Pages

Thursday, February 03, 2011

திராவிட மாயை: அண்ணாவின் திராவிட நாடும் சுடுகாடும்!

காங்கிரசுக்குப் பல்லக்குத் தூக்குவதென்றால்
அண்ணாவின் பாசறைகளுக்குப் பேரின்பம்.
1972 தேர்தலில் இருந்து நேரு குடும்பத்தைப்
பொன்னாலும், தந்தத்தாலும், நவமணிகளாலும்
புதிது புதிதாகச் செய்யப்பட்டப் பல்லக்குகளில்
தூக்கிச் சுமப்பதிலே, பரவச நிலை என்பார்களே
அந்த நிலையில் திராவிட முன்னேற்றங்கள்
திளைக்கும். இப்போதும் அதே பக்திப் பரவசம்.
அதே போல பூனை, எலி, சுண்டைப்பழம் போன்ற
எல்லாக் கட்சிகளுக்கும் பரவசம்.

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தது போல
"அடைந்தால் திராவிட நாடு இல்லாவிட்டால் சுடுகாடு"
என்று தமிழ்நாட்டில் பேச்சுச் சூறாவளியைக் கிளப்பி
வைத்தார் பேரறிஞர் அண்ணா. எல்லாரும் அண்ணா
என்னவோ செய்யப் போகிறார் என்று அண்ணாந்து
பார்த்துக் கொண்டிருக்கையில், பிரிவினைவாதத்
தடைச் சட்டம் கொண்டுவந்து நேரு போட்ட
ஒரு தும்மலிற்கு அஞ்சி அண்ணா தோளில்
கிடந்த துண்டைத் தூக்கிப் போடுவதுபோல
திராவிட நாடு என்ற பேச்சைத் தூக்கிப் போட்டார்"
என்று சொல்வார்கள்.

அதற்கு விளக்கம் சொல்லமுடியாமல்
வழ வழ கொழ கொழ என்று பூசி மழுப்பினர்
அண்ணாவும் அவரின் கழகமும்.
"தம்பி.... பாசறை இருந்தால்தானே தொடர்ந்து நாம்
போர்க்களம் காண முடியும். பிரிவினைவாதத் தடைச்
சட்டத்தின் கீழ் கட்சியை முடக்கி விட்டால் நமது
பாசறையல்லவா இல்லாமல் போய்விடும். அதனால்
நமக்குப் பாசறை முக்கியம் என்பதால் திராவிட நாட்டுக்
கோரிக்கையை கைவிடுகிறோம்" என்று அண்ணா தன்
கைப்பட எழுதி வைத்திருக்கிறார்.

அப்பொழுது கூட, சரி அண்ணா ஏதோ பெரிதாகச்
சொல்கிறார் என்று அண்ணாந்து அண்ணாந்து
பார்த்து சமாளித்துக் கொண்டனர் தமிழ்நாட்டு மக்கள்.

பாசறையில் இருந்து போர்க்களம் காண புறப்பட்ட
திராவிட முன்னேற்றங்கள் பற்பல.

ஒரு பாசறை தமிழ்நாட்டில் உள்ள சுடுகாடுகள்
முழுவதிற்கும் சென்று, அதில் எல்லோரும் சுகமாக
எரிவதற்காக, கூரை போடப்போகிறோம் என்று
சொல்லி, சுடுகாடுகள் எல்லாவற்றிலும் வெற்றி கண்டது.

"அண்ணா, இதோ பார்! உன் தம்பிகள் நாங்கள்
காவிரி, முல்லை, பாலாறைத் தடுத்து விட்டாலும்
கண்டு கொள்வதில்லை. ஆறுகளை வற்ற விட்டாலும்
மணலை அள்ளி அண்டை மாநிலம் முழுதும் அனுப்பி
அங்கே கட்டங்கள் வீடுகள் கட்ட வைத்துவிட்டோம்.
இன்றைக்குத் திராவிட நாடு முழுவதையும்
ஒரே மண்ணால் கட்டி இருக்கிறோம்.
உனது திராவிடநாட்டுக் கனவிற்கு எமது காணிக்கை"
என்று துண்டு நனைய ஆனந்தக் கண்ணீர்
விடுகிறது ஒரு பாசறை.

இந்தப்பாசறைக்கு சுடுகாட்டுப் பாசறை மேல்
பொறாமை. சுடுகாட்டுப் பெருமை
அந்தப் பாசறைக்குப் போய்விடக் கூடாது
என்று "சுடுகாடு கொண்டான்" என்ற பட்டம் கொடுத்து
சுடுகாட்டு நாயகர் செல்வகணபதியையும்
தனது பாசறைக்கே கொண்டு வந்துவிட்டது.

திராவிட நாட்டுக் கோரிக்கைக்கு எதிரான
பிரிவினைவாதச் சட்டத்தில் இருந்து
காப்பாற்றியதாக சொல்லி,
அண்ணா விட்டு விட்டுப் போன பாசறை
அண்ணா சொன்ன ஒவ்வொரு சொல்லையும்
நிறைவேற்றியிருக்கிறது.

அண்ணா கூட, திராவிட நாடு அல்லது
சுடுகாடு என்றுதான் சொன்னார்.

அவரின் பாசறையோ இரண்டையும்
வென்றுவிட்டது அல்லவா?

அண்ணாவின் பேச்சைத் தவறாகப்
புரிந்து கொண்டு தத்தளித்த
தமிழகமும் இன்றைக்குத்
தெளிந்துவிட்டது அல்லவா?

இன்னும் என்னென்ன குறிப்புகளை
அண்ணா விட்டுப் போயிருக்கிறாரோ?
ஆரறிவார்!

அன்புடன்
நாக.இளங்கோவன்

3 comments:

Anonymous said...

1972-ல் என்ன தேர்தல் நடந்தது?
ஏதாவது எழுதவேண்டும் என்று எழுதலாமா?

தடித்த வார்த்தைகள்....இதைவிட தடித்த வார்த்தைகளை நான்கூட எழுதலாம்.

காங்கிரசு கட்சியில்தான் இளங்கோவன் என்ற காமடி ஆள் இருப்பார்..இங்கேயுமா?

nayanan said...

அநாநி அவர்களே,

//1972-ல் என்ன தேர்தல் நடந்தது?
//

1971 என்று இருந்திருக்க வேண்டும்.
அதி முக்கியமான பிழையை சுட்டிக்காட்டியதற்குப் பாராட்டுக்கள்.

//
ஏதாவது எழுதவேண்டும் என்று எழுதலாமா?

தடித்த வார்த்தைகள்....
//

ஏதோ வந்திங்க. ஏதாவது எழுத வேண்டும் என்று எழுதலாமா? என்று கேட்கிறீர்கள். கூடவே தடித்த வார்த்தை தடித்த வார்த்தை என்று
கூவுகிறீர்கள். எது தடித்த வார்த்தை?
இன்னது தடித்த வார்த்தை என்று
சொல்லுங்களேன்.

//
இதைவிட தடித்த வார்த்தைகளை நான்கூட எழுதலாம்.
//

எழுதுங்கள்.
நாடாவை அவிழ்த்து பாவாடைய....என்றெல்லாம் பேசியவர்கள்தானே நீங்கள். உங்களுக்கு தடித்த வார்த்தைகள் ஒரு கைவந்தகலையாயிற்றே....

இன்றைக்குக் கூட
"தரிசெல்லாம் தெரசா அல்ல" என்ற
பண்பாட்டு வித்தகம் செய்கின்றவர்கள்தானே நீங்கள்.

உங்களுக்குத் தெரியாத தடித்த வார்த்தைகளா!!!
வெளுத்து வாங்குங்கள்.

//காங்கிரசு கட்சியில்தான் இளங்கோவன் என்ற காமடி ஆள் இருப்பார்..இங்கேயுமா?
//

தமிழ் இனத்தின் பகைவரான அந்த
இளங்கோவனுக்கு இருக்கும் தைரியம்
கூட திராவிடக்காளையான உங்களுக்கு இல்லையே. பெயரை எழுதக் கூட உங்களுக்கு தைரியமில்லை. பெயரிடாமல் அநாநியாக
எழுதிவிட்டு இதில் பீற்றல் வேறு :-)))

அன்புடன்
நாக.இளங்கோவன்

vijayan said...

அன்புள்ள இளங்கோவன்,அவர்களுடைய அண்ணனுக்கு தைர்யம் இருந்தாலல்லவா தம்பிகளுக்கு இருப்பதற்கு.பஞ்சாபில் பிரிவினைகேட்டால் தடைவரும் என்று நேரு சொன்னதை கேட்டு அஸ்தியில் ஜுரம் வந்து திராவிட நாடை போட்டு உடைத்த வீர திருமகன் அவர்.அவள் கற்பில் சிறந்த கண்ணகியும் அல்ல நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல, நேருவோ மனைவியை இழந்தவர்,பண்டாராவோ கணவனை இழந்தவள் இருவரும் தனியறையில் என்ன பேசி இருப்பார்கள் தம்பி என்று தம்பிகளுக்கு பாலியல் கதை சொல்லி சொரிந்து கொடுத்த கலாசார தொழு நோயாளி அண்ணாதுரை.