६:http://nayanam.blogspot.com/2010/03/6_01.html
பகுதி-7: http://nayanam.blogspot.com/2010/03/7.html
பகுதி-8: http://nayanam.blogspot.com/2010/03/8.html
பகுதி-௯:http://nayanam.blogspot.com/2010/03/9.html
பகுதி-௧0: http://nayanam.blogspot.com/2010/03/1012.html
அன்புடன்
நாக.இளங்கோவன்
எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-10/12
1) 20 ஆம் நூற்றாண்டின் துவக்கில் தமிழரில் படிப்போர் தொகை 2 விழுக்காடு அளவிலேயே இருந்த நிலை, 21ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் ஏறத்தாழ 80 விழுக்காடாகியிருக்கிறது. தமிழ்மக்கள் தொகையும் பெருகியிருக்கிறது. ஆகவே மொழியின் பயன்பாடும் கடலெனப் பெருகி இருக்கிறது. அதில் 59 விழுக்காட்டுச் சொற்களை மாற்றினால் குழப்பம் பெருகி தமிழ் மொழியின் தரமும், வளர்ச்சியும் குன்றிப்போகும்.
2) இந்த மாற்றத்தைக் கற்பிக்கப் போகும் ஆசிரியர்களுக்குக் கற்பித்தலே மிகப் பெரிய இடையூறாகும். கொடுமுடியாரே, தனது நண்பரான கவிஞருக்கு இம்மாற்றம் பிடிபடவில்லை என்று எழுதியிருக்கிறார். பின்னை எங்ஙனம் ஆசிரியர்கள் தரமாக மாணாக்கருக்கு எடுத்துச் செல்வர்? அஃதன்றி, தற்போது 50 நாடுகளில் பரவியிருக்கும் தமிழர்களுக்கெல்லாம் தமிழ் கற்பிக்கும் ஆசிரியருக்கு இந்தளவு மாற்றத்தினை எங்ஙனம் கற்பிப்பது? தமிழ்நாட்டில் மட்டும் ஆசிரியருக்குக் கற்பித்தால் போதுமா? வளமான தமிழ்கற்பித்தலுக்கு வழிகுறைந்த வேளையிலே இம்மாற்றம் உலகளாவினால் தமிழ் குன்றிப்போகும் அன்றி பெருகாது.
3) “மாற்றம் என்பதே மாறாதது” என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால், எவ்வகைப் பலனையும் தர வாய்ப்பில்லாத இந்த எழுத்துவடிவ மாற்றத்தினால் பயனில்லை. மாற்றம் என்பது வலிந்து திணிப்பதாய் இருக்கக்கூடாது. அஃது தாய்மொழி வளர்ச்சியைத் தடுத்துவிடும்.
4) தாய்மொழி எழுத்துகளைப் பிற நாடுகளில், பிற மாநிலங்களில் மாற்றியிருக்கிறார்கள் என்ற காரணத்தால் நாமும் செய்யலாம் என்பது பிழையான பார்வை. சீன, யப்பானிய எழுத்துச் சீரமைப்புகளை இம்மாற்றத்தோடு ஒப்பிடவே முடியாது. சீனம் பெருநாடாக 100 கோடி மக்களோடு கட்டி எழுப்பப்பட்ட முறையும் காலமும் அங்கே நிகழ்ந்த குமுக மாற்றத்தோடு ஒட்டி எழுந்த எழுத்துச் சீரமைப்பை, அப்படியே தமிழிற் செய்யவேண்டிய தேவை இல்லவேயில்லை. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துக்கள் உள்ள சீன மொழியை, 247 எழுத்துகளைக் கொண்ட தமிழோடு பொருத்திப் பார்த்துச் செயற்படுவது தவறு. அதே நேரத்தில், சீனா செய்த முதற்சீரமைப்புக்குப் பின், கொஞ்ச காலம் கழிந்து, மீண்டும் இன்னொரு சீரமைப்பை சீர்மையாளர் முன்வைத்த போது சீன அரசு தயங்கியதை நினைவு கொள்ளவேண்டும். முதல் சீரமைப்பைத் தீவிரமாக நடைப்படுத்தி வெற்றிகண்ட சீன அரசு, இரண்டாம் சீரமைப்பை ஏற்காது, “மொழி விதயத்தில் எச்சரிக்கை” என்றே முடிவெடுத்தது. அதாவது மாற்றம் நாடும் பொதுவுடைமைச் சீனம் கூட, ”எடுத்ததையெல்லாம் மாற்ற ஓடவில்லை.” ”தேவையானால் மாற்றம். இல்லையேல் வலிந்து திணிக்க மாட்டோம்” என்பதை சீனா உணர்ந்திருந்தது.
5) ”உலகம், அறிவியல், கணி, குழந்தை” என்ற கோணங்களில் எழுத்து மாற்றத்தை தமிழிக்குள் வலிந்து ஒருசிலர் திணிப்பது பொருத்தமேயல்ல, அது மிகையாய்ச் செயற்படுதலாகும் (Over enthusiastic). பெரியாரைக் காட்டி வடிவமாற்றம் செய்யாமல், சீன அரசின் நிதானத்தைப் பின்பற்றி மாற்றத்தை நிறுத்திக் கொள்ள வேண்டுமேயன்றி, சீனாவை மேற்கோள்காட்டி இதை இன்னும் மேலெடுப்பது ஆபத்தாகும்.
6) மலையாள மொழி ஒரு தமிழிய மொழிதான். நமக்கும் அவர்களுக்கும் உறவு உள்ளது தான். ஆனாலும், அங்கு உள்ள எழுத்துக்கள் கிரந்த எழுத்துக்களின் வழிப்பட்டவை. கிரந்தத்தின் அடிப்படை பெருமி எழுத்தைச் சார்ந்ததாகும். அங்கு நடந்த மாற்றம் அப்படியே தமிழுக்கு கைக்கொள்ளத் தகுந்ததன்று. அதோடு அங்கு எழுத்துமாற்றம் வந்தது நமக்குப் பெரியார் சீர்திருத்தம் ஏற்பட்டது போல், கணிநுட்பம் இல்லாத காலத்தில் ஆகும். இப்பொழுதோ, எதையும் செய்யக் கூடிய கணிநுட்பம் பழகும் காலத்தில் மலையாளச் சீர்திருத்தத்தை முன்மாதிரியாய்க் கொள்ளுவது சரியல்ல. தேவையான பொழுது மலையாள, வடமொழிகள் பால் பிணக்குச் சேர்ப்பதும், பின்னர் அவற்றை முன்மாதிரியாய் தமிழுலகம் எடுத்துக் கொள்வதும் தமிழருக்குப் பெருமை சேர்ப்பனவல்ல.
7) இம்மாற்றத்தினால் தாக்கமுறுவது ”மொழியியல், தமிழில் இருக்கும் அறிவியல் நூல்கள், படிப்பு, செய்தி ஏடுகள், இதழ்கள்” ஆகிய பல்வேறு துறைகள் ஆகும்., தவிர, ஈழம், சிங்கை, மலேசியா போன்ற வெளிநாட்டுத் தமிழர்களும் அலைபட்டுப் போவார்கள். காட்டாக, சிங்கப்பூரின் நாணயத்தில் இடம்பெற்றிருக்கும் தமிழ்ச்சொல்/எழுத்தின் வடிவம் மாற்ற வேண்டியிருக்கும்..
8) அறிவியல், நுட்பியல் வளர்ச்சிக்கு இப்பொழுது முன்வைக்கும் எழுத்து வடிவ மாற்றம் உதவும் என்பது நகைப்புக்குரியதாகும். அறிவியலும், நுட்பியலும் தமிழில் சொல்லித்தரும் கல்வித் திட்டம் இன்று இல்லை. அரசு பள்ளிகளில் தமிழ் வழிக் கற்பவர்களின் நூல்களைத் தவிர அறிவியற் கல்லூரிகளிலோ, ஆய்வுப் படிப்புகளிலோ, நுட்பியல், பொறியியற் படிப்புகளிலோ, அவற்றைப் படித்துப் பணிசெய்யும் தொழிலகங்கள், ஆய்வுக் கூடங்கள், வங்கிகள், நிதித்துறைகள், சொவ்வறைக்கூடங்கள், கணிச்சாலைகள் என எவற்றிலுமோ, தமிழ் இன்று இல்லை. தமிழில் நிறுவன நடைமுறைகளை ஏற்படுத்துவதற்கான அடிப்படைக் கட்டமைப்பும் திட்டமும் கூட தமிழ்நாட்டில் இல்லை. இல்லாத ஒன்றை வளர்க்க எழுத்துவடிவ மாற்றம் தேவை என்பது, “ஆளே இல்லாத் தேனீர்க்கடையில் யாருக்கு தேனீர் ஆற்றுகிறோம்?” என்று ஒரு திரைப்படத்தில் வரும் நகையாடலையே நினைவூட்டுகிறது.
9) சிலர் இணைய வளர்ச்சி பெருகிவருகிறது, எனவே எழுத்துமாற்றம் தேவை என்பர். இதுவும் ஒரு வெற்றுவாதமாகும். இணையத்தை வளர்க்கும் நுட்பங்கள், முழுக்க முழுக்க பிற நாட்டினர் உருவாக்கியதாகும். தமிழ் மொழிக்கு என்று ஒருசிலர் உருவாக்கிய எழுத்துருக்கள், உள்ளீட்டு நிரல்கள், திரட்டிச் செயற்பாடுகள் தவிர, இணையத்தைச் செவ்வனே பயன்படுத்தும் சில படியாக்கச் சொவ்வறைகளைத் (application softwares) தவிர இணைய நுட்ப வளர்ச்சியில் யாரும் தமிழ்வழி செயலாற்றவில்லை. எழுத்துருவாக்கம், அதையொட்டிய சொவ்வறைகள், வெறும் 50 வெள்ளிச் செலவில் இணையத்தில் பல நூறுகள் கிடக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துவோர் எல்லாம் நம்மைப் போன்றோரே, வெறுமே வலைப் பக்கங்களையும், இணைய தளங்களையும் உருவாக்கிவிட்டு, அவற்றில் கதை, கவிதை, துணுக்குகள், செய்திகள், திரைப்படக் கருத்துக்கள் ஆகியவற்றை ஏற்றிவிடுவதால் தமிழிணையம் என்பது ”ஏதோவொரு மாபெரும் தமிழறிவியல்” என்று கருதுதலும், தமிழால் உருவாக்கப் பட்டது என்று சொல்லிக் கொள்ளுதலும் பிழையான கருத்தாக்கமாகும்.. எழுத்து மாற்றம் பெற்றால் இணையத்தில் தமிழ் எங்கோ போய்விடும் என்பது நாமே நம் காதில் பூச்சுற்றுவதாகும்।
(தொடரும்)
முந்தைய பகுதிகள்:
பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html
பகுதி-2:http://nayanam।blogspot.com/2010/02/blog-post.html
பகுதி-३: http://nayanam.blogspot.com/2010/02/3.html
பகுதி-4: http://nayanam.blogspot.com/2010/02/4.html
பகுதி-५: http://nayanam.blogspot.com/2010/02/5.html
பகுதி-६:http://nayanam.blogspot.com/2010/03/6_01.html
பகுதி-7: http://nayanam.blogspot.com/2010/03/7.html
பகுதி-8: http://nayanam.blogspot.com/2010/03/8.html
பகுதி-௯:http://nayanam.blogspot.com/2010/03/9.html
அன்புடன்
நாக.இளங்கோவன்