Pages

Sunday, April 20, 2008

பாவேந்தர் பாரதிதாசன் வாரம் - 2008

தமிழ்ப்பதிவுலகிற்கும், தமிழ்மணத்துக்கும் வணக்கம்.
தமிழ்மணத்தின் இந்த நட்சத்திர வாரம் பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாளான இன்று துவங்குவது, எனக்கு எழுதிட மகிழ்ச்சியை
இரட்டிப்பாக்கியது.

பாவேந்தரின் காலம்: 29-ஏப்ரல்-1891 முதல் 21-ஏப்ரல்-1964 வரை.

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின்
நினைவு கூர அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

இன்று அவருக்கு நான் சூடும் தமிழ் மாலை இங்கே!
படிக்க! பாடுக!

தமிழாரம் உமக்கே!

அலைமேவு கரைஓரம் அனலாக நிமிர்ந்தே
... அலமந்த தமிழோர்க்குச் சுடராக விரிந்தாய்
மலைபோலுன் தமிழேந்திப் பகைமோதிப் பலநாள்
... முகமற்றப் பழையோரின் முதலாக மலர்ந்தாய்
வலைசூழ வகைமாறிப் பிழைபோன குடியோர்
... வழிஒன்றி வளமாக வளமார்த்த வளமே
தலைநீள நிலம்வாழ தமிழ்வாழ உழைத்தீர்,
... தமிழ்ப்பாவேந் துனைப்போற்றுத் தமிழாரம் உமக்கே!

பிறபாடை குடைந்தாடி முறிவாகி நிலமும்
... பறிபோகப் பதைத்தோரின் பலமான பலமே,
அறநூலைப் புதைத்தாரின் அடையாளம் எழுதி
... அவக்காரம் அவைதீர விதையான விதையே,
மறமார்த்தக் குமுகாய மயக்காறு மடிய
... முடிவான முறையோதி முனையான முனையே,
திறலூற்றுத் திசைமேவி நெருப்பாக நிறைத்தீர்,
... தமிழ்ப்பாவேந் துனைப்போற்றுத் தமிழாரம் உமக்கே!

---நாக.இளங்கோவன்


அன்புடன்
நாக.இளங்கோவன்
21-ஏப்ரல்-2008

29 comments:

  1. எண்சீர் விருத்தங்கள் சிறப்பாக இசையொடு ஒன்றி இலங்குகின்றன.

    அமுதென நம்தமிழை அழைத்த பாவேந்தின் நினைநாளில் விண்மீனாய் தமிழ் வலைவானில் வலம்வர வாழ்த்துக்கள்!

    அன்புடன்,
    நா. கணேசன்
    http://nganesan.blogspot.com

    ReplyDelete
  2. நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  3. அன்பின் முனைவர் கணேசன்
    அவர்களே,

    தங்கள் கருத்துக்களும் வாழ்த்துக்களும்
    மகிழ்ச்சியூட்டின.

    மிக்க நன்றி.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  4. // SP.VR. SUBBIAH said...
    நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!
    //

    நன்றி திரு.சுப்பையா அவர்களே.
    தங்கள் வருகை மகிழ்ச்சி அளித்தது.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  5. திரு நாக.இளங்கோவன், வின்மீன் வார வாழ்த்துகள் !

    ReplyDelete
  6. நண்பர்கள் கோவியார், திகழ்மிளிர்
    இருவருக்கும் என் நன்றிகள்.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  7. நட்சத்திரக் கிழமை வாழ்த்துக்கள்.

    பாவேந்தர் குறிச்ச உங்களின் பாடலும் அருமை.

    ReplyDelete
  8. ஐயா,

    விண்மீனாக தமிழ்ப் பதிவுலகில் தாங்கள் என்றும் ஒளிவீச என் விழைவுகள்.

    ReplyDelete
  9. நட்சத்திர வார வாழ்த்துக்கள் இளகோவன்.

    கிவியன்

    ReplyDelete
  10. //தமிழ்ப்பாவேந் துனைப்போற்றுத் தமிழாரம் உமக்கே!//


    எம் இனிய
    நட்சத்திரவார வாழ்த்துகள்....!

    ReplyDelete
  11. நட்சத்திர வாழ்த்துகள்..

    ReplyDelete
  12. நட்சத்திர வாரத்தில், தேன் மதுரத் தமிழில், தெவிட்டா இன்பம் சுவைக்க, துடிப்போடு காத்துக் கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  13. அன்பின் நண்பர்கள்
    வெற்றி, பாலா, பாசமலர், இப்னு அம்துன், கிவியன், ஆயில்யன் தங்களனைவரின் கனிவும் மகிழ்ச்சியூட்டின. பாடல் குறித்த கருத்துக்கள் ஊக்கமளித்தன. மிக்க நன்றி.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  14. வணக்கம் நாக இளங்கோவன்

    இந்த வாரம் நிறைய உங்களிடம் எதிர் பார்க்கிறேன் சற்றே சுருக்கமாக ;-))

    வாழ்த்துகள் பல...

    மயிலாடுதுறை சிவா...

    ReplyDelete
  15. இனிய நயனன் அய்யா!

    வாழ்த்துகள்.

    எண்சீர் நலம்.

    பாடலில் லகர ழகர ளகர உச்சரிப்புகள் ஒலிப்பதிவால் குழம்பிக் கேட்பதுபோல் ஒரு தோற்றம்.

    அன்புடன்
    ஆசாத்

    ReplyDelete
  16. // மயிலாடுதுறை சிவா said...
    வணக்கம் நாக இளங்கோவன்

    இந்த வாரம் நிறைய உங்களிடம் எதிர் பார்க்கிறேன் சற்றே சுருக்கமாக ;-))
    //

    :-))
    வாங்க சிவா! எப்படியிருக்கீங்க.!
    நன்றி.
    நிச்சயம் முயற்சி செய்வேன்

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  17. // அபுல் கலாம் ஆசாத் said...
    பாடலில் லகர ழகர ளகர உச்சரிப்புகள் ஒலிப்பதிவால் குழம்பிக் கேட்பதுபோல் ஒரு தோற்றம்.
    /
    அன்பின் ஆசாத் ஐயா,
    வணக்கம்.

    கருத்துகளுக்கு மிக்க நன்றி.

    ஆமாம். உண்மை. உச்சரிப்பு சற்று
    குழப்பம்தான்.

    கடைசி நேர யோசனை. சற்று ஆர அமர்ந்து பழகிச் செய்ய முடியவில்லை.
    இருப்பினும் எப்படி இருந்தாலும் இன்று ஏற்றி விட வேண்டும் என்று
    முயன்று செய்தோம்.

    அடுத்த முறை மேலும் செம்மையுறும்.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  18. பாவேந்தரை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி.

    மு.இளங்கோவன்
    புதுச்சேரி

    ReplyDelete
  19. இசையறிந்த கவிஞன்
    தமிழிசையறிந்த கவிஞன்!
    உளமுணர்ந்த கவிதை
    அவருளமுணர்ந்த கவிதை!
    வளரட்டும் தமிழே அவர்வழி
    வளர்ந்திட்ட உம்மால்!

    ReplyDelete
  20. அன்பின் முனைவர் மு.இளங்கோவன்,
    தமிழன்,

    தங்களின் கனிவான சொற்கள் மகிழ்ச்சியளித்தன. நுமது வருகைக்கும்
    இடுகைக்கும் எனது நன்றிகள்.
    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  21. விண்மீன் வார வாழ்த்துகள் இளங்கோவன் ஐயா. பாவேந்தருக்குத் தகுந்த பாராட்டு.

    ReplyDelete
  22. அன்பின் இளங்கோ

    தமிழ் இணைய்ம் மற்றும் தமிழ் உலகம் மின்மடல் குழுக்களில் பாவேந்தர் வைய விரிவு அவை மூலமாக ஆண்டுதோறும் நீங்கள் முன்நின்று நடத்திய பாவேந்தர் வாரமும் அந்த் வாரத்தில் வந்து குவிந்த பாவேந்தர் குறித்த படைப்புகளும் சிந்தைகளும் மலரும் நினைவுகளாய் மீண்டும் மனதில்.

    தனித தமிழ் ஆர்வலர்களைப் பொறுத்தவரை என்றும் நீங்கள் நட்சத்திரம்தான். பொருத்தமாக இப்போது தமிழ் மணத்திலும்

    ReplyDelete
  23. // குமரன் (Kumaran) said...
    விண்மீன் வார வாழ்த்துகள்
    //

    அன்பின் நண்பர் குமரன்,
    வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்
    மிக்க நன்றி.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  24. // ஆசிப் மீரான் said...
    அன்பின் இளங்கோ

    தமிழ் இணைய்ம் மற்றும் தமிழ் உலகம் மின்மடல் குழுக்களில் பாவேந்தர் வைய விரிவு அவை மூலமாக ஆண்டுதோறும் நீங்கள் முன்நின்று நடத்திய பாவேந்தர் வாரமும் அந்த் வாரத்தில் வந்து குவிந்த பாவேந்தர் குறித்த படைப்புகளும் சிந்தைகளும் மலரும் நினைவுகளாய் மீண்டும் மனதில்.

    //

    அன்பின் ஆசிப்,
    வாங்க வாங்க.

    ஆமாம் அது ஒரு இனிமையான காலம். அடிக்கடி மலரும் அந்த நினைவுகள் என்னையும் கிறங்க அடிக்கும். அவ்விழாக்களில் ஒன்று அல்லது இரண்டனை நீங்கள் தலைமையேற்றுச் செய்ததும், நிறைய பங்களிப்புச் செய்ததும் நினைவில் இனிக்கிறது.

    இன்று நண்பர் ஆல்பர்ட் தமிழ் உலகில்
    நடத்தி வருகிறார்.

    வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  25. பாவேந்தர் பக்தருக்கு கவி அருவியாக வருகிறது.பாராட்டுக்கள்

    ReplyDelete
  26. //யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    பாவேந்தர் பக்தருக்கு கவி அருவியாக வருகிறது.பாராட்டுக்கள்
    //

    நன்றிங்க யோகன்.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  27. வணக்கம். தமிழினத்தை விடியச் செய்ய தம்முடைய புரட்சிப் பாக்கள் வழி போராடிய பாவேந்தர் தழல் வாழ்க! பாவேந்தர் கருத்தியல் வழியில் நடப்போம்.

    அன்புடன்,
    திருத்தமிழ்ப் பணியில்
    சுப.நற்குணன்
    மலேசியா

    ReplyDelete
  28. // சுப.நற்குணன் said...
    வணக்கம். தமிழினத்தை விடியச் செய்ய தம்முடைய புரட்சிப் பாக்கள் வழி போராடிய பாவேந்தர் தழல் வாழ்க! பாவேந்தர் கருத்தியல் வழியில் நடப்போம்.
    //

    தங்களின் கருத்து கண்டு மகிழ்ச்சி.
    மொழியும் இனமும் உணரப்படுவதே
    நாம் செய்யும் பணியாக இருக்கட்டும்.
    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete