Pages

Thursday, March 04, 2010

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-11/12

3.1 எழுத்து வடிவம் மாறினால் தமிழ் எப்படியிருக்கும்?

தமிழ் மொழியின் திருவே கெட்டழியும் காட்சியைக் காணுக. ஊர், பேர், பண்பாட்டுத் தொன்மங்கள் என்ற அனைத்தும் சீரழிவதைக் காணுக! இது சீர்திருத்தமா? சீரழிப்பா?
(படத்தின் மேல் மூசியை வைத்துச் சொடுக்கினால் படம் பெரிதாகத் தெரியும்ம்)




(அடுத்த பகுதியொடு நிறைவுறும்)
முந்தைய பகுதிகள்:

பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html

பகுதி-2:http://nayanam।blogspot.com/2010/02/blog-போஸ்ட்.html
பகுதி-३: http://nayanam.blogspot.com/2010/02/3.html

பகுதி-4: http://nayanam.blogspot.com/2010/02/4.html

பகுதி-५: http://nayanam.blogspot.com/2010/02/5.html

பகுதி-६:http://nayanam.blogspot.com/2010/03/6_01.html

பகுதி-7: http://nayanam.blogspot.com/2010/03/7.html

பகுதி-8: http://nayanam.blogspot.com/2010/03/8.html

பகுதி-௯:http://nayanam.blogspot.com/2010/03/9.html

பகுதி-௧0: http://nayanam.blogspot.com/2010/03/1012.html

அன்புடன்

நாக.இளங்கோவன்

4 comments:

  1. அன்புடையீர்,

    தமிழின் அழகு முக்கியமல்ல. எளிமைதான் முக்கியம்.
    அழகு இருந்தால், நவீன காலத்தில் தமிழ் தோற்று விடும்.
    நாம் பழகியதாலேயே பழைய தமிழ் நமக்கு அழகாகத் தெரிகிறது.
    தமிழில் கீபோர்டு வடிவமைக்கையில் எத்தனை கடினம் தெரியுமா?
    இனி ஆங்கிலக் கீபோர்டு போலவே எளிமையாக தமிழை தட்டச்சு செய்யலாம்.
    மற்ற நமது தென்னாட்டு மொழிகளை விட (தெலுங்கு,மலையாளம், கன்னடம்) பல அடி தூரம் பாய்ந்து சென்று, தமிழ் பன்னாட்டு மொழியாகி விடும்.
    இந்த மாற்றத்தை நாம் கட்டாயம் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
    இப்போதே மொரிசியஸ் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் வாழும் பல தமிழ் சந்ததியினர் தமிழை தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிப்பதை கடினம் எனக் கருதி, புறந்தள்ளுகின்றனர்.
    இந்த மாற்றம் ஆங்கிலத்துக்கு நிகரான தமிழுக்கு ஒரு எளிமையை அளிக்கும்.
    என் ஆலோசனை என்னவெனில் இன்னும் தமிழின் எழுத்தைக் குறைத்து, ஒலியன்களை (உச்சரிப்புகளை) அதிகப்படுத்தலாம்.
    இப்போது தமிழில் 30 ஒலியன்கள்தாம் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மற்ற திராவிட எழுத்துகளில் 42 ஒலியன்கள் புழக்கத்தில் உள்ளன. உலகளவில் 48 ஒலியன்கள் உள்ளன.
    தமிழுக்கும் விடுபட்ட ஒலியன்களை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் எழுத்துகளை இன்னும் குறைக்கலாம்.
    ஆங்கிலத்துக்கு நிகராக 30 எழுத்துகளில் தமிழை எழுத வைக்க முடியும். இதைப் பற்றி பின்னர் விரிவாக பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  2. // உயிர்நேயம் said...
    அன்புடையீர்,

    தமிழின் அழகு முக்கியமல்ல. எளிமைதான் முக்கியம்
    //

    அன்புடையீர்,

    எளிமையின் இலக்கணம் என்ன?
    மாற்றம் என்பது இவ்வளவு எளிமை என்று ஏதாவது ஆராய்ச்சி உண்டா?

    //தமிழில் கீபோர்டு வடிவமைக்கையில் எத்தனை கடினம் தெரியுமா?
    //

    எத்தனைக் கடினம் ஐயா சொல்லுங்கள். அறிய விழைகிறேன்.

    அது எப்படி தமிழ் விசைப்பலகை அமைப்பவர்களுக்கு மட்டும் கடினமாக இருக்கிறது?

    கோலம் போட்ட மாதிரி உள்ள எழுத்துக்களை கணிப்படுத்தும் சீனனுக்கோ, சப்பானியனுக்கோ, அரபியனுக்கோ இல்லாத வலி எப்படி தமிழனுக்கு வருகிறது ?


    அவ்வளவு ஏன் மலையாளியோ, இந்திக்காரருக்கெல்லாம் விசைப்பலகை ஆக்கும்போது கைவலிக்கவில்லையா?

    தமிழை விட நெளிவுகளும் சுழிவுகளும் இருக்கும் மொழிதானே மேற்சொன்னவையெல்லாம்?

    இப்படிச் சொல்பவர்கள் அழுமூஞ்சி கணிஞராகவோ, அரைகுறை கணிஞராகவோ அல்லது "யாருக்கோ விலைபோனவராகவோ" இருப்பதைத்தான் தமிழ்நாடு கண்டுவருகிறது.

    //இனி ஆங்கிலக் கீபோர்டு போலவே எளிமையாக தமிழை தட்டச்சு செய்யலாம்.
    //

    இதில் ஏதாவது ஏரணம் இருந்தால் கூட மகிழ்வேன். ஏங்க, ஒழுங்கா இருக்கிற கு-னாவை கூறாக்கிப் போட்டு விட்டு இப்ப பார் ஆங்கிலம் மாதிரினா அறிவுடையார் ஏற்கமாட்டார்.

    //இப்போதே மொரிசியஸ் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் வாழும் பல தமிழ் சந்ததியினர் தமிழை தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிப்பதை கடினம் எனக் கருதி, புறந்தள்ளுகின்றனர்.
    //

    நீங்க ஏன் மொரீசியசைச் சொல்கிறீர்கள். தமிழ் நாட்டிலேயே தமிழ் கல்வி கிடையாது.

    மொரீசியசில் இருப்பவங்களெல்லாம்
    உகர ஊகாரத்தை மாற்றிவிட்டால்
    திருப்பித் தமிழ் படிப்போம் என்று சொல்லியிருக்கிறார்களா? இது பற்றிய ஆய்வு யாரும் செய்தார்களா?

    அப்படி இருந்தால் அதனை எடுத்து வைக்கலாமே?

    அப்படி இல்லாமல் வெறும் கற்பனை வாதங்களைச் சொல்லிக் கொண்டிருந்தால் எபப்படி?

    ஆய்வு ஆராய்ச்சி இல்லாமல் வைக்கப்படும் வெற்றுக் கூற்றுகளை கணிஞரான நீங்கள் ஏற்றுக் கொள்வது வியப்பாக உள்ளது.

    //தமிழின் எழுத்தைக் குறைத்து, ஒலியன்களை (உச்சரிப்புகளை) அதிகப்படுத்தலாம்.
    இப்போது தமிழில் 30 ஒலியன்கள்தாம்
    //

    தமிழ் மொழியைக் கருவறுக்க நடக்கும் பல உத்திகளில் இதுவும் ஒன்று.

    ஆய்வும் ஆராய்ச்சியும் இன்றி
    பொய்யை மட்டும் துணைக்கொண்டு பேரழிவைச் செய்ய சிலர் எண்ணியிருக்கிறார்கள். அதனைப் படித்தவராக இருக்கும் உங்களைப் போன்றோரும் சிந்தனை செய்யாமல்
    இருப்பது வருந்தத் தக்கது.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  3. சுப.நற்குணன்Friday, March 05, 2010 8:07:00 PM

    //மற்ற நமது தென்னாட்டு மொழிகளை விட (தெலுங்கு,மலையா... //மற்ற நமது தென்னாட்டு மொழிகளை விட (தெலுங்கு,மலையாளம், கன்னடம்) பல அடி தூரம் பாய்ந்து சென்று, தமிழ் பன்னாட்டு மொழியாகி விடும்.//

    நல்ல ஊகிப்பு. ஊகங்கள் மெய்யாகும் என்பது கட்டாயமல்ல.

    நீங்கள் சொல்லும் இந்த நிலைமை இப்போதே நடப்பில் இருக்கிறதே. இனிமேல்தான் அப்படி ஒன்று நடக்கப்போகிறது; நடக்கும் என்று சொல்லுவது அபத்தமாக இல்லையா உங்களுக்கு?

    //மொரிசியஸ் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் வாழும் பல தமிழ் சந்ததியினர் தமிழை தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிப்பதை கடினம் எனக் கருதி, புறந்தள்ளுகின்றனர்.//

    தன்னுடைய குறைபாடுகளைத் தமிழின் குறைபாடாகப் பறைசாற்றுவதில் தமிழர்கள் வல்லவர் என்பதற்கு உங்கள் கூற்று நல்ல சான்று.

    தாய்மொழியைப் படிப்பதற்கு சாக்குப் போக்குகள் சொல்லும் தமிழர்கள் உலகில் இருக்கும் வரையில், என்ன மாற்றம், சீர்மை, எளிமை செய்தாலும் தமிழைப் படிக்க மாட்டார்கள்.

    மொழி உணர்வும், தாய்மொழிப் பற்றும் இருந்தால் போதும்.. செத்த மொழியைக் கூட உயிர்ப்பித்து படிக்கலாம் என்பதற்கு உலகில் பல சான்றுகள் உண்டு.

    //ஆங்கிலத்துக்கு நிகராக 30 எழுத்துகளில் தமிழை எழுத வைக்க முடியும்.//

    ஆங்கிலம் போல ஏன் தமிழை மாற்ற வேண்டும். பின்னர் புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதையாகிவிடும். அவ்வந்த மொழி அதனதன் மரபோடும் இயல்போடும் இயங்குவதே சிறப்பு.

    செப்பமான கட்டமைப்பு நிலையை எய்திவிட்ட தமிழில் இனி சீர்மை தேவையே இல்லை.


    வேறு மாற்றம் - சீர்மை - சீர்த்திருத்தம் கண்டிப்பாக தமிழைச் சிதைக்கும்; சின்னபின்னப்படுத்தும்; சாகடிக்கும்.

    ReplyDelete
  4. "அய்யா சாமீ,
    உங்கள் கூற்றைக் கண்டேன்.

    "எத்தனைக் கடினம் ஐயா சொல்லுங்கள். அறிய விழைகிறேன்.

    அது எப்படி தமிழ் விசைப்பலகை அமைப்பவர்களுக்கு மட்டும் கடினமாக இருக்கிறது?'

    நானும் பல எழுத்துருக்களை (ஃபான்ட்ஸ்) தமிழில் உருவாக்கியுள்ளேன்.
    ஆங்கில எழுத்துரு உருவாக்க குறைந்தது 60 நிமிடம் போதும்.
    தமிழ் எழுத்துரு உருவாக்க ஒருநாள் முழுவதும் (அதாவது ஒரு முழு அலுவலக நேரம்) தேவைப்படுகிறது.

    ReplyDelete