தமிழ் ஈழத்தில், வாகரையில் மீண்டும் அப்பாவி அகதி மக்களின் மீது
சிங்களம் இனவெறித் தாக்குதலைத் தொடுத்து
கொத்துக் கொத்தாகக் கொலை செய்திருக்கிறது.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரையும்
அலற விட்டிருக்கிறார்கள் சிங்களவர்.
தமிழகமக்கள் வழக்கம் போல மவுனமாகவே.
6 comments:
http://www.abc.net.au/vod/news/
மிடையங்களின் மோனம், மக்களின் மோனமாகப் பெருகுகிறது. ஈழ மக்களின் பால் கவலை கொண்டுள்ளவர்கள் இதை விடாது எடுத்துச் சொல்ல வேண்டும்.
கலைஞர் இந்த நிகழ்வின் பின்னால் நடுவண் அரசிற்கு ஏதோ சொல்ல முயலுகிறார். நடுவண் அரசு கேட்காவிட்டால், தமிழகக் கட்சியினர் களம் இறங்குவார்களா?
இராம.கி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இன்று காலை கொழும்பில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.
வழமைபோலவே யாரும் சத்தம் போடப்போவதில்லை.
அன்பின் முனைவர் இராம.கி ஐயா,
வணக்கம்.
இந்த மோனத்தை எந்த வகையிற்
சேர்ப்பது என்றே புரியவில்லை.
ஆனால் ஒன்று உறுதியாகத் தெரிகிறது;
கலைஞரின் குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கினால், மீண்டும் தமிழகம் விழித்துக்
கொள்ளும் என்று தோன்றுகிறது.
சிங்கள அதிபர் இராசபக்சே இந்தியா
வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து
தி.மு.க மற்றும் சில கூட்டணி
கட்சிகள் போராட்டம் நடத்த வேண்டும்.
இன்றைய மாலையில் தலைமை அமைச்சர்
மன்மோகன்சிங் அவர்கள் பேசியிருப்பது
ஒரு மிக மெல்லிய மாற்றத்தைத் தோற்றுவிக்கிறது. இதனை வலுவாக்கவேண்டும்.
தமிழக ஈழ உறவுகள் வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு கட்சிகள் தயாராவதற்கு முன்னர்
வலுப்படுத்தப் படவேண்டும்.
இல்லாவிடில் அது வரலாற்றுப் பாவமாக
ஆகிவிடக்கூடும்.
தங்கள் இடுகைக்கு மிக்க நன்றி.
தங்களின் உடல்நலம் செழிக்க இறைவனை
வேண்டுகிறேன்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
அன்பிற்குரிய அநாநி அவர்களுக்கு,
தங்கள் கருத்துக்களுக்கும் இடுகைகளுக்கும்
நன்றி.
//
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இன்று காலை கொழும்பில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.
//
எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வன்முறையாளர்கள்
ஒழிக்கப் படவேண்டும் விரைவில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இன்று காலை கொழும்பில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.
வழமைபோலவே யாரும் சத்தம் போடப்போவதில்லை.
என்னத்த சொல்ல ராஜபக்ச இந்தியா வருகிறாராமே?...
Post a Comment