Monday, March 03, 2008

தில்லையில் நடக்கும் ஆயிரங்காலத்து அடாவடி!

வைதீகத்தின் அடாவடியிலும் கொடுமையிலும்
சிக்கித்தவிக்கும் சிவத்தலங்களில், சைவத்தின்
முகன்மைத் தலமான தில்லையம்பதியும் இன்னலில்
இருப்பது, தமிழ் நெறிகளுக்கும், திருமுறை தந்த
ஞானிகளுக்கும் பெரிய இழுக்கு சேர்ப்பதாகும்.

அந்த இழுக்கினில் இருந்து சிறிதேனும் காப்பது போல
தமிழக அரசின் சட்டம் அமைந்துள்ளது தமிழர்களுக்கு
மகிழ்வான விதயம். தேவையில்லாத ஆர்ப்பரிப்புகள்
இல்லாமல் அமைதியாக இதனைக் கலைஞர்
செய்திருக்கிறார்.

அரசு கொண்டு வந்திருக்கும் சட்டம் சிறிது
வழவழ கொழகொழ வென்று இருந்த போதிலும்,
அது முழுமையான மனநிறைவு
அளிக்கவில்லையாயினும், இதனை வாயார
வரவேற்கிறேன். தி.மு.க செய்த தமிழ்ப்பணிகளில்
மிக உயர்ந்தது இதுதான் என்று சொல்வேன்.

"வைதீக அடாவடி" என்று மேலே சொல்வது
வைதீகர்களுக்கு பொறுக்க முடியாமல் இருக்கலாம்.
கோயில்களில் என்ன நடக்கிறது என்று தெரியாத,
கோயிலுக்குப் போனாலும் இதனை அறியாத
பத்தர்களுக்கு, சற்று குழப்பமாகக் கூட இருக்கலாம்.

கோயிலில் இறைவனை நினைத்துக் கொண்டிருக்கும்
போது பலருக்கும் சில விதயங்களை கவனிக்க
முடியாதுதான்.

தில்லையில் தமிழ் ஓதலாம் என்று அரசு சட்டம்
வைத்தவுடன், வைதீகக் கொடுக்குகள் தங்கள்
ஆற்றாமையில் அள்ளித்தெளிக்கும் சப்பைக்கட்டுகளைக்
காணும்பொழுது, இவர்களுக்கு ஏன் இந்த
தமிழ்-எதிர் போக்குகளைக் கொண்டிருக்கிறார்கள்
என்பது புரிவதில்லை என்று சொன்னபோதிலும் நமக்குப்
புரியத்தான் செய்கிறது.

தமிழுக்கும் தமிழ் நெறிகளுக்கும் எதிரான வைதீக
அடாவடி என்பது பல நூறாண்டுகளை விழுங்கியது.
இதற்கு வரலாற்றிலும் குமுகத்திலும் எண்ணற்ற
சான்றுகள் உள்ளன.

தில்லையில் ஆறுமுகச் சாமி திருமுறை ஓதுவதற்கு
தீட்சிதர்கள் காட்டும் எதிர்ப்பு எல்லோரும் அறிந்தது.
தமிழ் மந்திரங்களான திருமுறைகள் தில்லையில்
எப்படி நடத்தப்படுகின்றன?

திருமுறைகளும் இறைவனும் இழிவு படுத்தப் படும்
அந்தக் கொடுமையை என் கண்களால் கண்டு
சொல்லவொன்னா துன்பம் அடைந்தேன்.

சிற்றம்பலத்திற்கு ஒருநாள் உச்சிகால பூசையின் போது
செல்லும் வாய்ப்பு அமைந்தது. தீட்சிதர்கள் வடமொழி
மந்திரங்கள் ஓதி பூசை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தமிழையா கேட்க முடியும்?
வடமொழியைக் கேட்டுதான் பழகி விட்டோமே!
நீண்ட நேரம் சிற்றம்பலத்தில் கருவறையில் ஒருவர் வடமொழி
மந்திரத்தை ஓதுகிறார்.

பூசையும் தரிசனமும் மங்கல மணிஒலியும் அருமையாக
இருக்கின்றன. பூசை முடிகிறது. எல்லா தீட்சிதர்களும்
சன்னதியை விட்டு தள்ளிப் போய் புறவு பார்த்துக்
கொண்டு எனக்கென்ன என்பது போல நிற்கிறார்கள்.

பொன்னம்பலத்திற்கும் இறைவன் இருக்கும்
சிற்றம்பலத்திற்கும் இடையே கோயிலின் உள்ச் சுற்று
உண்டு. இந்த வெளியில் கழுத்தளவு
உயரத்தில் சிற்றம்பல மேடை இருக்கும். இறைவன்
இருக்கும் கருவறையில் இருந்து நன்கு தள்ளியிருக்கும்
இந்த உள்ச் சுற்றுப் பாதையில் கூட்டத்தோடு கூட்டமாக
நானும். மேலே பூசை முடிந்து தீட்சிதர்கள் ஒதுங்கிக்
கொண்டவுடன் திடீரென்று கூட்டத்தில் இருந்து
தேவாரக் குரல் ஒன்று ஒலிக்கிறது. வியப்போடு
பார்க்கிறேன்.

அந்த மேடையை ஒட்டி, கூட்டத்தில் எனக்கு சற்று
முன்னால் சிரங்குவித்து எட்டிப் பார்த்துக் கொண்டு
ஒரு கருப்பு ஓதுவார் (கோயிலால் நியமிக்கப்பட்டிருக்கும்
ஓதுவார்) தேவாரப் பாடல் ஒன்றைப் பாடுகிறார்.
மொத்தம் நாலே வரிகள். அது முடிந்தவுடன் இன்னொருவர்
அதேபோல நுனிக்காலில் நின்று கொண்டு
எட்டி எட்டிப் பார்த்து இன்னொரு பாடலைப் பாடுகிறார்.
அது முடிய பக்தர்களில் சிலர் பாட முனைகிறார்கள்;
உச்சிவேளை பூசை முடிந்து கருவறை மூடப்படுகிறது.

ஏறத்தாழ 15-20 நிமிடங்கள் வடமொழி மந்திரங்கள்
கருவறையில் ஓதப்பட்டு பூசைகள் முடிந்து, "காதில்
விழுந்தால் தீட்டு ஒட்டிக்கும்" என்பது போல
தீட்சிதர்கள் ஒதுங்கிக் கொண்டவுடன் அந்த மேடையின்
வெளிவிளிம்பில் ஒண்டிககொண்டும் எட்டி எட்டிப்
பார்த்துக் கொண்டும் ஒரு நிமிடம் இரண்டு பேரால்
திருமுறைகள் பாடப்பட்டன.

திருமுறை சிற்றம்பலத்து மேடையில் ஏறி நின்று
பாடப்படாத அந்த அவலத்தைக் கண்டு நாணியும்
கூனியும் போனேன். அதுவும் கோயிலால் நியமிக்கப்
பட்டிருக்கும் ஓதுவாரும் மேடையில் பாடஅனுமதிக்கப்
படுவதில்லை என்ற நிலைகண்டு வெட்கித்
திரும்பினேன்.

தமிழ்நாட்டில் தமிழ்க்கடவுளுக்கு
வடமொழி மந்திரங்களை சிற்றம்பலத்தில் பாடலாம்;
ஆனால் தமிழ் பாடக்கூடாது!? வெளியார் பாடினால்
மற்றவர்களுக்கு தொல்லையாயிருக்கும் என்று
போகிற போக்கில் கருத்து சொல்பவர்களும்,
"ஏன் கோயிலால் நியமிக்கப் பட்டிருக்கும் ஓதுவார்கள்
மேடையில் இருந்து பாடக் கூடாது? என்று சிந்தித்துப்
பார்க்க வேண்டும்.

இப்படித் தமிழைத் தள்ளி வைப்பதையே கண்டு
பழகிப் போய் வைதீகத்தில் கரைந்து போனவர்களும்,
"தேவாரம் எல்லாம் மண்டபத்தில்
பாடவேண்டியவை" என்ற பரப்புரையைச் செய்யவும்
முற்பட்டிருக்கிறார்கள்

கோயில் ஓதுவார்களைக் கூனி, குறுகி, ஒளிந்து நின்று
கொண்டு ஏதோ போனால் போகிறது நாலுவரி
திருமுறை பாடிக்கோ என்று இன்றைக்கும்
செய்து வரும் வெளியூர் தீட்சிதப் பூசாரிகளின் ஆணவம்
தில்லையில் நம்மை வாட்டுகிறது என்றால்,
திருவண்ணாமலையில் நம்ம ஊர் ஐயர் பூசாரிகள்
செய்யும் அடாவடி அதுக்கும் மேலே.

பிறிதொரு நாளில் அண்னாமலையில் உண்னாமுலை
அம்மன் சன்னதி. அதே உச்சிக்கால பூசை.
கருவறையில் பூசை நடக்கிறது. வடமொழி மந்திரங்கள்
ஓதப்படுகிறது. மங்கல ஓசைகள். கருவறைக்கு முன்
சிறுமண்டபம். வெளியேயும் பெருங்கூட்டம்.
மெய்மறந்த பத்தர்கள். அந்த முன்மண்டபத்தில் நானும்.
பூசை முடிகிறது. திடீரென்று "தனம்தரும் கல்விதரும்...."
என்ற அபிராமி அந்தாதிப் பாட்டொன்று கணீரென்று
ஒலிக்கிறது. ஆகா, இதுவரை அம்மன் கோயில்களில்
பூசை வேளையில் கேட்டறியாத் தமிழ் ஒலிக்கிறதே என்று
மனத்தின் கிளர்ச்சி எனக்கு.

பாடுபவரை கருவறையில் தேடுகிறேன். கருவறையில்
யாருமே தெரியவில்லை. கண்கள் நொடிக்குள்
இடப்புறம் பார்க்க, அங்கே ஒரு கருப்பர் (தோளில்
புரிநூல் இல்லை), கருவறைக்கு வலப்புறம், சிறிய
கருவறை மண்டபத்திற்கும், அதைவிட சற்றுப் பெரிய
முன்மண்டபத்திற்கும் இடைப்பட்ட சுவருக்கு முன்னால்
நின்று கொண்டு (ஒளிந்து கொண்டு) சிரங்குவித்து
அந்தப் பாட்டைப் பாடுகிறார். அபிராமி அந்தாதியின்
100 பாடல்களில் அந்தப் பாடல் ஒன்று. நான்கு
வரிகள். என் கண்கள் பரபரக்க, நெஞ்சம் வாட அந்தக்
காட்சியைப் பார்க்கிறேன். பாடி விட்டு அவர் விடுவிடு
வென்று வெளியே செல்கிறார். ஒரு ஐயர்
முன்மண்டபத்தில் இருந்தவர்களுக்குக் குங்குமம்
கொடுக்கிறார். இன்னொருவர் வெளியே குங்குமத்
தட்டை எடுத்துக் கொண்டு செல்கிறார்.

தில்லையில் தமிழ்த் திருமுறைகள் பள்ளத்தில்
நிற்கவைக்கப்படுகின்றன. உண்னாமுலை அம்மன்
சன்னதியில் அபிராமி அந்தாதி சுவரைப் பார்த்து
ஒளிந்து கொண்டு பாடப்படுகிறது.

இந்த இரண்டு உச்சிக்கால பூசைகளையும் பார்த்தது
எனக்கு கொடுப்பினை போலும்!

ஆறு/ஏழு மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளில் சம்பந்தர்,
அப்பர் மற்றும் சுந்தரரால் பாடப் பட்ட தேவாரப்
பாடல்கள், மூவேந்தராலும் விரும்பப் பட்ட தேவாரப்
பாடல்கள் சுந்தரருக்குப் பிந்தைய காலத்தில்
(ஏறத்தாழ 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்

சோழர்கள் தலையெடுக்க ஆரம்பித்த காலத்தில்)
அப்படியே அமுக்கப் பட்டு தில்லையில் ஒரு
மண்டபத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக
பூட்டப்பட்டு கரையானுக்கு இரையாக விட்டார்கள்
தில்லை தீட்சிதர்கள். (பூட்டி அழியவிட்டவர்களுக்குப்
பரிந்து "இராசராசன் கேட்டவுடன் எவ்வளவு பெருந்தன்மையாக
தீட்சிதர்கள் கொடுத்தார்கள் பாருங்கோ" என்று எழுதுபவர்கள்
என்ன பிறவி என்று தெரியவில்லை :( )

மூவேந்தரும் திருமுறைகளைப் போற்றி சைவநெறிகளை
வளர்த்தனர் என்பதற்கு எத்தனையோ சான்றுகள்
உண்டு. 9ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்
திருப்பரங்குன்றத்திற்கு சுந்தரர் மூவேந்தருடன் சென்று
பதிகம் பாடினார் என்பதும் வரலாறு. (கோத்திட்டையும்..
என்று தொடங்கும் பதிகம்).

திருமுறைகளின் பெருமைகள் பரவுவதைத் தடுத்து,
சிவத்தை வைதீகத்துக்குள் அடக்கும் சதிச்செயல்தான்
திருமுறைகளை கரையானுக்கு இரையாகத் தந்தது.

நம்பியாண்டார் நம்பியின் விடா முயற்சியாலும்,
இராசராசனின் ஆதரவாலும் தேவாரப் பாடல்களில்
கொஞ்சம் நமக்குக் கிடைத்தன. இது 11 ஆம்
நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடந்தது. இராசராசன்
ஆட்சி 1014 வரை இருந்தது. அவன் அதிக இறை
நாட்டம் கொண்டிருந்த காலம் 1014க்கு முந்தைய
ஒரு 10 ஆண்டுகள் எனலாம். (1004-1014).

அப்படி அவனால் தமிழருக்குத் தில்லை தீட்சிதரிடம்
இருந்து விடுவிக்கப் பட்ட தேவாரப் பாடல்கள்
அதே தில்லையில் இறைவனுக்கு முன்னால்
பாடப்படலாம் என்று அரசால் சொல்லப்படுவதற்கு
ஆகியிருக்கும் ஆண்டுகள் சரியாக 1000.

தில்லையிலேயே சிறைவைக்கப் பட்டு 100/150
ஆண்டுகளில் மீட்கப் பட்டு, பின்னர் அதைப் பாட
1000 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இதனை வைதீக
அடாவடி, திமிர் மற்றும் வைதீக மத வெறி என்று
சொல்லாமல் வேறென்ன சொல்வது?

இத்தனை ஆண்டுகளும் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள்
தமிழர்கள்தான். ஆனால் தம்மை வைதீகத்திற்கு
முழுமையாக அடகு வைத்துவிட்டு
சோற்றுமூட்டைகளாக வாழ்ந்த தமிழர்கள். அதனால்
அவர்களுக்கும் இந்த அடாவடியில் பங்குண்டு.

இந்தச் சட்டத்தைப் போட்டதற்காகக் அரசை வாயார
வாழ்த்துகிறேன். அதே நேரததில் தமிழிலேதான்
பூசையே செய்யவேண்டும் என்று சட்டம்
போட்டிருந்தால் நெஞ்சார வாழ்த்தியிருப்பேன்.
பூசைகளுக்கு இடையே ஒரு முப்பது நிமிடம், அதுவும்
முன் கூட்டி சொல்லி விட்டுப் பாடலாம் என்று சட்டம்
போட்டிருப்பது அரசின் தவறு என்றும் சுட்டிக்
காட்டுகிறேன்.

அரசு சட்டம் போட்டபின்னும் கருவறையை
மறைத்துக் கொண்டு 20/25 பேர் நின்று
ஆறுமுகச்சாமியைப் பாடவிடாமல் செய்ததிலேயே
தீட்சிதர்களின் பண்பு அனைவருக்கும் புரிந்திருக்கும்.

தமிழ்நாட்டுக் கோயில்களுக்குள் தமிழரை
சாமி கும்பிட அனுப்பியதே கருப்புசட்டைக் கட்சிதான்.
ஆன்மீகம் என்று சொல்லும் வைதீகப் பொய்யர்கள்
நாண வேண்டிய விதயம் இது.

ஆயினும், ஆறுமுகச்சாமி என்ன கருப்பு சட்டை போடும்
நாத்திகரா? மாணிக்க வாசகர் சொன்னது
போல இறைவனைப் பாடப் போகிறார்.
அதை ஏன் ஆன்மீகக் கூட்டம் என்று சொல்லிக்
கொள்பவர்கள் எதிர்க்க வேண்டும்?

இராமகோபாலன்களும் இல.கணேசன்களும்
நேர்மையான ஆன்மிக ஆதரவாளர்கள் என்றால்
அவர்கள் ஏன் ஆறுமுகச்சாமியை ஆதரிக்க வில்லை?
இல்லாத இராமர் பாலத்தைக் காப்பதில் இருக்கும்
அக்கறை, இருக்கும் தமிழ்நாட்டு ஆன்மீகத்
திருமுறைகளை, மரபுகளைக் காப்பதிலே இல்லையே
இவர்களுக்கு! அப்படியென்றால் இவர்களெல்லாம் யார்?
யாரை, எதைக் காக்க இருக்கிறார்கள்?

கொஞ்சமாவது திருந்துங்கள் என்று சொல்வதைத் தவிர
வைதீக நஞ்சுகளுக்கு நாம் வேறேதும் சொல்ல இல்லை.

அன்றைக்கு நம்பியாண்டார் நம்பியின் விடாமுயற்சி.
இன்றைக்கு ஆறுமுகச்சாமியின் விடாமுயற்சி.
ஆயினும் இன்னும் அடைய வேண்டியதை அடையவே
இல்லை. இவர்கள் இரண்டு பேரையும் ஒவ்வொரு
நேர்மையான சைவனும் தமிழனும் என்றைக்கும் தலை
வணங்குவான்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

25 comments:

சரவணன் said...

அரசு சட்டம் போட்டும் இவர்கள் கொட்டம் அடங்கவில்லையே! ஆறுமுகச்சாமிக்குப் பாதுகாப்பாகச் சென்ற மாவட்டக்காவல் அதிகாரி (எஸ்.பி.)க்கே கிடைத்தது அடி, உதை! என்றால், ஆறுமுகச்சாமி தனியாகச் சென்றிருந்தால் கொலையே செய்யப்பட்டிருப்பார். என்னைக் கேட்டால் எல்லா சைவ, வைணவ கோயில்களிலும் தமிழ் பண்களையும், பாசுரங்களையுமே பாடி பூசை நடத்தப்பட வேண்டும். முதலில் தில்லைச் சிற்றம்பலத்துக்கு இராணுவத்தையே அனுப்ப வேண்டியிருந்தாலும் சரி, அரசு தன் (அறைகுறை) சட்டத்தை செயலாக்குவதில் உறுதி காட்ட வேண்டும். பி.ஜே.பி. யை விடுங்கள், திராவிடக் கட்சி என்று கூறிக்கொள்ளும் அ.தி.மு.க. என்ன செய்கிறது? நல்ல பதிவு. எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாவிட்டாலும் உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்.

இராம.கி said...

அடாவடி பற்றி நெஞ்சில் தைப்பது போல் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

"இதைச் செய்யக் கலைஞருக்கு இவ்வளவு நாளாயிற்றே?" என்று ஒருபக்கம் எண்ணினாலும், அவருக்கு நாம் நெஞ்சார நன்றி கூறத்தான் வேண்டும்.

இந்த நாட்டில், கருப்புச் சட்டைக்காரன் வந்துதான் இது போன்ற கொடுமைகளைத் தீர்க்கவேண்டி இருக்கிறது. தீர்க்க வேண்டிய வெவ்வேறு கொடுமைகள் இன்னும் பல கோயில்களில் இருக்கின்றன. அவற்றையும் களைய வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழ் ஓங்க வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

கோவை சிபி said...

உண்மை நிலையை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.சிவத்திற்கும்,வைதீகத்திற்கும் வேறுபாடு தெரியாத பாமரத்தமிழனக்கு எதைச் சொல்லி தெளிய வைப்பது!

குறும்பன் said...

தமிழகத்தின் அனைத்து கோயில்களின் நிலையும் இது தான் ;-( . இந்து மத காவலர்கள் என்போர் வடமொழி வைதீக மத காவலர்கள் என்பது தெரியாதா?

Thamizhan said...

தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜ ராஜ சோழனுக்கு அங்கே இடமில்லை.

தீட்சதரா கோவில் கட்டினார்கள்?

தமிழ் நாட்டிலே இருந்து கொண்டு இவ்வளவு ரவுடித்தனம் செய்யும் தீட்சதர்களையும் பொறுமையுடன் சாப்பாடு போட்டு ஆதரிக்கும் தமிழர்களுக்கு பாராட்டுக்கள்.

தமிழ் பேசுபவர்கள் பக்த கோடிகளாக இருந்தாலும் வடமொழிப் பற்றுள்ளவர்கள்,நூலணிந்த
பார்ப்பனர்கள் தமிழர்கள் ஆவார்களா
என்பதை மற்றவர்கட்கு நன்கு
புரிய வைத்துள்ளார்கள் கணேசன்களும்,கோபாலன்களும்.

யாரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சுரர்,அசுரர் போராட்டம் நட்ந்தே ஆக வேண்டும்போல் தான் இருக்கிறது.பின்
புத்தி உள்ளவர்கள் பின்னால் அழுது
பயன் இருக்காது.அவர்களுக்கு உடன்
போகும் பக்த கோடிகள் நன்கு சிந்திக்கட்டும்.

Yazhini said...

கிருத்துவ வரலாற்றை படிப்பவர்களுக்கு ஒன்று புரியும். கேத்தலிக்க சமயத்தில் இலத்தீன் மொழியே தேவ மொழி என்று பல நூற்றாண்டுகளாக சொல்லிவந்ததை புரட்சி சமயம்(புரட்டாஸ்டந்த்) உடைத்தது. அதுபோல் இந்துமதத்திலும் விடியல் வரும். வெகுதொலைவில் இல்லை.

அறிவன் /#11802717200764379909/ said...

மிக நல்ல பதிவு.
என் பதிவில் உங்கள் இந்தப் பதிவுக்கு சுட்டி கொடுக்கிறேன்,உங்கள் அனுமதியுடன்..

குமரன் (Kumaran) said...

சரவணன்,

அரசு சட்டம் போட்டாலும் 'இந்தக் கோவிலில் இது தான் மரபு; வேண்டுமென்றால் வேறு கோவிலுக்குச் சென்று தமிழில் பாடிக் கொள்ளுங்கள். இன்னும் வசதியாக நீங்களே கோவிலைக் கட்டிக் கொள்ளுங்கள்' என்று இவர்கள் சொன்னால் அதற்கும் செல்வாக்கு மிகுந்தவர்களிடமிருந்து ஆதரவு இருக்கும் என்ற எண்ணம் தான் இவர்கள் தொடர்ந்து இதனைச் செய்து வருவது. இவர்களின் கொட்டம் அடங்கும் வரை தில்லையின் எல்லையைத் தீண்ட மாட்டோம் என்று பொதுமக்களும் தமிழார்வலர்களூம் நின்று விட்டால் இவர்கள் பொருளாதார நசிவு ஏற்பட்டுத் திருந்துவார்கள் என்பதும் சரி என்று தோன்றவில்லை; அப்படி செய்தால் இவர்களின் ஆதரவு குழுவினரின் ஒத்துழைப்பால் கொட்டம் அதிகமாகுமே ஒழிய குறையாது.

நீங்கள் சொன்ன கருத்தில் ஒரே ஒரு திருத்தத்தைச் சொல்ல விழைகிறேன். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால் உங்களுக்கு அது தெரியவில்லை போலும். வைணவ ஆலயங்களில் தமிழ் முழக்கம் என்றென்றைக்கும் கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. நீங்கள் எனது இடுகைகளையும் இரவிசங்கர் கண்ணபிரான் இடுகைகளையும் படித்துப் பார்த்தால் அவை நன்கு தெளிவாகத் தெரியும் (படிக்காவிட்டாலும் தலைப்புகளைப் பார்த்தாலும் போதும்).

nayanan said...

//
என்னைக் கேட்டால் எல்லா சைவ, வைணவ கோயில்களிலும் தமிழ் பண்களையும், பாசுரங்களையுமே பாடி பூசை நடத்தப்பட வேண்டும்.
//

அன்பின் நண்பர் சரவணன்,

தங்களின் இந்தக் கருத்து தமிழகம் முழுவதும் பரவல் வேண்டும். இது நம்மது.

மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

// இராம.கி said...

அடாவடி பற்றி நெஞ்சில் தைப்பது போல் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

//

அன்பின் ஐயா,
மிக்க நன்றி.

இப்பவும் பாருங்களேன்,
ஏன் தமிழ் மந்திரம் பாடுவதற்கு
இவ்வளவு எதிர்ப்பினைக் காட்டுகிறார்கள் தீட்சிதர்கள் என்று
கேட்டால், கோயில் நிர்வாகத்தில்
கண் வைத்து சிலர் செய்யும் சூழ்ச்சி
என்றுதான் சிலருக்கு புத்தி
போகிறதே தவிர, தமிழ் வேண்டும்
தீட்சிதர்கள் மாற வேண்டும் என்ற
கருத்தை சொல்லமாட்டேன்கிறார்கள்.

தீட்சிதர்கள் செய்யாத சூழ்ச்சிகளை விடவா?

அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

//கோவை சிபி said...

சிவத்திற்கும்,வைதீகத்திற்கும் வேறுபாடு தெரியாத பாமரத்தமிழனக்கு எதைச் சொல்லி தெளிய வைப்பது!

//

நண்பர் சிபி, சரியாச் சொன்னீங்க.
இந்த வேறுபாடு என்பது மிக நுண்ணியமானது. இதைத் தெளிவாக
நமது மக்கள் உணரும்போது
அருமையான மாற்றங்கள் தமிழ்
மண்ணில் நிகழும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

// குறும்பன் Said

தமிழகத்தின் அனைத்து கோயில்களின் நிலையும் இது தான் ;-( . இந்து மத காவலர்கள் என்போர் வடமொழி வைதீக மத காவலர்கள் என்பது தெரியாதா?
//

அப்படித்தான் செய்கிறார்கள் நண்பரே.
இதை நமது மக்கள் தெளிவாகப் புரிந்து
கொண்டார்கள் என்றால் நமது இயல் நெறிகள் நமது மண்ணை சிறக்கச் செய்யும். நிச்சயம் அந்தக் காலம் உருவாகும். நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

//
திராவிடக் கட்சி என்று கூறிக்கொள்ளும் அ.தி.மு.க. என்ன செய்கிறது? நல்ல பதிவு. எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாவிட்டாலும் உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்.
//

நண்பர் சரவணன்,

அ.தி.மு.க ஒரு திராவிடக் கட்சியே இல்லை. திராவிட இயக்கம் என்றால்
நீதிக்கட்சி, தி.க, தி.மு.க என்ற மூன்று மட்டுமே.

தமிழ்நாட்டில் உருவாகிய உருவாகியிருக்கும் அரிதார அவலட்சணங்களில் முகன்மை அவலட்சணம் அது. வேறு மாதிரி
சொல்லப் போனால் மூத்த தே.மு.தி.க :-))

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஆழமான எண்ணங்களை முன்வைக்கும் நேர்மையான கட்டுரை!
வாழ்க இளங்கோவன் ஐயா!
தண்ணீர் விட்டா வளர்த்தோம் இப்பயிரைச் சர்வேசா...
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ-ன்னு பாரதியார் விடுதலைக்குப் பாடியது, இங்கு தில்லை விடுதலைக்கும் சாலவும் பொருந்தும்!

//அன்றைக்கு நம்பியாண்டார் நம்பியின் விடாமுயற்சி//

நம்பியாண்ட நம்பியும் அந்தணர் தான்-தமிழ்ச் சிவாச்சாரியார்! அவரே தீட்சிதர்களிடம் பட்ட துன்பம் சொல்லி மாளாது! இத்தனைக்கும் பொல்லாப் பிள்ளையார் அருள் பெற்று, இராசராசன் உதவியுடன் திருமுறைகளை வெளிக் கொணர்ந்தவர்!

பிள்ளையாருக்கே அன்று தண்ணி காட்டத் தயராய் இருந்த தீட்சிதர்கள், இதுக்கெல்லாம் அஞ்சுவார்களா என்ன? :-)

அரசாணை சொல்வது "பாடலாம்" தான்! "பாடணும்" இல்லை! எவ்வளவு நாள் ஆறுமுகசாமி மேடையில் போய் பாடமுடியும்?
அதுக்கப்புறம் பழைய குருடி கதவைத் திறடி கதை தான்! :-(

இந்தப் புரட்சி அரசிடம் இருந்து தொடங்கலாமே தவிர, அரசே செய்து கொண்டிருக்க முடியாது! அதான் மன்னராட்சி இராசராசனாலேயே முடியாமப் போச்சே!

இதற்கெல்லாம் உள்ளிருந்தே புரட்சி எழ வேண்டும்! சமயப்புரட்சியை சமயம் தான் செய்ய முடியும்!

தில்லை அவலக் காட்சிகளைப் பார்க்கப் பார்க்க, திருவரங்கத்தில் எப்படித் தமிழ் கோலோச்சத் துவங்கியது-ன்னு எழுதத் தூண்டுது! ரொம்ப நாளாத் தள்ளிப் போட்ட பதிவு! சீக்கிரம் எழுத வேண்டும்!

nayanan said...

// Thamizhan said...

தீட்சதரா கோவில் கட்டினார்கள்?
//

நிச்சயம் இல்லவே இல்லை.

//
தமிழ் நாட்டிலே இருந்து கொண்டு இவ்வளவு ரவுடித்தனம் செய்யும் தீட்சதர்களையும் பொறுமையுடன் சாப்பாடு போட்டு ஆதரிக்கும் தமிழர்களுக்கு பாராட்டுக்கள்.
//

உங்கள் கருத்து சரியே. ஒரு நாள் இருநாள் அல்ல. பல நூறாண்டுகளாக.


//பின் புத்தி உள்ளவர்கள் பின்னால் அழுது பயன் இருக்காது.அவர்களுக்கு உடன்
போகும் பக்த கோடிகள் நன்கு சிந்திக்கட்டும்.
//

நிச்சயம், தீட்சிதர்களின் அடாவடி
மக்களை நன்கு சிந்திக்க வைத்திருக்கிறது. காலம் மாறும் என
நம்புவோம்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

// Yazhini said...

கிருத்துவ வரலாற்றை படிப்பவர்களுக்கு ஒன்று புரியும். கேத்தலிக்க சமயத்தில் இலத்தீன் மொழியே தேவ மொழி என்று பல நூற்றாண்டுகளாக சொல்லிவந்ததை புரட்சி சமயம்(புரட்டாஸ்டந்த்) உடைத்தது. அதுபோல் இந்துமதத்திலும் விடியல் வரும். வெகுதொலைவில் இல்லை.
//

அன்பின் நண்பர் மலர்ச்செல்வன்,
அருமையான கருத்து.
நமக்கு விடியும். நம்மது ஒளிவிடும்.
மிக்க நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

//அறிவன் said...

மிக நல்ல பதிவு.
//
நண்பர் அறிவன்,

தில்லையின்பாலும் தமிழ் மந்திரங்கள்பாலும் அன்பு கொண்ட உங்கள் கருத்துகளை என் பதிவிலும் உங்கள் பதிவிலும் கண்டு மிக்க மகிழ்கிறேன். நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

// அரசு சட்டம் போட்டாலும் 'இந்தக் கோவிலில் இது தான் மரபு; வேண்டுமென்றால் வேறு கோவிலுக்குச் சென்று தமிழில் பாடிக் கொள்ளுங்கள். இன்னும் வசதியாக நீங்களே கோவிலைக் கட்டிக் கொள்ளுங்கள்' என்று இவர்கள் சொன்னால் அதற்கும் செல்வாக்கு மிகுந்தவர்களிடமிருந்து ஆதரவு இருக்கும் என்ற எண்ணம் தான் இவர்கள் தொடர்ந்து இதனைச் செய்து வருவது.

//

அன்பின் நண்பர் குமரன்,

அழகாக சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள்.

இன்றைக்கு சனநாயக நாட்டில்,
தகவல் தொடர்பும் வாழ்க்கை நிலைகளும் மாறிவிட்ட இந்தச் சூழலிலேயே தீட்சிதர்கள் இவ்வளவு
அடாவடி செய்கிறார்கள் என்றால்,
கடந்த காலங்களில் எவ்வளவுசெய்திருக்க வேண்டும்.

பண்னையார்களின் பகட்டுகளுக்கு இடங் கொடுத்தே அவர்களை அடியாள்களாக வைத்தேதான் இவர்கள்
இத்தனை நாளும் நாட்டுக்கு இந்தச் சரவல் தெரியாமல் ஆக்கியிருக்கிறார்கள்.

இனியும் இவர்களும் சரி, வேறு யாரும் சரி நீண்ட நாள்களுக்கு ஏமாற்றிக் கொண்டு இருக்க முடியாது.

தங்கள் பதிவில் அற்புதமான பணியைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். இது பல்கிப் பெருகும் போது நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தே விடும் விரைவில்.

மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

அன்பின் நண்பர் கண்ணபிரான்,
தங்களின் அருமையான கருத்துகளைக்
கண்டு மகிழ்ந்து போனேன்.

// தண்ணீர் விட்டா வளர்த்தோம் இப்பயிரைச் சர்வேசா...
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ-ன்னு பாரதியார் விடுதலைக்குப் பாடியது, இங்கு தில்லை விடுதலைக்கும் சாலவும் பொருந்தும்!
//

சரியான சொல்.

// நம்பியாண்ட நம்பியும் அந்தணர் தான்-தமிழ்ச் சிவாச்சாரியார்! அவரே தீட்சிதர்களிடம் பட்ட துன்பம் சொல்லி மாளாது! இத்தனைக்கும் பொல்லாப் பிள்ளையார் அருள் பெற்று, இராசராசன் உதவியுடன் திருமுறைகளை வெளிக் கொணர்ந்தவர்!

பிள்ளையாருக்கே அன்று தண்ணி காட்டத் தயராய் இருந்த தீட்சிதர்கள், இதுக்கெல்லாம் அஞ்சுவார்களா என்ன? :-)
//

எண்ணிப் பார்க்கவே வியப்பாகவும்,
களைப்பாகவும் இருக்கிறது.
அதேமேடையில் உட்கார்ந்து மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட பாடல்களும், இன்னும் சொல்லப் போனால் மாணிக்க வாசகர் சொல்ல நடவரசன் எழுதினான் என்று சொல்லப்பட்டும் இல்லை இல்லை நடவரசன் அருள மாணிக்கவாசகர் எழுதினார் என்றும் சொல்லப்பட்டும்
வருகிற திருவாசகமும், மூவராலும்
அதே தில்லையில் நடவரசனுக்கு சாற்றப்பட்ட தேவாரங்களுக்கும்
இடம் இல்லை என்று சொல்ல இவர்களுக்கு மனம் வருகிறது?
என்று நினைக்கும் போது வேதனை மிகுகிறது.

// அரசாணை சொல்வது "பாடலாம்" தான்! "பாடணும்" இல்லை! எவ்வளவு நாள் ஆறுமுகசாமி மேடையில் போய் பாடமுடியும்?
அதுக்கப்புறம் பழைய குருடி கதவைத் திறடி கதை தான்! :-(
//

தங்களின் இதே கவலைதான் எனக்கும். அதனால்தான் தீட்சிதர்களின்
அடாவடிக்கு சோம்பேறித் தமிழர்களின்
பங்கும் உண்டு என்று எழுதினேன்.

//
இந்தப் புரட்சி அரசிடம் இருந்து தொடங்கலாமே தவிர, அரசே செய்து கொண்டிருக்க முடியாது! அதான் மன்னராட்சி இராசராசனாலேயே முடியாமப் போச்சே!
இதற்கெல்லாம் உள்ளிருந்தே புரட்சி எழ வேண்டும்! சமயப்புரட்சியை சமயம் தான் செய்ய முடியும்!
//

நல்ல சொல். எனக்கு நம்பிக்கை நாளுக்கு நாள் கூடுகிறது. நிச்சயம்
நல்ல மாற்றம் வரும்.

//
தில்லை அவலக் காட்சிகளைப் பார்க்கப் பார்க்க, திருவரங்கத்தில் எப்படித் தமிழ் கோலோச்சத் துவங்கியது-ன்னு எழுதத் தூண்டுது! ரொம்ப நாளாத் தள்ளிப் போட்ட பதிவு! சீக்கிரம் எழுத வேண்டும்!
//

அவசியம் எழுதுங்கள். மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

விடாதுகருப்பு said...

நன்கு விவரமாக எழுதப்பட்ட மிக நல்ல பதிவு இளங்கோ அவர்களே.

இப்படிப்பட்ட மிக நல்ல பதிவினை ஆபாசப் பதிவு என்றும் கெட்ட பதிவு என்றும் குமரன்(kumaran) பதிவில் தூற்றி இருக்கிறது ஓகை என்கிற ஆசாரி நாய் ஒன்று. அந்த பின்னூட்டத்தையும் படித்து தெளிவு பெறுங்கள்.

எஸ்கே என்கிற ஒரு பாப்பான் சொல்லி இருக்கிறான், ஆறுமுகசாமி அங்கே மட்டும் ஏன் பாடவேண்டும்? ஊரில் உள்ள எல்லா சிவன் கோயிலிலும் பாடவேண்டியதுதானே என்று. அது மட்டும் இல்லையாம். சம்பளமும் வாங்கித் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறான்.

ராமர் கட்டிய பாலம்தான் என்று அமெரிக்க நாசாகூட தகுந்த சான்றுடன் கூறி இருக்கிறதாம்.

பாப்பார பயல்களுக்கு கெட்ட புத்தி எப்படி வேலை செய்கிறது என்று பாருங்கள்.

nayanan said...

//Blogger விடாதுகருப்பு said...

நன்கு விவரமாக எழுதப்பட்ட மிக நல்ல பதிவு இளங்கோ அவர்களே.
//

அன்பின் நண்பர் விடாதுகருப்பு அவர்களே, வாருங்கள்.
கருத்துக்கு மிக்க நன்றி.

சிலரின் ஆற்றாமையும் அறியாமையும்
ஆணவமாக வெளிப்படுகிறது.

வருணத்தட்டில் வாசம் செய்யும் சிலரோ 'எதை யார் சொல்ல வேண்டும்' என்று இல்லையா என்று கேட்கிறார்கள் :-))

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதனைக் கல்லாதார் என்பதை மட்டுமே எம்மால்
அவர்களுக்கு சொல்ல முடியும்.

பேய்பிடித்த மனதோடு வெட்டிக் கலகங்களில் பொழுதெல்லாம் கழிப்பவர்களுக்கு, ஆன்மீகம் என்பது
வெற்றிலையோடு தின்னும் சுண்ணாம்பு மாதிரிதான். இவர்களை எல்லாம் பொருட்படுத்தியிருந்தால், சம்பந்தர், அப்பர், சுந்தரர் போன்ற மகான்களும்,
பெரியார், பாரதிதாசன் போன்ற புரட்சிக்காரர்களும், மறைமலையடிகளார், பாவாணர் போன்ற அறிஞர்களும் இந்த மண்ணில்
எதுவுமே செய்திருக்க முடியாது.
பாரதியைக் கூட தூக்கிப் போட்டு மிதி மிதி என்று மிதித்தவர்கள் எல்லாம் இத்தகையோரே. இன்று அவர்களுக்கு நாக்கு மாறிக் கொண்டது.

பதிவுகளில் மட்டுமல்ல வேறு சில தளங்களிலும் இந்தக் கோணத்தில்தான்
தமது ஆற்றாமையை அள்ளித் தெளித்திருக்கின்றனர்.

திருமுறைகளோடு மட்டுமே வாழ்க்கையைக் கழிக்கும் பல பார்ப்பனர்களையும் நான் அறிவேன்.
இணையத்திலே கூட பல தளங்களில்
என்னால் காட்ட முடியும்.

ஆயினும், சில வயித்தெரிச்சல் குழுக்கள் குட்டி கலாட்டா செய்வதற்காக மட்டுமே அள்ளி விடும் அசிங்கங்களால் திருமுறைகளும்
அரசியலுக்குள்ளும் சாதிக்குள்ளும் சிக்குவது எனக்கு வருத்தமளிக்கிறது.

ஓசிச் சுண்ணாம்புகளே குமுகத்தில் பல நல்ல செயல்களைக் குட்டிச் சுவராக்கியிருக்கின்றனர்.

இவர்களை நாம் நன்கறிந்து, இவர்களின் உளறல்களை கண்டு கொள்ளாமல் நமது பணியை நாம் செய்து கொண்டே செல்ல வேண்டும்.

தெளிந்த மதி இருப்பவர், இறைவனிடம் உண்மையான பத்தி கொண்டவர் சாதி பேதமில்லாமல்
தமிழ்நெறிகளான சிவ விண்ணவ நெறிகளைப் போற்றுவர். சிவனை வழிபடுபவர் திருமுறைகளையும்,
திருமாலை வழிபடுபவர்கள் பாசுரங்களையும் பாடிப் பரவுவர்.
ந்மக்குத் தேவை நமது நெறிகளும் ஆன்மிகமும் நமது மண்ணில் நிலைக்க வேண்டும் என்பதுதான்.

பேசுகிறவர்கள் பேசட்டும். அறியாமையில் வாழப் படைக்கப் பட்டவர்கள் அவர்கள் என்று சொல்லிவிட்டுப் போவதே சுகமானது.

உங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.
சாதியைக் குறித்தும், சில சுடுசொற்களையும் எழுதுவதை தவிர்க்கவேண்டும். தமிழ்ப்பணிக்கு இவை ஆகாது. அவை தேவையுமில்லை. சரியானவற்றை எழுதிக் கொண்டிருந்தால் போதும்.
நல்லவர் விரும்புவர்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

கோவி.கண்ணன் said...

இடுகை மிக நன்று,

நாத்திகன் தலையிட வில்லை என்றால் ஏழை எளியோரை சூத்திரனாக்கி கோவில் வாசலில் செருப்பு பாதுக்காப்புக்கு மட்டுமே வைத்திருப்பார்கள். பக்திமான்கள் தாய்மொழியை விட்டுவிட்டு வடமொழி தேவ மொழி என்று சொல்வதை எதிர்கேள்வி கேட்கததால் தான் இத்தகாதோர் தொடர்ந்து தமிழனுக்கும் தமிழுக்கும் இழிவு செய்து வருகிறார்கள். தில்லை வாழ் அந்தணர் தேர் ஏறி வந்தார்களாம், எத்தகைய புரட்டு பாருங்கள், இப்போதிருக்கும் தீட்சிதர்கள் எல்லோரும் கேரளாவில் இருந்து சிதம்பரம் கோவிலில் சமையலுக்காக வந்த நம்பூதிரிமார்கள் எல்லோருக்கும் குடுமி மற்ற பார்பனர்களை விட வேறுபட்டு இருக்கும். சோழர்காலத்தில் கூட தமிழகத்தில் பிள்ளையார் கோவில் கிடையாது, சங்கப்பாடல்கள் எதிலும் முதல்வணக்கம் என்ற பெயரில் பிள்ளையார் வணக்கம் கிடையாது, இவையெல்லாம் நுழைக்கப்பட்ட போது எந்த ஆகமும் எதிர்க்கவில்லை போல். நம்பூதிரிகள் தீட்சிதராக மாறியதையும் எந்த ஆகமும் தடுக்கவில்லை.அங்கிருந்த சிவாச்சாரியார்களை துறத்தி நம்பூதிரிகள் அங்கே ஆக்கிரமிப்பு நடத்தியதை எந்த ஆகமும் தடுக்கவில்லை. ஆண்டாண்டு காலம் வருவது மாற்றக் கூடாது என்பதெல்லாம் வருணாசிரம கருமத்தைத் தாங்கிப் பிடிக்கவேயன்றி வெறொன்றும் இல்லை.

சாமிக்கு புரிகிற மொழி என்றால் அதை சாமி மட்டுமே தெரிந்து வைத்திருக்கும், பான்பராக்கை வாயில் போட்டுக் கொண்டிருக்கும் ஆசாமிகள் குழுக்குள் பேசிக் கொள்வதெல்லாம் தேவ மொழி ஆகுமா ? இப்போதெல்லாம் தமிழை தாழ்த்துவது இல்லை என்றாலும் சமஸ்கிரதத்தில் சொல்வது 'நல்லது' என்று பக்தியாளர்களை ஏமாற்றிவருகிறார்கள். 'நல்லது' என்று சொல்லிவிட்டால் நாய்கறியைக் கூட ஆண்டவனுக்கு அர்பணிக்கத் தயாராகும் பக்தியாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பகுத்தறிவு இன்மையிலிருந்து இத்தகையோர் மீண்டாலும் முன்பு வளைந்தே கொடுத்து வந்திருந்ததால் சமரசம் செய்து
கொள்ளவும் முடியாமல் போகும்போது எள்ளி நகையாடப்படுகின்றனர். ஆலய முறைகேடுக்களுக்கான எதிரான பக்தியாளர்களின் குரலை நாத்திகன் வந்து தான் பெருக்கித்தரவேண்டி இருக்கிறது.

பிணக்குகளுக்கு பதிலே சொல்ல முடியாது அல்லது பதிலே இல்லை என்றால் திடிரென்று தெய்வத்தை எல்லோருக்கும் சமமாக பேச்சளவில் மாற்ற முயல்பவர்களின் பச்சைத்தனத்தில் வெளிப்படுவது தான்,

எங்கிருப்பதும் சாமிதான் சிதம்பரத்தில் சிற்றம்பல மேடையில் தான் பாடுவேன் என்று ஏன் அடம்பிடிக்க வேண்டும் ?
எல்லா மொழியும் இறைவனுக்கு தெரியும் பிறகு ஏன் தமிழ்தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறாய் ?

சந்த்...அற்பவாதிகள் !


சிதம்பரம் நிகழ்வுகள் குறித்து எனது இடுகைகள் :

கருடா சவுக்கியமா ?

சிதம்பரம் கோவிலுக்குள் ஜட்டி அணிந்து செல்லமுடியுமா ?

தேவாரம் திருவாசகத்தை கொளுத்த வேண்டும் !

nayanan said...

//கோவி.கண்ணன் said...

இடுகை மிக நன்று,
பக்திமான்கள் தாய்மொழியை விட்டுவிட்டு வடமொழி தேவ மொழி என்று சொல்வதை எதிர்கேள்வி கேட்கததால் தான் இத்தகாதோர் தொடர்ந்து தமிழனுக்கும் தமிழுக்கும் இழிவு செய்து வருகிறார்கள்.

//

நண்பர் கோவி
மிகவும் சரியான சொல். நம்மைப் பற்றிய அக்கறை இன்றி, வடமொழிக்கு இவ்வளவு இடம் கொடுத்த நமது முன்னோர்கள் தவறு செய்திருக்கின்றனர். அது நம்மை பாதித்திருக்கிறது.

//இப்போதிருக்கும் தீட்சிதர்கள் எல்லோரும் கேரளாவில் இருந்து சிதம்பரம் கோவிலில் சமையலுக்காக வந்த நம்பூதிரிமார்கள்
//

:-))))
அப்படியே பத்தி அதிகமாயிடுச்சி.

//
இப்போதெல்லாம் தமிழை தாழ்த்துவது இல்லை என்றாலும் சமஸ்கிரதத்தில் சொல்வது 'நல்லது' என்று பக்தியாளர்களை ஏமாற்றிவருகிறார்கள்.
//

பின் நவீனத்துவம் என்ற பெயரில்
நடக்கும் மாற்று முயற்சிகள்.
இதில்தான் பல படித்தவர்களும் ஏமாந்துவிடுகிறார்கள்.
அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

மு.மயூரன் said...

இந்தப்பதிவும் வந்த பின்னூட்டங்களும், ஊடகச்செய்திகளும் பார்க்கத்தவறிய, சொல்லத்தவறிய செய்தி ஒன்று உண்டு.
அதுதான் "சிவப்புச்சட்டை" விவகாரம்.

விரிவாகக்காண இங்கே செல்லுங்கள்.

nayanan said...

//சொல்லத்தவறிய செய்தி ஒன்று உண்டு.
அதுதான் "சிவப்புச்சட்டை" விவகாரம்.
//

நண்பர் மயூரன், சுட்டியமைக்கு மிக்க
நன்றி. இந்தக் கட்டுரை சொன்ன செய்திகள் பல. வைதீகக் காவி்
தமிழகத்தில் நடத்தும் அடாவடிகளில்
இருந்து தமிழ்க் காவியைக் காப்பாற்ற
செஞ்சட்டையும் கருஞ்சட்டையும்
செய்து வரும் பணிகள் யாவும் மிக உயர்ந்தவை. ஆறுமுகச்சாமி அவர்களுக்கு துணையிருந்த அத்தனை
பேரும் போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்கள்.

நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்