Pages

Showing posts with label தமிழகம்-ஈழம். Show all posts
Showing posts with label தமிழகம்-ஈழம். Show all posts

Sunday, May 16, 2010

வஞ்சின விளக்கேற்றிக் காத்திருப்பேன்!

நெஞ்சில்
செஞ்சினம் சுமந்து

வஞ்சின
விளக்கேற்றிக்

காலத்தின் சுழற்சிக்குக்
காத்திருப்பேன்!

Friday, November 02, 2007

சுப தமிழ்ச்செல்வன் மறைவு - வேதனை

உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் அறியப்பட்ட
தமிழ்த் தலைவர்களில் சு.ப.தமிழ்ச்செல்வனும் ஒருவர்.
கிட்டு, பாலசிங்கம் போன்றோர்களின் மறைவு ஏற்படுத்திய
அதே வலியையும் சற்று அதிகமான அதிர்ச்சியையும்
உலகவாழ் தமிழ்மக்களுக்கு ஏற்படுத்துகிறது.அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இச்செய்தி உண்மையாயிருக்கக் கூடாதென்று இன்னமும் ஏங்குகிறேன்.

"அநுராதபுரத்து வெற்றிகளை
கண்ணிமைக்காது பார்த்தவர்களின்
கண்ணடி பட்டதாலா இவன் குண்டடி பட்டுப் போனான்?"

அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, December 15, 2006

பாலசிங்கம் அவர்களின் மறைவுக்கு இரங்கல்

பேராசிரியர் முனைவர் அண்டன் பாலசிங்கம் அவர்களின் மறைவு
உலகவாழ் தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்.

உலக அரங்கில் "தமிழ் " என்ற சொல்லுக்கு முகவரியாய்
வாழ்ந்தவர் பாலசிங்கம்.

இவரின் இழப்பு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாது
தமிழகவாழ் தமிழர்களுக்கும் உலக வாழ் தமிழர்களுக்கும்
வேதனையைத் தந்துள்ளது.

தற்காலத் தமிழ் உலக அரங்கில் இருக்கக் கூடிய
பெரும் தலைவர்களில் பாலசிங்கம் அவர்களும் ஒருவர்.

பாலா அண்ணனை இழந்து வாடும் ஈழத்தமிழர்களின்
துயரத்தில் பங்கு கொள்கிறேன்.

அன்னாரின் ஆன்மா சாந்தி பெறவும், தமிழர்களுக்காக
அவர் ஆற்றிய பெரும் பங்களிப்பு ஆல் போல் தழைத்து
தமிழ் மக்களைக் காத்திட வேண்டும் என்று இறைவனை
வேண்டுகிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, November 10, 2006

வாகரைப் படுகொலைகள்

தமிழ் ஈழத்தில், வாகரையில் மீண்டும் அப்பாவி அகதி மக்களின் மீது
சிங்களம் இனவெறித் தாக்குதலைத் தொடுத்து
கொத்துக் கொத்தாகக் கொலை செய்திருக்கிறது.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரையும்
அலற விட்டிருக்கிறார்கள் சிங்களவர்.

தமிழகமக்கள் வழக்கம் போல மவுனமாகவே.

Monday, August 14, 2006

நெஞ்சு கொதிக்கும் முல்லைப் படுகொலைகள்

முல்லைத்தீவிலே 61 முல்லைப் பூக்களை கருக்கியிருக்கிறான்
சிங்களக் காடையன்!

கேள்வி கேட்க நாதியில்லை உலகில்!

ஆறரைக் கோடி வாழும் தமிழகத்தில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சில முணுமுணுப்புகள் - அவ்வளவே!

கும்பகோண விபத்தில் கொத்துக் கொத்தாய் மாண்டு போயின
பள்ளிப் பிள்ளைகள். அதற்காகவே காத்துக் கிடந்தது போல
தமிழர்கள் பொங்கி எழுந்தார்கள் தங்களின் மீசைகளை
முறுக்கிக் கொண்டு!

முறுக்கிய மீசைகளைக் காட்டி, அங்கு சமையல் செய்த சமையல்காரம்மா,
பாடம் நடத்தத் தெரியாத அப்பாவி வாத்தியாரம்மாக்கள், சுடுகாட்டில்
பிணம் எரிக்கிற வெட்டியான் போன்ற வீரதீரர்களையெல்லாம்
பயமுறுத்தி துரத்திக் கொண்டு திரிந்து தங்கள் வீரத்தையும்
சோகத்தையும் காட்டிய அந்தக் கணங்களை யாரும் மறந்திருக்க முடியாது.

அந்தக் கோரச் சாவுகள் விபத்து!

ஆனால், இன்று முல்லைத்தீவில் தமிழ் மகளிரை, பள்ளிச் செல்வங்களை,
16 குண்டுகளை வானில் இருந்து எறிந்து கொன்றிருக்கிறது சிங்களம்.

தமிழ்ப் பெருங்குடிகளுக்கு இன்னும் உரைக்கவேயில்லை!
தங்கள் வீரத்தைக் கவட்டிக்குள் பாதியையும், தோட்டங்களில் பாதியையும்
புதைத்துக் கொண்டு பம்மாத்து செய்கிறார்கள்.

இராசீவ் காந்தி செத்து 15 தெவசங்கள் கொடுத்தாயிற்று!
இன்னுமா உங்களுக்கு ஒப்பாரி அடங்கவில்லை? இன்னுமா தீட்டு
கழியவில்லை? என்று கேட்கத்தான் தோன்றுகிறது.

பழங்கதையையேப் பேசிக் கொண்டிருந்தால், இன்னும் எத்தனை ஆயிரம்
தமிழர்களைப் பலி கொடுக்கப் போகிறது தமிழ் இனம்?

இந்தப் பிள்ளைகள் என்ன தீங்கு செய்தன?

கும்பகோத்துக்கு அழுது மூக்கு சிந்திய முத்தமிழர்களுக்கு,
மூக்கில் சளி வற்றி விட்டது போலும்!

எப்படா எவனாச்சும் சாவான் கவிதை எழுதி அரங்கேற்றிவிடலாம்
என்று திரியும் கவிஞர்களுக்கு, இப்பொழுது உரை கூட
வர மறுக்கின்றது போலும்!

தமிழையும் தமிழர்களையும் எதிர்ப்பவர்களை எதிர்த்துப் பேசி, எழுதி அவர்களைத்
திருத்த முடியாது. அவர்களை அப்படியே விட்டு விட்டு
கோழைத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்க் கூட்டம்
அதை விட்டு வெளியே வரவேண்டும்.

இராசீவ் காந்தியை காரணம் காட்டுபவர்கள் வேடதாரிகள்
என்பதை உணரவேண்டும். ஏனெனில், அவர்கள் இராசீவ் காந்தியின் மரணத்திற்கு
முன்னரும் தமிழர்களை எதிர்த்தே வந்தார்கள்.

இந்த முல்லைப் பூக்களின் படுகொலையினை மனசாட்சியுள்ள
ஒவ்வொரு வலைப்பதிவரும் கண்டிக்க முன்வரவேண்டும்.

61 முல்லைகளின் படுகொலைக்குக் காரணமான
ஒட்டு மொத்த சிங்களத்தையும் கண்டிக்கிறேன்.

இவர்கள் நாசமாய்ப் போகும் நாள் என்ன நாளோ?

நயனன் :-(