Pages

Friday, November 02, 2007

சுப தமிழ்ச்செல்வன் மறைவு - வேதனை

உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் அறியப்பட்ட
தமிழ்த் தலைவர்களில் சு.ப.தமிழ்ச்செல்வனும் ஒருவர்.
கிட்டு, பாலசிங்கம் போன்றோர்களின் மறைவு ஏற்படுத்திய
அதே வலியையும் சற்று அதிகமான அதிர்ச்சியையும்
உலகவாழ் தமிழ்மக்களுக்கு ஏற்படுத்துகிறது.அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இச்செய்தி உண்மையாயிருக்கக் கூடாதென்று இன்னமும் ஏங்குகிறேன்.

"அநுராதபுரத்து வெற்றிகளை
கண்ணிமைக்காது பார்த்தவர்களின்
கண்ணடி பட்டதாலா இவன் குண்டடி பட்டுப் போனான்?"

அன்புடன்
நாக.இளங்கோவன்

3 comments:

லக்கிலுக் said...

உலகத் தமிழர்களுக்கெல்லாம் இன்று தாங்கவொண்ணா துயரம் நிறைந்த நாள்! :-(

இராம.கி said...

தமிழ்ச்செல்வனின் இறப்பு ஒரு பேரிழப்பே. அன்னாருக்கு என் அஞ்சலிகள்.

கடந்த சில ஆண்டுகளாய், உட்பகையை உருவாக்கிப் போராளிகளை இரண்டு படுத்தி, உலக நாடுகளைத் தன்வயப் படுத்தி, சிங்கள அரசு தன் தடந்தகையில் (strategy) வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. போராளிகள் களத்தில் மேற்கொள்ளும் நடத்தங்களில் (tactics) மட்டுமே பெரிதும் வெற்றி கொள்ளுகிறார்கள். அண்டன் பாலசிங்கமும், சுப. தமிழ்ச்செல்வனும் இல்லாத நிலையில் தடந்தகை உருவாக்கத்தில் உள்ள வெற்றிடம் கூடியவிரைவில் சரி செய்யப் படவேண்டும். இந்த நேரத்தில் தமிழர் ஒன்றுபடுவது மிகவும் வேண்டியதொன்று.

அன்புடன்,
இராம.கி.

பாரதிய நவீன இளவரசன் said...

"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? - மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்..."

சுப. தமிழ்ச்செல்வன் மறைவு பற்றிய செய்தி மிகவும் துயரம் தருகிறது.

என் ஆழ்ந்த அஞ்சலிகள்!