"தமிழ் நேர்மையாளர் கூட்டமைப்பு" என்ற
தமிழ் மறுமலர்ச்சி அமைப்பு பழ.நெடுமாறனை
ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு உருவாகி தேர்தல்
களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இவ்வமைப்பு தமிழ்நாட்டில் மொத்தம் 45 தொகுதிகளில்
வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது.
ம.தி.மு.க தேர்தலில் நிற்காவிட்டாலும்
இவ்வமைப்பிற்குத் தன் ஆதரவை நல்கியிருக்கிறது.
சீமான், பெ.ம, கொளத்தூர் மணி, தியாகு,
கோவை இராம கிருட்டிணன் உள்ளிட்ட
தமிழ் நேர்மையாளர்கள் யாவரும் இவ்வமைப்பிற்குத்
தங்கள் ஆதரவைத் தந்துள்ளனர்.
கட்சி என்ற பெயரில்லாது, நல்ல வேட்பாளர்களையும்
ஆர்வலர்களையும் தேர்ந்தெடுத்து போட்டியிடுவோம்
என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டையும் தமிழரையும் கெடுத்துவரும் மூன்று
பெரிய கட்சிகளையும் மறுப்பதுதான் முதற்குறிக்கோள்
என்று அவர் தெரிவித்ததோடு, 7 பேர்கொண்ட முதற்கட்ட
வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தார்.
1) சீரங்கம் - கவிஞர் தாமரை
2) திருவாரூர் - சாகுல் அமீது
3) வில்லிவாக்கம - பழ.நெடுமாறன்
4) கொளத்தூர் - குமரேசன் (முத்துக்குமாரின் தந்தை)
5) வேலூர் - தென்னரசு
(அல்லது எங்கு ஞானசேகரன் நிற்கிறாரோ
அங்கு தென்னரசு நிற்பார்)
6) கோவை மேற்கு - கோவை இராமகிருட்டிணன்
(அல்லது எங்கு எசார்.பாலசுப்பிரமணியம்
நிற்கிறாரோ அங்கு).
7) கடையநல்லூர் - தமிழரசி
(முத்துக்குமாரின் தங்கை) (அல்லது எங்கு
பீட்டர் அல்போன்சு நிற்கிறாரோ அங்கு)
மீதி உள்ள 38 இடங்களுக்கும் நாளை மாலைக்குள்
வேட்பாளர்கள் அறிவிக்கப் படுவார்கள் என்றும்
தனியாகச் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம்
கேட்கவிருப்பதாகவும் தமிழ் நேர்மையாளர்
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும்,
தி.மு.கவின் பல பித்தலாட்டங்களுக்கு
ஆமாஞ்சாமி போடும் முதுபெரும் திராவிடத்துவா
தலைவர் க.அன்பழகனை எதிர்த்துப்
போட்டியிடும் வேட்பாளருமான
பழ.நெடுமாறன் அறிவித்தார்.
சாதிக்கட்சிகளின் ஒப்புக்குச் சப்பாணி
போன்ற ஏமாற்றுத் தமிழாதரவை
இனி நம்பப் போவதில்லை என்றும்
அறிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க:
"தோல்வியை நக்கிச் சுகம் காணும் தமிழ் உணர்வாளர்கள்!"
http://nayanam.blogspot.com/2011/03/blog-post_22.html
அன்புடன்
நாக.இளங்கோவன்
பி.கு: நேற்று கண்ட கனவில் நான் படித்த
செய்தித்தாளில் இந்தச் செய்தி இடம்பெற்றிருக்கிறது.
http://waste-dreams.of.tamils.null/index.html
பல ஆயிரம் பேரின் கனவுதான் இது!
வெறும் வெற்றுக் கனவுதான்.
ஆனால் சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே,
இவர்கள் ஏன் தேர்தலில் நிற்கக் கூடாது?
ம.தி.மு.க, நாம் தமிழர் இரண்டு கட்சிகள்
மட்டுமே குறைந்தது 5000-1000 வாக்குகளைத்
திரட்ட முடியும். தேர்ந்தெடுக்கப் பட்ட
தொகுதிகளில் இதைவிட அதிகமாகப் பெறமுடியும்.
தொகுதி சீரமைப்பில் ஒரு நல்ல மாற்றம் தெரிகிறது.
ஒன்னரை இலட்சத்தில் இருந்து இரண்டு
இலட்சம் வாக்குகள் கொண்ட தொகுதிகள்தான்
மிகப் பெரும்பான்மை.
களத்தில் புகுந்தார்கள் என்றால் அனைவரையும்
கதறடித்துவிடுவார்கள். ஆனால் அவர்கள்
சக்தியை அவர்கள் உணர மறுக்கிறார்கள்.
கதைக்கு உதவா சிந்தனையற்ற வட்டங்களைப் போட்டு
அதில் நின்று கொன்டிருக்கிறார்கள்.
அறிந்தோர் பெரியோர் அறிவுறுத்துங்கள் இவர்களுக்கு.
பொன்னி பொங்கல் மலர் கட்டுரைகள்
-
பொன்னி பொங்கல் மலர் 1953
பொன்னி என்னும் இலக்கிய ஏடு புதுக்கோட்டையிலிருந்து 1947 இல் வெளிவந்தது. இந்த
இதழ் பின்னர் சென்னையிலிருந்தும் வெளிவந்தது. புதுவையில...
3 days ago
11 comments:
நீங்கள் சம்பந்தபட்டவர்களுக்கு மின்னஞ்சலில் இந்த கட்டுரையை அனுப்பி வையுங்கள்.. நான் இதை நிஜம் என்றே முதலில நம்பிவிட்டேன். ஊதிவைப்போம் உரைத்தால் நன்று.
இந்த மூன்றாவது அணி நீங்கள் சொல்வது போல் உருவானால் மகிழ்ச்சியே!வேண்டாம் தேர்தல் சாக்கடை என்று சொல்வோர் உண்மையில் தங்கள் "பலம்" அறியாமல் தான் இருக்கிறார்கள்! கவிஞர் தாமரை சீரங்கத்தில் போட்டியிட்டால்?ஆகா, நினைக்கவே நெஞ்சு குளிர்கிறதே!!!!!!!!!!!!!!!
Thamari is a very fine person & she had a symbiotic association with tamil welfare concerns. she should win in her constituency
கனவு நனவாகட்டும்!
THIS WILL HELP DMK & CONGRESS TO WIN
//tsekar said...
THIS WILL HELP DMK & CONGRESS TO WIN
//
Both the alliances are equally useless. So why should any one believe aligning with one of them to defeat other? Instead, defeat them contesting invidually. A careful planning would give amazing results.
Regards
/THIS WILL HELP DMK & CONGRESS TO WIN /
Instead trying we are predicting this will happen...
that will happen...
As you said let them win but at least selected 10-15 seats if we contesting in the name of tamil & tamilar will give hold to real tamils.
Above all due eelam reason now easy to unite the people and we can improve this force to achive our final goal.
This climate may not get in future.
வெற்றியோ தோல்வியோ தமிழ் உணர்வாளர்கள் ஒன்று கூடுவது உவகைதருகின்றது. இந்த ஆரம்பம் தமிழரிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயமி்ல்லை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
vaazhthuvom.
http://kaatruveli-ithazh.blogspot.com/
Dear sir
Why do stop writing
Please start write and share your thought.
// Anonymous said...
Please start write and share your thought.
//
:-) Sure sir. will write.
Regards
Post a Comment