Pages

Wednesday, February 20, 2008

சரோசாதேவியின் நடிப்பை.........

சிவாசிகணேசனின் நடிப்பை ஆசாரி சாதிக்கு
மட்டும் பிடிக்கும், ஊரில் உள்ள வேறு யாருக்கும்
பிடிக்காது (நல்ல ஊருப்பா அது :-) ),
ம.கோ.இரா வின் "பைப்பு" "பம்பு" வசனங்களில்
உள்ள ஆழ்ந்த பொருள்கள்,
அப்புறம் ஒரு மட்டமான படக்காட்சியை
மேற்கோள் காட்டி 'மர்லின் பிராண்டோவாக்கும்'
என்று கலாய்க்கும் சிந்தனைக்களச் சிற்பிகள்
அதே பாணியில் நடிகை சரோசாதேவியை
அங்கத விமர்சனம் செய்தால் எப்படி இருக்கும்
என்று எண்ணிப் பார்த்தேன். புல்லரிக்கவே
செய்கின்றது.

பழைய காலத்திலேயே இருந்தால் எப்படி?
தற்கால புதிய நமீதா, பழைய சகீலா போன்றோரை அங்கத
விமர்சனம் செய்யக்கூடாதா என்ற ஆதங்கமும்
நமக்கு இல்லாமல் இல்லை ;-)

அப்படிச் செய்தால், சிவாசி, ம.கோ.இரா
விமர்சனங்களுக்காக சுவரொட்டி அளவுக்குப்
போயிருக்கும் இதழ் போன்ற பொறுப்புள்ள
அனைத்து தமிழ்நாட்டுப் பண்பாட்டுத்
தளங்களும், பூரண கும்ப மரியாதையோடு அங்கத
விமர்சனங்களை போட்டி போட்டுக் கொண்டு
நிச்சயம் வெளியிட்டுத் தமிழ் சேவை செய்வார்கள்.

வரலாறு இதையெல்லாம் செய்யும் என்ற திடமான
நம்பிக்கையுடன்,

நாக.இளங்கோவன்

5 comments:

  1. நல்ல அலசல்..நம் வரலாரு இதையெல்லாம் செய்தாலும் செய்யும்..

    //பழைய காலத்திலேயே இருந்தால் எப்படி?
    தற்கால புதிய நமீதா, பழைய சகீலா போன்றோரை அங்கத
    விமர்சனம் செய்யக்கூடாதா என்ற ஆதங்கமும்
    நமக்கு இல்லாமல் இல்லை//

    பெண்களை விமர்சனம் செய்தால் பெண்ணியம் பேசிச் "சேவை" புரியும் மகளிர் மன்றங்களும் வந்து போர்க்கொடி தூக்க வேண்டியதுதான்..

    ReplyDelete
  2. மலர் அவர்களே,

    எழுத்து, பதிப்பு என்ற இரு தளங்களும்,
    போகிற போக்கும் அதன் சிந்தனைகளும்
    அவற்றின் நடை முறைகளும்
    ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவைகளாக இருக்கின்றன.

    பண்பாடு பற்றி நக்கலடிக்கும் எழுத்தாளர்களிடம் அதனைப் பற்றிய ஒரு தெளிவான சிந்தனை இருக்காது. அதே போல பண்பாட்டு இதழ்கள் என்று சொல்லிக் கொள்ளும் இதழ்களின் இணைய தளங்களைப் பார்த்தாலே அதன் பண்பாடு பல்லைக் காண்பிப்பதாக இருக்கும்.

    இதில் யார் பக்கம் பேச முடியும் :-)

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  3. //எழுத்து, பதிப்பு என்ற இரு தளங்களும்,போகிற போக்கும் அதன் சிந்தனைகளும் அவற்றின் நடை முறைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவைகளாக இருக்கின்றன.//

    உண்மைதான்..சொல்லும் கருத்துகளின் அங்கீகாரத்தைவிடப் படைப்பாளி தனக்குத் தேடும் அங்கீகாரமே காரணம்..

    ReplyDelete
  4. //பழைய காலத்திலேயே இருந்தால் எப்படி?
    தற்கால புதிய நமீதா, பழைய சகீலா போன்றோரை அங்கத
    விமர்சனம் செய்யக்கூடாதா என்ற ஆதங்கமும்
    நமக்கு இல்லாமல் இல்லை//

    இருக்கு. இருக்கு.:)
    அதுவும் அவர்கள் மாபெரும் சபையில் நடந்து கொள்ளும் விதங்களைப் பார்த்தால்...
    :((

    ReplyDelete
  5. மிகவும் அருமை

    ReplyDelete