Pages

Wednesday, July 17, 2013

மீத்தேன் திட்டத்தை இடைநிறுத்திய தமிழக முதல்வருக்குப் பாராட்டுகள்

தஞ்சை நெற்களஞ்சியத்தை கரிக்களஞ்சியமாக்கும்
மீத்தேன் திட்டத்தை இடைநிறுத்திய தமிழக முதல்வருக்கு
மனமார்ந்த பாராட்டுகள்.

இது பற்றிய செய்தியை தினமணியிலும், அலைசெய்தியிலும்
படித்தேன். மகிழ்ச்சி.

http://newsalai.com/details/Jaya-suspends-methane-extraction-in-TN-in-favour-of-farmers.html#sthash.Iufn0kS4.h1gJilbJ.dpbs

http://dinamani.com/latest_news/2013/07/17/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F/article1688213.ece

ஏன் நெற்களஞ்சியம் கரிக்களஞ்சியம்  ஆகும்
என்பதறிய எனது இக்கட்டுரையைக் காண்க.
http://nayanam.blogspot.in/2013/04/2013.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

2 comments:

தஞ்சை கோ.கண்ணன் said...

தமிழக முதல்வருக்கு மனமார்ந்த பாராட்டுகள். ! கரிமேடாகும் சோழ வளநாடு ! இடைக்காலத்தடை !
தமிழ்நாட்டை கூறுபோட்டு விற்ற அரசியலுக்கு பட்டை நாமம். முழுத் தடையை சட்டப்படி அறிவிக்க வேண்டும். சிறிது காலம் சென்று மீண்டும் ஊழல் அரசியல் வாதி வந்தால் "அரசின் கொள்கை முடிவு " நீதி மன்றங்கள் தலையிட முடியாது ! என்று வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறும். தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும்.மக்கள் விழிப்புடன் இருத்தல் வேண்டும்.

nayanan said...

//முழுத் தடையை சட்டப்படி அறி விக்க வேண்டும். சிறிது காலம் சென்று மீண்டும் ஊழல் அரசியல் வாதி வந்தால் "அரசின் கொள்கை முடிவு " நீதி மன்றங்கள் தலையிட முடியாது ! என்று வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறும். தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும்.மக்கள் விழிப்புடன் இருத்தல் வேண்டும்.//

அன்பின் ஐயா,
உண்மையான வரிகள். தமிழக முதல்வர் மீத்தேன் திட்டம் பற்றி ஆய்வு செய்ய வல்லுநர்களைப் பணித்திருக்கிறார். அவர்கள் சரியாகப் பணி செய்தால் இத்திட்டம் தவறானது என்றே முடிவு வரும். ஓராண்டுக்கும் முன்னர் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக ஆவதைத் தடுக்குமாறு சட்டங்களை முதல்வர் கொண்டு வந்தார். அதைச் செய்ததற்கான காரணங்களுள் பலவும் இதற்கும் பொருந்தும். அதை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது மீத்தேன் திட்டம். எனவே முதல்வர் இதற்கும் சட்டவழி தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்ற உங்கள் கருத்து மிகவும் முக்கியமானது. முழுதாக ஏற்கிறேன்.