Pages

Tuesday, March 02, 2010

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-7

2.7. குழந்தைகளின் தமிழ் கற்றல் சரவலா?

அடுத்ததாய், “குழந்தைகள் கல்வி கற்க இற்றைத் தமிழி எழுத்துக்கள் சுமையாக உள்ளன” என்ற கருத்தும் பேரா. வா.செ.கு.வின் கட்டுரை, பிறர் கட்டுரைகள் வழியாக வெளியிடப்பட்டு வருகிறது.

மொழி கற்றல் (Language Acquisition) என்பதும், மொழி கற்பித்தல் (Language Teaching) என்பதும் ஒன்றிற்கொன்று இரு பக்கங்களாகும். ஆங்கில மொழி கற்பதில் ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டவருக்கு இருக்கும் சரவலையும், நம்மைப் போல்தான் ஆங்கிலேயர்களும் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மொழி கற்றல் பற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னர் எத்தனை வகையான தேற்றங்களையும் ஆராய்ச்சிகளையும் செய்து அலசுகிறார்கள் என்று அறிவது வியப்பூட்டுவதாய் இருக்கின்றது. பார்க்க: http://en.wikipedia.org/wiki/Language_acquisition

கொடிவழித் தேற்றம் (Nativist Theory), புள்ளிவிவரத் தேற்றம்(Empirical/Statistical Theory), திகைநிலைத் தேற்றம் (Emergentist Theory) போன்ற தேற்றங்கள் உருவாக்கப்பட்டு அவைகளுக்குள் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து அவை ஏற்படுத்துகின்றக் கட்டமைப்புக்கு உட்பட்டுத் தேவைகளைச் செய்வதில் ஆங்கிலேய மொழி/யறிஞர் உலகம் முன்னிற்கிறது।

2.7.1 கொடிவழித் தேற்றம் (Nativist Theory)

“கருவில் முளைத்து வளரும் போதே, தன் தாய்மொழி கற்கும் திறனை ஒரு குழந்தை இயல்பாய்ப் பெற்றிருக்கிறது. அதுவே குழந்தை வளரும் பொழுது, விரைந்து தாய்மொழி கற்க ஏதுவாகிறது.” என்பதே கொடிவழித் தேற்றமாகும். “Nativist theories hold that children are born with an innate propensity for language acquisition, and that this ability makes the task of learning a first language easier than it would otherwise be.”

கொடிவழித் தேற்றத்திற்கு ஆங்கில அறிஞர் நோம் சோம்சுகியின் பங்களிப்பும் அவரின் கீழ்க்கண்ட கருத்தும் முகன்மையானவை. Noam Chomsky originally theorized that children were born with a hard-wired language acquisition device (LAD) in their brains.[2] He later expanded this idea into that of Universal Grammar; a set of innate principles and adjustable parameters that are common to all human languages. According to Chomsky, the presence of Universal Grammar in the brains of children allow them to deduce the structure of their native languages from "mere exposure".

http://en।wikipedia.org/wiki/Language_acquisition#Nativist_theories

2.7.2 புள்ளிவிவரத் தேற்றம்(Empirical/Statistical Theory)

தாய்மொழி கற்றல் பற்றிய இன்னொரு தேற்றம் புள்ளிவிவரத் தேற்றமாகும். இது பட்டறிவு கொண்டு அறிவியல் முறையில் புள்ளிவிவரங்களை அடிப்படையாய் வைத்து, கற்றற் சரவலுக்கு முடிவு காணும் வகையாகும். நிறைய ஆங்கிலநாட்டு அறிஞர்கள் ஆங்கில மொழி கற்றலுக்காகப் பல்வேறு ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். கொடிவழித் தேற்றத்தினைத் தற்பெருமை என்று கூறி,, அதற்குச் சான்றில்லை என்று மறுப்பவர்களும் கூட, இந்தத் தேற்றத்தை ஏற்கிறார்கள். பல ஆங்கில அறிஞர்களின் ஆய்வுகள் இத்தேற்றின் அடிப்படையில் இருக்கின்றன. “Some language acquisition researchers, such as Elissa Newport, Richard Aslin, and Jenny Saffran, believe that language acquisition is based primarily on general learning mechanisms, namely statistical learning. The development of connectionist models that are able to successfully learn words and syntactical conventions supports the predictions of statistical learning theories of language acquisition, as do empirical studies of children's learning of words and syntax.”

“Empiricist theories of language acquisition include statistical learning theories of language acquisition, Relational Frame Theory, functionalist linguistics, usage-based language acquisition, social interactionism and others.”

http://en।wikipedia.org/wiki/Language_acquisition#Empiricist_theories

2.7.3 திகைநிலைத் தேற்றம்(Emergentist Theory)

வெளிப்புறச் சூழலில் வாழ்வோருக்கு ஏற்படும் மொழி, உறவு, மதிப்பு, தேவை போன்ற அழுத்தங்களால் ஆன திகைப்பு நிலையில், தாய்மொழி கற்றல் எப்படி இருக்க வேண்டும் என்று பலவழிகளில் ஆய்வது இத்தேற்றமாகும்। வெளிநாட்டில் வளரும் தலைமுறையினர் பற்றிய அக்கறை கொண்ட நமக்கு இந்தத் தேற்றங்கள் பயன் விளைக்கக்கூடும். Emergentist theories, such as MacWhinney's Competition Model, posit that language acquisition is a cognitive process that emerges from the interaction of biological pressures and the environment. According to these theories, neither nature nor nurture alone is sufficient to trigger language learning; both of these influences must work together in order to allow children to acquire a language.
http://en।wikipedia.org/wiki/Language_acquisition#Emergentist_theories

२.7.4 நன்னூலார் இலக்கணமும் தமிழ் கற்பித்தலும்

மொழி கற்றல் எவ்வளவு முகன்மையானதோ, அவ்வளவு முகன்மையானது அதனைக் கற்பிப்பதும் ஆகும்। ஆங்கிலேயரின் அறிவியல் அணுகுமுறையைக் கண்ணுற்ற நாம், மொழி கற்பித்தல் பற்றி நன்னூலாசிரியர் பவணந்தி முனிவர் கூறிய ”ஆசிரியர், ஆசிரியர் அல்லாதார்” இலக்கணங்களைக் கண்ணுறுவதும் பயனுள்ளதாகும். நல்லாசிரியருக்கு "உலகியல் அறிவொடு உயர்குணம் இணைய" என்றும் அல்லாருக்கு, "மொழிகுணம் இன்மையும் இழிகுண இயல்பும்" என்றசொற்களையும் நன்னூலார் சொல்லுவார்।

தமிழ் நாட்டிற் பிறந்த தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுள் பலரும் தமிழை நன்கு கற்காத நிலையில், தமிழைக் கற்பிக்கும் ஆசிரியராக இருக்கிறார்கள் என்பது உண்மை. ”தமிழ் சோறு போடுமா?” என்று கேள்வி எழும்பிக் கொண்டிருக்கும் காலத்தில், வேறுவழியின்றி தமிழ் கற்றோரே தமிழாசிரியராய் மாறிப்போன அவலம் கூடிவருங் காலத்தில், அதைக் கவனிக்காமல், தமிழ் எழுத்தைத் திருத்தினால் தமிழைக் கற்போர் கூடுவர் என்பது “ஊசியை விழுந்த இடத்தில் தேடாமல் ஒளியிருக்கும் இடத்தில் ஊசியைத் தேடுவது போல்” இருக்கிறது. தவிர, தமிழ் கற்பிக்கும் பள்ளிகள், தமிழால் கற்பிக்கும் பள்ளிகள் குறைந்து வருகின்றன என்பதும் உண்மை. தமிழ் பேசினால் தண்டம் உண்டு என்ற அச்சுறுத்தும் பள்ளிகளும் இருப்பதாய் அறிகிறோம். ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்னால் 13,14 ஆங்கில வழி மடிக்குழைப் பள்ளிகள் (matriculation schools) இருந்த தமிழகத்தில் இன்று 4000 மடிக்குழைப் பள்ளிகள் புற்றீசலாய் எழுந்திருக்கின்றன. தமிழைப் பேசினால் சீந்துவார் இல்லை என்ற நிலையைக் கொண்டு வந்துவிட்டு, தமிழெழுத்துச் சீர்திருத்தம் செய்து கொண்டிருக்கிறோம். கடைசியில் ”ஆடத் தெரியாமல் மேடை கோணல்” என்ற நிலைக்கு வரும் பெருஞ்சோகமான நிலை.

நன்னூலார் நவின்றதற்போல, “மொழிக்குணம் இல்லா” ஆசிரியரும், பள்ளிகளும் மாறாமல், எழுத்துகளில் என்ன மாற்றம் கொண்டு வந்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர்தான்; தமிழ் கற்றல் வளரப் போவதில்லை என்பதே திண்ணம். அதைப் போன்றே தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள், “உலகியல் அறிவொடு” என்று நன்னூலார் அறைவதற்கேற்ப, உலகில் வளரும் நுட்பியல், கலைகள் பற்றிய அறிவுடையாராய் ஆகுதலாலும் ஆக்கப்படுதலாலும் மட்டுமே தமிழ்கற்றலை வளர்க்க முடியும். அதை விடுத்து, தமிழ் எழுத்துகளை மாற்றுவதால் பலனிருக்காது.

(தொடரும்)
முந்தைய பகுதிகள்:
பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html
பகுதி-2:http://nayanam.blogspot.com/2010/02/blog-post.html
பகுதி-३: http://nayanam.blogspot.com/2010/02/3.html
பகுதி-4: http://nayanam.blogspot.com/2010/02/4.html
பகுதி-५: http://nayanam.blogspot.com/2010/02/5.html
பகுதி-६: http://nayanam.blogspot.com/2010/03/6_01.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

6 comments:

மணி மு. மணிவண்ணன் said...

ஆழமான அலசல்கள். தொடர்ந்து படித்து வருகிறேன். பாரதிதாசன் பல்கலைப் பேச்சைவிடக் கூடுதலான செய்திகள்,அலசல்கள், சிந்தனைகளைக் காண்பது மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்

Unknown said...

அன்புடையீர்,
அருமையான, தேவையான, எண்ணிப்பார்த்து, செயல்படவேண்டிய கருத்துக்களைத் தெரிவித்ததற்குப் பாராட்டு. நன்றி.
ராதாகிருஷ்ணன்
மார்ச்சு 2, 2010

சுப.நற்குணன்,மலேசியா. said...

உங்கள் ஆய்வு வியத்தகு வகையில் உள்ளது. அரிய செய்திகளை அள்ளித் தருகிறீர்கள்.

எ.சீர்மைக்காக முயலுபவர்கள் இந்த ஆய்வு உண்மைகளுக்கு விளக்கம் சொல்ல முன்வருவார்களா?

ஆக்கமான தருக்கங்கள் இன்னும் செப்பமான சீர்மைக்கு வித்திடலாம்.

எனவே, இப்போதைய இ.ஈ,உ,ஊ எ.சீர்மையாளர்கள் இதுகுறித்து பொதுக் கருத்தாடல் செய்வதற்கு முன்வர வேண்டும்.

அதை விடுத்து, ஒரு பக்கச் சார்பாக செயல்பட்டு தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எ.சீர்மை செய்து தமிழைச் சிதைக்கக் கூடாது.

உண்மையிலேயே மொழிநலனில் அக்கறையும் மொழி வளர்ச்சியில் உள்ளார்ந்த ஈடுபாடும் உடையவர்கள் அறிவார்ந்த முறையில் கருத்தாடுவதற்கு முன்வர வேண்டும்.

அந்தக் கருத்தாடலில் உலகம் பரவி இருக்கும் பலரும் பங்கேற்று கருத்துரைப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படல் வேண்டும்.

nayanan said...

//
மணி மு. மணிவண்ணன் said...
ஆழமான அலசல்கள். தொடர்ந்து படித்து வருகிறேன். பாரதிதாசன் பல்கலைப் பேச்சைவிடக் கூடுதலான செய்திகள்,அலசல்கள், சிந்தனைகளைக் காண்பது மிக்க மகிழ்ச்சி.
//

அன்பின் மணிவண்ணன்,

எழுத்துத் திருத்தங்களை மறுத்து நீங்கள் ஆற்றிவரும் பணிகள் சிறந்தன. பெட்னாவில் 2004ல் நீங்கள் ஆற்றிய உரையும் நேற்று ஒய்.எம்.சி.ஏவில் நீங்கள் ஆற்றிய உரையும் அனைவரும் அறிய வேண்டியவை. நீங்கள் நேற்று பேசியது போல பல்வேறு நாடுகளில் பரந்து வாழ்கின்ற தமிழ்க்குடி சிதறடிக்கப் படும்.இதனைத் தமிழ்க் குமுகம் உணரவில்லையானால் பேரழிவு உறுதி.

தங்கள் கனிவுக்கு நன்றி. என்னால் ஆன சிறு முயல்வே இக்கட்டுரை.

அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

// R. said...
அன்புடையீர்,
அருமையான, தேவையான, எண்ணிப்பார்த்து, செயல்படவேண்டிய கருத்துக்களைத் தெரிவித்ததற்குப் பாராட்டு. நன்றி.
//

அன்புடையீர்,

தங்கள் வருகையும் பாராட்டும்
ஊக்கம் அளித்தன. எழுத்து மாற்றங்களை நாம் அடியோடு புறக்கணித்து, தகை தாழாமல் இருப்போம் என்ற நம்பிக்கை எனக்குப்பிறக்கிறது.

அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

// சுப.நற்குணன் said...

எ.சீர்மைக்காக முயலுபவர்கள் இந்த ஆய்வு உண்மைகளுக்கு விளக்கம் சொல்ல முன்வருவார்களா?

//

//

எனவே, இப்போதைய இ.ஈ,உ,ஊ எ.சீர்மையாளர்கள் இதுகுறித்து பொதுக் கருத்தாடல் செய்வதற்கு முன்வர வேண்டும்.
//

அன்பின் நற்குணன் ஐயா,

தங்கள் கருத்தோடு முழுதும் ஒத்துப் போகிறேன். எ.சீ முன்வைப்பாளர்கள்
பொதுக் கரூத்தாடலுக்கு வரவேண்டும். கருத்தியல் பிழை நிறைந்திருப்பதால் அவர்களின் வழி தனி வழியாக இருக்கிறதோ என்று ஐயப்படவேண்டியிருக்கிறது.


அன்புடன்
நாக.இளங்கோவன்ன்