Pages

Monday, August 14, 2006

நெஞ்சு கொதிக்கும் முல்லைப் படுகொலைகள்

முல்லைத்தீவிலே 61 முல்லைப் பூக்களை கருக்கியிருக்கிறான்
சிங்களக் காடையன்!

கேள்வி கேட்க நாதியில்லை உலகில்!

ஆறரைக் கோடி வாழும் தமிழகத்தில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சில முணுமுணுப்புகள் - அவ்வளவே!

கும்பகோண விபத்தில் கொத்துக் கொத்தாய் மாண்டு போயின
பள்ளிப் பிள்ளைகள். அதற்காகவே காத்துக் கிடந்தது போல
தமிழர்கள் பொங்கி எழுந்தார்கள் தங்களின் மீசைகளை
முறுக்கிக் கொண்டு!

முறுக்கிய மீசைகளைக் காட்டி, அங்கு சமையல் செய்த சமையல்காரம்மா,
பாடம் நடத்தத் தெரியாத அப்பாவி வாத்தியாரம்மாக்கள், சுடுகாட்டில்
பிணம் எரிக்கிற வெட்டியான் போன்ற வீரதீரர்களையெல்லாம்
பயமுறுத்தி துரத்திக் கொண்டு திரிந்து தங்கள் வீரத்தையும்
சோகத்தையும் காட்டிய அந்தக் கணங்களை யாரும் மறந்திருக்க முடியாது.

அந்தக் கோரச் சாவுகள் விபத்து!

ஆனால், இன்று முல்லைத்தீவில் தமிழ் மகளிரை, பள்ளிச் செல்வங்களை,
16 குண்டுகளை வானில் இருந்து எறிந்து கொன்றிருக்கிறது சிங்களம்.

தமிழ்ப் பெருங்குடிகளுக்கு இன்னும் உரைக்கவேயில்லை!
தங்கள் வீரத்தைக் கவட்டிக்குள் பாதியையும், தோட்டங்களில் பாதியையும்
புதைத்துக் கொண்டு பம்மாத்து செய்கிறார்கள்.

இராசீவ் காந்தி செத்து 15 தெவசங்கள் கொடுத்தாயிற்று!
இன்னுமா உங்களுக்கு ஒப்பாரி அடங்கவில்லை? இன்னுமா தீட்டு
கழியவில்லை? என்று கேட்கத்தான் தோன்றுகிறது.

பழங்கதையையேப் பேசிக் கொண்டிருந்தால், இன்னும் எத்தனை ஆயிரம்
தமிழர்களைப் பலி கொடுக்கப் போகிறது தமிழ் இனம்?

இந்தப் பிள்ளைகள் என்ன தீங்கு செய்தன?

கும்பகோத்துக்கு அழுது மூக்கு சிந்திய முத்தமிழர்களுக்கு,
மூக்கில் சளி வற்றி விட்டது போலும்!

எப்படா எவனாச்சும் சாவான் கவிதை எழுதி அரங்கேற்றிவிடலாம்
என்று திரியும் கவிஞர்களுக்கு, இப்பொழுது உரை கூட
வர மறுக்கின்றது போலும்!

தமிழையும் தமிழர்களையும் எதிர்ப்பவர்களை எதிர்த்துப் பேசி, எழுதி அவர்களைத்
திருத்த முடியாது. அவர்களை அப்படியே விட்டு விட்டு
கோழைத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்க் கூட்டம்
அதை விட்டு வெளியே வரவேண்டும்.

இராசீவ் காந்தியை காரணம் காட்டுபவர்கள் வேடதாரிகள்
என்பதை உணரவேண்டும். ஏனெனில், அவர்கள் இராசீவ் காந்தியின் மரணத்திற்கு
முன்னரும் தமிழர்களை எதிர்த்தே வந்தார்கள்.

இந்த முல்லைப் பூக்களின் படுகொலையினை மனசாட்சியுள்ள
ஒவ்வொரு வலைப்பதிவரும் கண்டிக்க முன்வரவேண்டும்.

61 முல்லைகளின் படுகொலைக்குக் காரணமான
ஒட்டு மொத்த சிங்களத்தையும் கண்டிக்கிறேன்.

இவர்கள் நாசமாய்ப் போகும் நாள் என்ன நாளோ?

நயனன் :-(

10 comments:

Anonymous said...

Nenju porukkavillai. this is nothing but cruelty.

what indians and people in tamilnadu are going to do???....

pathetic...

- a tamizhan

Anonymous said...

you have raison.completely very told i had thing. thanks

Anonymous said...

you have raison.completely very told that i had think.thanks for the message.

தமிழன் said...

அவர்களுக்கு நமீதா இடுப்பையும் திரிசா மடிப்பையும் பாடவே நேரமில்லை நம்மை எப்படி பாடப்போகிறார்கள். கருணாநிதி பேரனின் அரசியல் முக்கியம் எனக் கருதி இதில் நடுனிலை வகிப்பார்

Narathar said...

தூங்கிக் கொண்டிருப்பதாக பாவனை செய்யும் தமிழர்களே எழுவீர், உங்கள் பொய்மைகளை உடைத்து உங்கள் தலைவர்களின் சுய நல இருப்புக்களை உடைத்து வெகுண்டு எழுவீர்.

கருகிய தமிழ்ச் செல்வங்கள் உங்கள் மனங்களை உலுக்க வில்லயா? இனியும் உங்கள் மவுனம் தேவையா? சிந்திபீர்கள் செயற்படுவீர்கள்,தெருவில் இறங்குங்கள் உங்கள் நன்பர்களுடன், எழுப்புங்கள் உங்கள் ஆட்சியாளர்களை.உலுக்குங்கள் கோட்டையை.

தனித்து இருந்து இணயத்தில் புலம்பியதும் ,கவலை தெருவித்ததும் போதும் , இன்றே செயற்படுங்கள்.

Anonymous said...

தற்போது 100 பிள்ளைகள் பலியானதாக செய்திகள்
தெரிவிக்கின்றன.

Aaruran said...

நன்றி நயனன், ஈழத்தமிழ்ச் சகோதரனின் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும்
அருமையான கவிதை, உங்களைப் போன்ற ஒரு சிலரால் தான் ஈழத்தமிழர்கள்
இன்றும் தமிழ்நாட்டை அன்புடன் அண்ணாந்து பார்க்கிறார்கள்.

அன்புடன்
ஆரூரன்
www.unarvukal.com

Liberated Tamil said...

This is nothing new Nayanam, when SL Navy killed 150 Tamil Nadu fishermen, the Tamil Nadu Tamils and Leaders couldn't do anything. You think they would dare to condemn this? They just don't care. The TN Tamils have been undermined in their own soil, as a result, there is no respect for mother Tamil or Tamil bretherns. This is the reality due to anti-Tamil inhabitant and anti-Tamil supporting act of India (Indian Central Government.

Anonymous said...

தட்டிக் கேட்பதோடு, தமிழகம் கட்டணம் செய்து, இந்திய அரசையும் செய்யுமாறும் கோர வேண்டும். மேலும் தமிழர் உயிரை மலிவாகக் கருதும் 'இந்து' போன்ற பார்பன ஏடுகளுக்கு எச்சரிக்கையாக தீர்மானங்கள் அமைய வேண்டும். நான் என் அலுவத்திலே காட்டியவுடன் இங்கு அமெரிக்கர்கள் வேதனை அடைகின்றனர். இது "genocide" வேறொன்றும் இல்லை. முல்லைத்தீவில் உள்ள செஞ்சோலையகம் பல ஆண்டுகளாக அனாதைக் குழந்தைகளின் காப்பகமாக இருந்து வருகின்றது. இதை கண்ட கண்காணிப்புக் குழுவின் தலவரும் முன்னார் சுவீடம் இராணவ அதிகாரியுமான உல்ப் ஹென்றிக்சன் பேட்டியில் "இது முழுக்க முழுக்க மனிதநேயத் தளம். இராணுவத்தளம் அல்ல!" என்றார்.

செம்மொழிக்காக பீத்தும் பிரமன்கள் தமிழர் உயிர், உடைமை என்றால் ஏன் ஒளிகின்றனர்.

இளம்பரிதி

nayanan said...

தமிழ் தமிழர் பால் அக்கறையும்
மனசாட்சியும் கொண்ட அன்பிற்குரியோரே
தங்கள் இடுகைகளுக்கும் கருத்துகளுக்கும்
நன்றி.

தமிழர் ஒற்றுமை கூடட்டும்.