Pages

Tuesday, April 08, 2014

தமிழ் இணைய உலகில், தமிழ் பற்றிய உரையாடல்களில், யாராவது சிக்கலான கேள்விகளைக் கேட்டுவிட்டால், அவரை நீ என்ன முனைவரா என்று கேட்டுக் கேலி செய்வார்கள். இந்தக் கேலியை திரு.நா.கணேசன் அடிக்கடி செய்வார். என்னையே இரண்டு மூன்று முறைகள் இப்படிக் கேலி செய்திருக்கிறார். இம்முறை அதற்குப் பதில் சொன்ன பதிவுதான் இது.
அன்புடன்
நாக.இளங்கோவன்
=======================================================================

//

2014-04-08 20:02 GMT+05:30 N. Ganesan <naa.ganesan@gmail.com>:

............  இப்பொழுது தாங்கள் முனைவருக்கு எழுதிய ப்ராமி லிபித் தோற்றம் பற்றிய மறுமொழி கண்டேன். தாய்லாந்து மனைவியுடன்
அங்கே ஒரு வனஞ்சூழ்ந்த வீட்டில் கடைசிநாட்களில்

//

அன்னை அபிராமியைப் பார்த்து,
முனிவர் கேட்டார்!

"பிராமி.....பிராஅமீ .... எத்தனை பிராமியம்மா?" 
(இராகம் தெரியாதவர்கள் படித்துக் கொள்ளுங்கள் - தெரிந்தவர்கள் பாடிக்கொள்ளுங்கள்)

அன்னை சொன்னது:

பிராமியானது மூன்று. 

1) பிராமி
2) அசோகன் பிராமி
3) துபாசி பிராமி

இரண்டு புரியுது - இன்னொன்று? - இது முனிவர்:

"இது புரியாமல் உன் தமிழும் உன் தமிழ்நாடும் எங்கே விளங்கப்போகிறது?!" - என்பதாலும்,
எத்தனைமுறை சொன்னாலும் அது உனக்கும் தமிழ்நாட்டுக்கும் புரியப்போவதில்லை என்றாலும்
இதை ஒருமுறை சொல்லி வைக்கிறேன் என்று அன்னை சொன்னபோது முனிவருக்கு ஒன்றும்
புரியவில்லைதான்.

"துபாசியார் எல்லாம் பெரியவா - 
 அவாளை யாரும் எதும் செய்யமுடியாது .....
பொள்ளாச்சியைப் பார்க்கலையோ....."
(இங்கேயும் இராகம் புரிந்தால் போதும்...)

பொள்ளாச்சில என்ன?

ம்ம்ம்....அதுவும் தெரியாதா?

இப்பல்லாம், 
"நமோ தேநீர்க்கடை" போல,
பொள்ளாச்சியில எங்கே பார்த்தாலும் துபாசி பிராமிக்கடை"ன்னு
ஏகப்பட்ட கடைகள் திறந்திருக்காங்க.

நமோ தேநீர்க்கடை எல்லாம் சுண்டைக்காய் அளவென்றால் -
துபாசி பிராமிக்கடை ஒவ்வொன்றும் பரங்கிக்காய் அளவு இருக்கும்.

து.பி கடைகளெல்லாம் ஒன்னாச் சேர்ந்து - துபாசிகள் சங்கம்னு
ஒன்னு ஆரம்பிச்சிருக்கான்னா பார்த்துக்கோயேன்.

இவங்க பிழைப்பே, இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு,
எழுத்து, சொல், பேச்சு, வழமை எல்லாத்தையும் மாற்றி
புறத்தாருக்குப் போட்டுக் கொடுப்பதுதான். 

"புறத்தார்க்குப் புழுக்கைப்பணி செய்தவர்
 பூங்கழல்கள் சுமப்பாய் போற்றி" - என்று மந்திரித்து
ஆசிவழங்கியபின்னரே அந்தச் சங்கத்தில் சேரமுடியும்.

சரி இப்ப சங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது?

சங்கம் இப்ப தாய்லாந்தில் வேலை செய்து கொண்டிருக்கிறது.

தாய்லாந்து மன்னர், வெற்றிலைபாக்கு போடும்போது
கூடவே கிரந்தத்தையும் சேர்த்துப் போடுவாராம்!

அதற்குத் தோதாக, கிரந்தத்தை வெற்றிலை பாக்குடன் 
மடித்துத் தரும் திருப்பணியை சங்கம் செய்து கொண்டிருக்கிறது.

அட கிரந்தத்தை ஏன் வெற்றிலை பாக்குல...........?

மகனே, வெற்றிலை பாக்கைக் குதப்பும்போதும் தாய்லாந்து மன்னர்
தேவாரம் பாடுறார் என்று முன்னாலேயே சங்கம் அவிழ்த்து விட்டுச்சே அறியமாட்டாயா நீ?

( என்னவோ, அபிராமி அந்தாதியை எந்த மன்னருக்குக் காவு கொடுக்கப்போகிறார்களோ
என்று நானே பயந்து போய் கிடக்கேன்.. மனசுக்குள்ளேயே அன்னை அபிராமி சொல்லிக்கொண்டாலும்
கண்களில் ஒரு சோகம் இழையோடியதை முனிவர் கவனித்தாலும் அவருக்கு ஒன்றும் புரியவில்லைதான் )

வெற்றிலை பாக்கை குதப்பும்போது, அதுவும் மன்னர் குதப்பும்போது விதவிதமான
ஒலிகள் வருமே - அதுக்குப் போய் ஏன் கிரந்தத்தைப் பழி வாங்குறாங்க.

உண்மைதான் - "உலக ஒலிகள்" மொத்தமும், 
வாய்நிறைய வெற்றிலைபாக்கு போட்டுப் பாடினால், வரும்தான்.
ஆனாலும், இப்போது தமிழியையும் கிரந்தத்தையும் மட்டும் வெற்றிலை  பாக்கில் மடித்துத் தரும்
அருந்தமிழ்ப்பணியை மட்டும் சங்கம் மேற்கொண்டிருக்கிறது என்று அறிவாயாக!

அம்மா, தாயே, - மன்னர், அதுவும் புறநாட்டு மன்னர்,  
வெற்றிலை போட்டுக்கிட்டு தேவாரம் பாடறது அவ்வளவு தேவையா?
அதுக்கெல்லாம் தமிழை............

"மகனே - இதுதான் துபாசிகள் சங்கம்" - மேலும் மேலும் கேள்விகள் கேட்டு
என்னை பயமுறுத்தாதே. போய்த்தொலை.

போகும் முன் ஒன்று தெரிந்து கொள். "பொள்ளாச்சிக்கும் பெயர் மாற்றப் போறாங்க".

என்ன பேரம்மா?

அதை நீ தியானத்தில் கண்டு கொள்வாய்!

அம்மை சென்றதும்,  முனிவரின் ஆழ்ந்த தியானத்தில்,
பொள்ளாச்சி பேருந்து நிலையத்தின் பெயரில் "பொள்ளாச்சி" என்ற சொல்லை
யாரோ தார் கொண்டு அழிக்க, இன்னொருவர், "துபாசிப்பேட்டை" என்று
எழுதிக் கொண்டு இருந்தார்.
அன்புடன்
முனிவர்