அபியப்பா அவர்களின் பதிவில் http://abiappa.blogspot.com/2007/09/blog-post_7491.html திருவாட்டி.கண்ணகி பற்றிய கட்டுரை கண்டு மகிழ்ந்தேன். கண்ணகியின் செயல்களும், அபியப்பாவின் எழுத்தும் நம்மைக் கவர்ந்தன.
ஆனால், வலைப்பதிவர்களில் ஒருவரான செல்வி. வித்யா பற்றி குறிப்பிடப் பட்ட போதிலும், வலைப்பதிவுகளிலே சற்றேபால் திரிந்தவர்களைப் பற்றிய எழுத்துகளிலும், அவர்களை "திருநங்கை" என்றே பட்டம் கொடுத்து அழைப்பதைப் பார்த்திருக்கிறேன்.
குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிவது பாலை என்றே படித்திருக்கிறோம். பாலை என்றால் பொட்டல் காடு அல்ல. அங்கே குறிஞ்சியும் உண்டு முல்லையும் உண்டு. ஆயினும் அவை சற்றே முறைமையில் இருந்து திரிந்து இருக்கும். அவ்வளவுதான்.
அதேபோல, ஆண்மை, பெண்மை மிகச்சிறிது திரிந்து கிடப்பதால் குரலிலோ அல்லது உடலமைப்பிலோ மாற்றம் கொண்டவர்களை அரவாணிகள் என்று சொல்கிறார்கள். அந்தப் பெயர் எவ்வளவு பொறுப்பற்ற பெயரோ அவ்வளவு பொறுப்பற்றது திருநங்கை என்ற பட்டமும்.
இந்தியாவில் தாழ்த்தப் பட்ட வகுப்பு மக்களை காந்தியார் அரிசனம் என்று சொன்னது எப்படிக் கருதப்பட்டதோ அதை ஒத்ததே இந்த திருநங்கைகள் என்று சொல்வதும்.
அவர்களுக்குத் தேவை எல்லோரையும் போன்று அவர்களுக்குமான ஏற்புமை.
குமுகம் அவர்களைப் பார்த்து சிறுமைப் படுத்தாமல் அவர்களையும் தங்களுக்குள்சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களும் இறைவனால் படைக்கப் பட்ட மனிதர்கள் என்ற எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பு இவற்றில் முன்னுரிமை கொடுக்கப் பட்டு அவர்கள் சமமாக நடத்தப் பட வேண்டும்.
அப்படி இல்லாவிடில் அந்த மனிதர்களைப் பொறுத்தவரையில் மற்ற மனிதர்கள் எல்லோருமே உயர்சாதி மனப்பான்மை கொண்டவராகத்தான் கருதப்படுவார்கள்.
ஆகவே திருநங்கை என்றெல்லாம் அடை இட்டு அவர்களை மற்ற மனிதர்களிடம் இருந்து பிரித்து வைப்பது தகாத செயலாகவே நான் கருதுகிறேன். அவர்கள் பெரும்பாலும் பெண்மையைப் பேணுபவர்களாக இருப்பதால் செல்வி, குமாரி, திருவாட்டி, திருமதி என்றே இயல்பான பெண்ணாகவே பேசப்படவேண்டும். அதுவே சரியான ஏற்புமை.
திருநங்கை என்ற வழக்கை நிறுத்திக் கொள்ளவேண்டும்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
Thursday, September 27, 2007
சேது முனையல் - சிஃபி.காமில் ஒரு கோணங்கி!
Sethu Project - A Strategic blunder ! என்ற தலைப்பில் கீழ்க்கண்ட சுட்டியில்கர்னல். அணில் அத்தாலே என்பவர் கட்டுரை எழுதியிருக்கிறார். (http://sify.com/news/fullstory.php?id=14533111&vsv=SHGTslot3)
சிஃபியிம் அவரை "As a military historian he specialises in insurgency and peace process."என்று அறிமுகப் படுத்துகிறது. சிஃபி.காமுக்கு வேறு நல்ல ஆள் கிடைக்க வில்லை போலும்.
நானும் ஏதோ இராணுவ வரலாறு பற்றிய ஒருவர் எழுதுகிறாரே என்று படிக்கப் போய் இதுவும் ஒரு வெற்றுச் செக்கு என்று உணர்ந்தேன்.
தலைப்பிலே "A Strategic blunder" என்று முழங்கிவிட்டு, கட்டுரைக்குள் Strategy பற்றிய சார்புத் தகவல் எதுவுமே இல்லாமல் கட்டுரை ஆக்கியிருக்கிறார்.
இவர் என்னவெல்லாம் சொல்கிறார்: (ஆங்கிலத்தில் அவரின் எழுத்து)
1) இந்தியா மட்டுமல்ல இசுலாமிய நாடான இந்தோனேசியாவையும் உள்ளிட்டதென்கிழக்காசியாவின் புராணச்சின்னம்.
(a cultural heritage for not just India but many South East Asian countries as well (it is also a
national epic of Muslim majority Indonesia)
இந்தியாவிலேயே கேட்பார் அற்று நீருக்குள் மூழ்கிக் கிடக்கும் ஆதம் மணல் திட்டுகளில் சிறிய அகழ்வு செய்வதற்கு இந்தியாவை மட்டுமல்ல தென்கிழக்காசியவையே இவர் ஏன் ஆதரவுக்கு இழுக்கிறார்?
இதன் சூழ்ச்சி என்ன?
விசயநகரப் பேரரசிற்கு முன் எந்த இந்தியப் பேரரசன் தென்கிழக்காசியா முழுமையும்சென்று அங்கெல்லாம் வைதீகத்தைப் பரப்பினான்?
எப்படி தமிழ்நாட்டு நெறிகளை வைதீகம் விழுங்கியதோ அப்படியே தமிழர்நெறிப் பட்டிருந்த தென்கிழக்காசியாவையும் வைதீகம் மெல்லக் கொன்றது என்பதுதான் வரலாறு.
2) சூழமைவு கெட்டுவிடும் என்று சூழியல் காரர்கள் சிலர் சொல்கிறார்கள்.
(Ecologists and environmentalists object saying it will destroy the fragile eco system in Palk Strait and Gulf of Mannar and rich marine life there)
ஆயிரக்கணக்கான சதுர கி.மீ பரப்பு கொண்ட கடலில், ஆயிரக்கணக்கானகப்பல்கள் பயணிக்கின்ற கடலில், பல நாடுகள் அணுச்சோதனையை செய்கின்றகடலில், துகளூண்டு 1000 அடி நீளத்தில் அங்கிருக்கும் மணற்திட்டுகளைஅகழ்ந்து பாதை ஏற்படுத்துவதனால் சூழமைவு போய்விடும் என்று பதறுபவர்களை என்ன சொல்வது?
ஊரெல்லாம் பெட்ரோல், டீசல் போன்றவைகளால் ஓடும் ஊர்திகள் சூழமைவுக்கு இழைக்கும் பதகத்தை விட கடலில் ஒரு சின்ன இடத்தில் அங்கு வாழும் நீர்வாழ்உயிரினங்களுக்கு ஒன்றும் பெரிதாக ஏற்பட்டு விடப் போவதில்லை. அவைஅங்கே ஏதோ தோண்டுகிறார்கள் என்றால் இடத்தை மாற்றிக் கொண்டு வேறு இடத்திற்குப் பரந்த மனதோடு போய்விடக்கூடிய உயிரினங்கள்.
பெட்ரோல், டீசலால் ஓடும் ஊர்திகளை வேண்டாம் என்று சொல்லிகுதிரை வண்டி, மாட்டு வண்டியில் போவார்களா இவர்கள்? தன்னலக் கோடரிகள் ஊருக்கு உபதேசம் பண்ணியே பிழைப்பு செய்பவர்கள்.
ஆதம் மணல் திட்டுகளை அகற்றுவது சூழமைவுக்குக் கேடாக அமையும்என்றால், அதனை இராமர்தான் கட்டினார் என்றால், அவர் கட்டும்போது சூழமைவுக்குப் பதகம் ஏற்பட்டிருக்காது என்று எப்படிச் சொல்லமுடியும்?
3) மலையாளக்கரையை, மேற்குக் கரையை, இந்தோனேசிய பூகம்பங்களால் சுனாமி தாக்கும் வாய்ப்பு வந்துவிடுமாம்.
(Many express fear that the breaching of Ram Sethu will subject the western coast to tsunami threat since Indonesia and sea around it are prone to earthquakes)
கேப்பையிலே நெய் ஒழுகுகிறது என்று சொல்லி கேட்பவர்களையும் மடையர்களாக ஆக்கும் சங்கதி இது. தென்னையில் தேள் கொட்டினால் பனையில் நெரியேறும் என்பது போல் பேச மடையர்களால் மட்டுமேமுடியும்,
இதை ஆழ்ந்து கவனித்தால் இதன் அரசியல் புரியும். மீண்டும்தமிழகத்திற்குப் பதகம் செய்ய வைதீகத் தலைமையில் மலையாளமும், மராட்டியமும் இருப்பது புரியும்.
மலையாளம் ஏறத்தாழ தமிழர்களுக்குப் பகை நாடு போலவே ஆகிவிட்டது. மராட்டியருக்கு, மும்பையை விட வேறெந்த ஊரும் நிதியம் நிறைந்த ஊராகி விடக்கூடாது.
ஆகவே வேறு வழியில் முடியாதவர்கள் இராமரை இழுத்து வந்துதமிழர்களுக்குக் கேடு விளைவிக்கிறார்கள்.
முல்லைப் பெரியாறு நீர் மட்டத்தை 6 அடிகள் உயர்த்தினால் அணை உடைந்து பல இலட்சம் மலையாளிகள் மாண்டு விடுவார்கள்என்று அச்சுதானந்தன் கட்டி விட்ட கதையை நினைவுக்குக் கொண்டுவந்தால், எப்படி இந்தோனேசியப் பூகம்பம் மேற்குக் கரையை பாதிக்கும் என்பது புரியும். ஆக, இது பச்சைக் கேரள பாணியிலான பொய்த் தண்டோரா.
கிழக்கில் இந்தோனேசியாவில் பூகம்பம் வந்து, அது கிழக்கே இலங்கையை ஒன்றும் செய்யாமல், இலங்கையின் மறைவில் இருக்கும் இராமேச்சுரத்தை ஒன்றும் செய்யாமல் அப்படியே வடக்கு நோக்கி போய்இலங்கையைச் சுற்றிக் கொண்டு பின்னர் அப்படியே தெற்கே திரும்பி, சேதுக்கால்வாயிற்குள் புகுந்து, பவ்வியமாகச் சென்று கன்னியா குமரியில்குமரி அன்னையை வணங்கி, அப்படியே திருவள்ளுவரையும்விவேகானந்தரையும் பார்த்து கண்ணடித்து விட்டு மீண்டும் திசை திரும்பிமேற்காகப் போய், அப்படியே மலையாளக் கரை, கோவா, மராட்டியக் கரைகளைஎல்லாம் பதம் பார்த்து கேரளக் கரையில் உள்ள கனிமங்களை எல்லாம்பாதித்து விடுமாம்.
(What that will do to the rich thorium, monazite, zircon and other mineral deposits on Kerala
beaches is a huge question mark.)
புளுகுணிகளின் கற்பனை வளத்தினைப் பாருங்கள்! இதுவே சதிகாரர்களின் எண்ணத்தைச் சொல்லப் போதுமானது.
4) தற்போது தலைமன்னாருக்கும் இராமேச்சுரத்திற்கும் இடையே ஏற்படுத்தப் படும்கோவண அளவு அகழ்வு, இலங்கை நாட்டின் எல்லைக்குட்பட்டது போலத் தெரிகிறதாம்.அதனால் கட்டி முடிந்த பின்னர் இலங்கை அதைச் சொந்தம் கொண்டாட வரக்கூடியவாய்ப்பு இருக்கிறதாம்.
(Since it appears to be clearly inside the Sri Lankan territorial waters, at some point, Sri Lanka
(with the help of an outside power, obviously) will not only claim control but also may decide to deny us the use of this channel.)
இந்திய இராணுவத்தில் கர்னல் என்ற பதவியில் இருந்த இராணுவக் காரர், தான்இரு இராணுவத்தான் என்று சொல்லிக் கொண்டு, வரையரையில்லாத, தெளிவில்லாத, பொத்தாம் பொதுவில் ஊகத்தின் பேரில் நமது நாட்டின் எல்லையை அயலான் எல்லை என்று கூறுகிறார்.
நாட்டைக் காட்டிக் கொடுக்கிறாரா அல்லது காக்கிறாரா?
கேரளாவைச் சேர்ந்த நாராயணன் இலங்கை தொடர்பான ஆலோசகராகவும்,கேரளாவைச் சேர்ந்த அந்தோனி இராணுவ அமைச்சராகவும் இருப்பது கவனிக்கத் தக்கது.
ஒரு இராணுவத்தாருக்கு தனது நாட்டின் எல்லை என்பதே தெரியாமல்ஒரு கட்டுரை வரைவது அவரின் நம்பகத் தன்மையைக் காட்டவில்லை.
அதையும் தொடர்ந்து சீனப்படை உள்ளே நுழைந்து விடுமாம். அமெரிக்கர்கள்என்ன செய்வார்கள் என்றே தெரியாதாம்.
இந்தியாவைச் சுற்றி பெரிய கடற்கரையை வைத்துக் கொண்டு, இந்த ஓட்டைக்குள் சீனாவும், அமெரிக்காவும் என்னென்னவோ செய்து விடுவார்களாம்.
எலியின் பொந்தில் வாழும் கோழைகளுக்கு இப்படித்தான் உளறத் தெரியும்என்று சொல்லி மேலும் அவர் சொல்லி இருக்கும் கருத்துகள் வைதீகர்களைப் போன்ற ஒரு மனநோயாளியின் கருத்துகளாகவே தெரிகின்றன என்பதோடு, சிஃபியில் வந்த கட்டுரைகளில் மட்டமான கட்டுரை இது என்றும் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

Saturday, September 22, 2007
விசயகாந்தை என்ன சொல்வார்கள்?
இராமர் எந்தக் கல்லூரியில் படித்தார் என்று கேட்டது தவறு என்றே நாம் சொல்லுவோம். அதற்கு பா.ச.க கலைஞர் தலையை வெட்ட வேண்டும் என்று சொன்னதையும் நாம் சரி என்றே வைத்துக் கொள்ளலாம்.
இவர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்திருக்கும் விசயகாந்த், "திருவள்ளுவர் எந்தக் கல்லூரியில் படித்தவர்?" என்று கேட்டிருக்கிறார்!!
அதோடு கற்புக்கரசி கண்ணகி மதுரையை எரித்தாள் என்பதை நம்பும்போது "இராமர் பாலம் இருந்ததை ஏன் நம்ப மறுக்கிறீர்கள்?" என்றும் கேட்டு கண்ணகியையும் வம்புக்குள் இழுத்திருக்கிறார்.
நாம் ஏற்கனவே சொன்னபடி கருணாநிதி சொன்னது தவறு!
அந்தத் தவறுக்காக பா.ச.க கருணாநிதியின் தலையை வெட்டச் சொன்னதையும் சரியான பதிலடியாகவே நினைத்துக் கொள்வோம் என்று வைத்துக் கொண்டால்,
"திருவள்ளுவரையும், கண்ணகியையும் பழித்துப் பேசியிருக்கும் விசயகாந்தை என்ன சொல்வார்கள்?"
தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ஒரு பெரிய முனையலை நிறுத்தி விட்டார்கள் சதிசெய்து. அந்த வருத்தம் எதுவுமில்லாமல் முரளி மனோகர் சோசி என்ற பா.ச.க காரர் சொன்னஅதே பாணியில் கருணாநிதிக்கு வரும் வரும்படி போய்விடும் என்றுதான் இவர்கள் கவலைப் படுகிறார்கள் என்று பேசி
"தமிழ்நாட்டு நலன்களைக் காட்டிக் கொடுக்கும் இவர் அரசியலில் வந்துதமிழகத்தை ஏற்றி விடுவாரா?"
வேதாந்தி பேசியது சரி. அவரின் குருதி அல்லது அரத்தம் இராமரைக் கடவுளாக ஏற்றுக் கொண்ட வைணவ...அல்ல அல்ல மன்னிக்கவும் வடக்கு வைதீக அரத்தம். அதனால் அவர் கருணாநிதியை எதிர்த்துப் பேசி இருக்கிறார். வேதாந்தியைப் பொருத்தவரையில் அது அவருக்கு சரி.
அப்படியென்றால், தமிழ்நாட்டின் இரு கண்கள் போன்ற திருவள்ளுவரையும் கண்ணகியையும் பழித்துப் பேசி இருக்கும் விசயகாந்தின் அரத்தம்/குருதி எதைச் சேர்ந்தது?

சேதுக்கால்வாய் - வைதீகப் பட்டிப் பதகர்களின் சதி!
வடநாட்டு வைதீகச் சகுனிகளின் சதிச் செயல் திகைக்க வைக்கின்றது. இராமர் குறித்த கலைஞரின்பேச்சைக் குறை கூறுபவர்களும், குறை கூறாதவர்களும், அதற்கு முன்னர் ஒன்றை எண்ணிப் பார்க்கவேண்டும்.
ஏன் இந்தச் சகுனிகள் இவ்வளவு நாள் பொறுத்திருந்தார்கள் என்று.
இராமர் சர்ச்சை என்ன மத நம்பிக்கையில் கிளர்ந்த உணர்வா? கொந்தளிப்பா? - இல்லை. திட்டமிடப்பட்டச் சதியின் இறுதிக்காட்சிகள்.
மூன்று வருடங்களாக சேதுக்கால்வாய் முனையல் செயல்பட்டு வருகிறது, குறிப்பாக கடந்தஇரண்டு வருடங்கள் களப்பணிகள் நடந்து வருகின்றன. அப்பொழுதெல்லாம் என்னென்னவோவழக்குப் போட்டார்கள். உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது அவ்வழக்குகளை. இராமர் பெயர் சொல்லும் குரங்குப்படைகளும், அ.தி.மு.க போன்ற கரடிப் படைகளும் என்னென்னவோ காரணங்கள் சொல்லி தடை செய்யப் பார்த்தன.
ஆனால், தமிழர்களின் நலன்களுக்கு எதிராக மட்டுமே செயல்பட தமிழகத்தில்வாழும், குரங்குப் படைகளின் நேசக்குரங்கு ஒன்று தற்போதுவழக்குப் போட்டு சேதுக்கால்வாய்ப் பணிகளை நிறுத்தி விட்டது.
நண்பர்களே, எண்ணிப் பாருங்கள்!
1) ஏன் இவ்வளவு நாள்கள் கழித்து (இரண்டு முழு வருடங்கள் கழித்து) இந்த வழக்குதடையை ஏற்படுத்தியிருக்கிறது ?
2) ஏன் இதற்கு முன்னர் போடப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப் பட்டன?
இதை நன்கு சிந்தித்துப் பார்த்தால் இதன் சூழ்ச்சி புரியும்.
"சகுனிப்பட்டாளம் நன்கு காத்திருந்து, திட்டமிட்டு, பரிவாரங்கள், மடங்கள், நீதிமன்றங்கள், ஏன், பேராயக் கட்சிக்குள்ளும் ஆள் பிடித்து, மிகப் பக்குவமாகக் காய் நகர்த்தித் தடை வாங்கியிருக்கிறார்கள்."
"அப்பொழுதே இந்தத் தடையை ஏற்படுத்தி இருந்தால் நடுவண் அரசும் தி.மு.கவும்ஏதேனும் செய்து தடைகளை உடைத்திருக்க முடியும். ஆனால், நடுவண் அரசு மூனரை ஆண்டு ஆட்சி ஓடிய பின்னர், இவ்வாறு தடையை ஏற்படுத்தினால், தடை, வழக்கு, தடை என்று கொண்டு போனால், பேராயக் கட்சியின் ஆட்சியும் முடிந்து போகும் அல்லது அரசு கவிழ்ந்து போகும். அப்படி ஆகி விட்டால், அரசியல் அரங்கு மாறி விடும். தி.மு.கவின் வலுவும் மாறியிருக்கும். அந்தச் சூழலைப் பயன்படுத்தி சேதுக்கால்வாய் முனையலையே ஒட்டு மொத்தமாகத் தமிழகத்திற்கு வராமல் செய்து விடலாம்" என்பதே பா.ச.க, இரா.சு.ச, வி.இ.ப, ப.த, அ.தி.மு.க போன்ற சகுனிகளின் திட்டம்.
அந்தச் சதியை மிக அழகாகச் செய்திருக்கிறார்கள் இராமர் பெயரால் அரசியல்செய்யும் குரங்குப்படைகளும் கரடிப் படைகளும்.
சேதுக்கால்வாய் முனையல் துவங்கப் போவதாகச் சொன்ன உடனேயே, அதனை முதலில் எதிர்த்தவர் இந்திய வைதீகக் கரடிப் படையின்முன்னணிப் போராளியான செயலலிதா. அவரைத் தொடர்ந்து அல்லது அவரோடு, இராமர் பெயரால் அரசியல் செய்து வரும் அனைத்திந்திய குரங்குப் படைகளும் எதிர்த்தன. அதனைத் தொடர்ந்து பல மாய-அறிவாளிகள் எல்லாம் பல்வேறு காரணங்களைச் சொல்லிஎதிர்த்தனர். ஈராண்டுகளுக்கு முன்னால் இவர்கள் சொன்ன காரணங்கள்எல்லாம்,
1) கடலின் சூழமைவு கெட்டுப் போகும் ( கப்பல் கடலின் மற்ற பகுதிகளில் போனால் சூழமைவு கெடாது :) )
2) மீன்களெல்லாம் செத்துப் போகும் (மீன், நண்டு, ஆமை இதெற்கெல்லாம் கவலைப்பட்டதை எண்ணிய இவர்களைவள்ளலார் பெருமான் வாழ்த்துவாராக! )
3) சில அரிய வகை மீன்கள் அருகிப் போகும்
4) மீனவர்கள் பாதிக்கப் படுவார்கள் (நல்லவேளை நரிக்குறவர்கள் எல்லாம் பாதிக்கப் படுவார்கள் என்று சொல்லவில்லை;-) அது வரைக்கும் இந்த மூளைகளைப் பாராட்ட வேண்டும்)
5) அந்நிய நாட்டுப் படைகள் தொபுக்குடீ என்று வந்து குதித்து (நீந்தி?) விடுவார்கள்
6) இந்த வழியாக வரும் கப்பல்களுக்கெல்லாம் ஒன்னும் செலவு மிச்சம் ஆகாது; அல்லாமே நாசம் - பன்ற செலவெல்லாம் எள்ளு!
7) ஒரு படி மேலே போய், இந்த வழியில் கப்பல் வந்தால் தற்போதை விட அதிகம் செலவாகும்
8) இப்ப வெட்டுற கால்வாயில் மறுபடியும் மண் வந்து மூடிடும்
என்றெல்லாம் சொல்லி தமது பொறாமையை அள்ளிக் கொட்டினார்கள்.
இன்றைக்கு அடாட்டா கனிமத் தொழிற்சாலை வருவதற்கு அப்பகுதி
மக்களை எப்படித் தூண்டிவிட்டுத் தகராறு செய்கிறார்களோ அதேபோல
மீனவர்களைத் தூண்டுவது முதல்அத்தனை எதிர்ப்பையும் செய்து வந்தார்கள்.
டி.ஆர்.பாலுவின் திறமையாலும் உழைப்பாலும், ப.சிதம்பரத்தின் முழு ஆதரவாலும் மற்றும் சோனியா, மன்மோகன் மற்றும் கலைஞரின் முழு ஈடுபாட்டாலும்பல படிகளைக் கடந்து வந்த இந்த முனையலை இன்று நிறுத்தி விட்டார்கள் இந்தக்குள்ள நரிகள்.
நிறுத்தியதோடு இல்லாமல் அதனை இராமர் பெயருக்கு திசை திருப்பி விட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையைப் பாராட்டி, தமிழக நலன்கள் கெட்டுப் போவதில் இந்த வைதீகச் சண்டியர்களுக்கு இருக்கும் அக்கறையின் வெளிப்பாடுதான்
1) சுப்பிரமணியன் சாமியைப் பாராட்டி சங்கராச்சாரியார் அறிவித்த சிறப்பு பூசை
2) பா.ச.கவின் வேதாந்தி என்ற பட்டிப் பதகன், கலைஞரின் தலையை வெட்ட தீவிரவாதிகளை ஏவியதும்
தமிழ்நாட்டின் மேல் அக்கறை உள்ள நண்பர்களும் தமிழ் மக்களும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் துளியும் தொடர்பில்லாத
இந்து என்ற பெயரில் இயங்கும் வைதீகச் சழக்கர்களையும்
அவர்களின் சதிக் கூட்டையும் நன்குணரவேண்டும்.
(நான் தமிழ் வைணவர்களையோ, தமிழ்ச் சைவர்களையோ சொல்லவில்லை.)
அற்புதமான சைவ, வைணவ நெறிகள் இருக்க, நாய்களும் பேய்களும் குரங்குகளும்கரடிகளும் நிறைந்த வடநாட்டு வைதீகத்தினைக் களைந்து சிந்திக்க வேண்டும்.
அ) கேரளாவிடம் கடும் போராட்டம் நடத்தியே சேலம் கோட்டம் மீட்கப் பட்டது
ஆ) இன்னும் கேரள, கர்நாடக அரசுகளின் தண்ணீர்ச் சரவல் அப்படியே உள்ளது.
இ) இராமர் பாலம் இராமர் பாலம் என்று குரைத்துக் கொண்டிருக்கும்
பா.ச.க, அ.தி.மு.க மற்றும் பல கட்சியினர், அந்தப் பாலத்திற்கு அந்தக் கரையில் அவல நிலையில் சோறு தண்ணிக்கும் அல்லாடிக் கொண்டிருக்கும் நமது சொந்த இன மக்களுக்கு சோறு கூட கொடுக்க விடாமல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஈ) சேதுக்கால்வாய் முனையலுக்கு ஆப்பு வைத்திருக்கிறார்கள்.
தமிழர்களுக்கும் வைதீகர்களுக்கும் ஆன இந்தப் போராட்டம் ஓயாதுஎன்றே தோன்றுகிறது. "நிதியம் சொரிந்த நீவி போல" என்று அகநானூறு சொல்லும். அது போலக் கிடந்த சங்கராச்சாரியாரால் இன்று எழுந்து சேதுக்கால்வாய் நிறுத்தியதனைக் கொண்டாட முடிகிறதென்றால் இவர்கள் தமிழர்களுக்குச் செய்யும் இடர்களுக்கு முடிவு என்ன?
சிங்களக் கைக்கூலிகளாகவும் வேறு சில நாடுகளின் கைக் கூலிகளாகவும் செயல்படும் கூட்டத்தைக் கண்டு கொள்ள இதை விடச் சிறந்த வாய்ப்பு இருக்க முடியாது.
இராமர் எந்தக் கல்லூரியில் படித்தார் என்று கேட்டால் "பட்டிப் பதகர்களே தலையை வெட்டி விடுவீர்களா? ".
தி.மு.கவும் அதன் கட்சித் தலைவரான கலைஞரும் மிகப் பெரிய கோழைகளாகவே தெரிகிறார்கள்.
வைதீகப் பேயாட்டம் போட்ட செயலலிதா கலைஞரை அடித்தபோதே உரோசம் வராத இவர்களுக்கு கருணாநிதியின் தலைக்கு விலை வைத்த போதுமட்டும் உரோசம் வந்து விடுமா என்ன?
...நாக.இளங்கோவன்

Thursday, September 13, 2007
பழ.நெடுமாறனின் உண்ணா நோன்பு
பழ.நெடுமாறன் அவர்களின் உண்ணா நோன்பு தூய்மையானது.
தமிழக அரசு மற்றும் நடுவண் அரசுகளின் கெடு போக்கு கண்டிக்கத்
தக்கது. தமிழ் மக்களுக்கு உணவுப் பொருள்கள் கூட
கொடுக்கக் கூடாது என்பது கயமைத்தனம்.
வழக்கம் போல தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், செயலலிதாவையோ,
கருணாநிதியையோ, சோனியாவையோ கையைக் காட்டி விட்டு
தம்போக்கில் போகும் கயமைத்தனத்தையும் செய்து வருகின்றனர்.
இந்திய-ஈழ அரசியல் சரவல்கள் எவ்வளவோ இருப்பினும்,
உணவுப் பொருள்களை செஞ்சிலுவைச் சங்கம் வழியாக அனுப்புவதற்கு
தமிழக முதல்வர் முயற்சிகளை எடுத்திருக்க முடியும். ஆனால் அவர்
செய்யவில்லை. இன்னும் கூட காலம் தாழ்ந்துவிடவில்லை. இப்பொழுது
கூட செய்யலாம்.
பழ.நெடுமாறன் போன்ற உலகத் தமிழர் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் மட்டுமே போராடும் நல்லோர்களையும்
அரசுகள் காவு கொண்டு விடுமோ என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது.
திலீபன் உண்ணாநோன்பு, சங்கரலிங்கனார் உண்ணா நோன்பு
ஆகியவற்றை எண்ணிப் பார்க்கையில் நமக்குக் கவலையே ஏற்படுகிறது.
கலைஞர் அவர்களே வரலாற்றுப் பணி செய்யாவிடிலும்,
'வரலாற்றுப் பழி' வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று
சொல்ல வேண்டியிருக்கிறது.
வழக்கம் போல இவ்வளவுக்கும் கருணாநிதி மட்டுமே காரணம் என்று
கையைக் காட்டி விட்டு வாய்ப்பந்தல் போட்டுக் கொண்டிருக்கும்
வைகோ, அவரின் 2 பாராளுமன்ற உறுப்பினர்களையும் பதவிவிலகச்
சொல்லி நெடுமாறனின் உண்ணாநோன்பிற்கு வலு சேர்க்க வேண்டும்!
கருணாநிதியிடம் மட்டும் வீரத்தைக் காட்டும் இராமதாசு,
ஈழத்தமிழ் மக்களுக்கு உணவுப் பொருள்களை அனுப்பாத
தி.மு.க அரசிற்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும்!
உண்மையில் வீரம் மிக்கவராக இருந்தால் அவரின் சட்டமன்ற உறுப்பினர்களையும் பதவி விலகச் சொல்லவேண்டும்.
அதேபோல, தனது ஆதரவை நடுவண் அரசிற்கும் விலக்கிக் கொண்டு
நடுவண் அரசில் இருந்து விலக வேண்டும்.
திருமாவளவனும் தனது 2 சட்டமன்ற உறுப்பினர்களை விலகச்
சொல்லி உண்ணா நோன்பிற்கு வலு சேர்க்கவேண்டும்.
மற்ற கட்சிகள் அனைத்துமே (பேராயம், பா.ச.க, 2 பொதுவுடைமைகள்,
அ.தி.மு.க) தமிழர் நலனுக்கெதிரானவை. ஆகையால்
இந்த 3 பேரும் போராடினால்தான் உண்டு;
இந்த 3 பேர்களிடமும் இருக்கும் 26 சட்டமன்ற உறுப்பினர்களையும் 8 பாராளுமன்ற உறுப்பினர்களையும் விலகச் சொன்னால் ஓரளவு
மக்கள் மற்றும் அரசுகளின் கவனத்தைத் திருப்ப இயலும்.
சகோதரி பாசத்திலும் பிள்ளைப் பாசத்திலும் மயங்கிய
இவர்கள் செய்வார்களா? தெரியவில்லை.
பழ.நெடுமாறன் அவர்களின் பணி தமிழர்களுக்கு
நிறைய தேவை! ஆதலின் நோன்பை அவர் கைவிட
வேண்டும்.

Sunday, September 09, 2007
அன்புமணியின் கிராம சேவை சட்டம்!?
மருத்துவ மாணவர்களை கிராம சேவை செய்யக் கட்டாயப்படுத்தும்திட்டம், கிராமங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற "நல்ல எண்ணம்" என்று எண்ணினாலும் அதனை நடைமுறைப் படுத்தும்முறை மட்டம்.
1) மருத்துவப் படிப்பு என்பது செல்வந்தர்களுக்கு செல்வப் படிப்பாகவும்மற்றவர்களுக்கு காலங்கடந்துதான் வாழ்வளிக்கும் படிப்பாகவும்இருந்துவருகிறது. ஆறரை ஆண்டுகாலம் ஒரு பட்டம் வாங்கக் காத்திருப்பது என்பது மிகக் கொடுமையானது.
2) எம்பிபிஎசு முடித்து மேலே படிக்கப் போவோர்களை கட்டாயப்படுத்தி படிப்பில் இருந்து தள்ளி வைப்பது போல இது இருக்கிறது.
3) இதையெல்லாம் விட, சரவல்களால் வாடிக் கொண்டிருக்கும்கிராமங்களில் பணி புரிய, பயிற்சியும் பட்டறிவும் இல்லாதமாணவர்களைக் கொண்டு போய் அங்கு பணியில் போடுவதுஎந்த வகையில் மக்களுக்குப் பயனளிக்கும்?
4) பட்டறிவு இல்லாத மாணவர்களுக்கு அங்கே பட்டறிவு கிடைக்ககிராம ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் என்ன வசதிஇருக்கிறது?
5) பட்டறிவு இல்லாத கன்றுகளை கிராமங்களுக்கு அனுப்புந்திட்டம் பட்டறிவு கொண்ட மருத்துவர்களின் கிராமப் புறக்கணிப்பைஏற்புமை ஆக்கிவிடுகிறது.
கிராமங்களின் மருத்துவ நிலையங்கள்/அமைப்புகள்வசதி கொண்டவையாக ஆக்கப் பட்டு, குறைந்தது 5 ஆண்டுகள் பட்டறிவு கொண்ட மருத்துவர்களை குறைந்தது 3 ஆண்டுகள் ஏதாவது ஒரு கிராமத்தில்பணி புரிய வைக்கவேண்டும். அதுமட்டுமல்லாது அந்த மருத்துவர்களுக்கும் நல்ல ஊதியம் அளிக்க வேண்டும்.
அதனை மறுக்கும் மருத்துவர்களின்பட்டங்களை வெடுக்கென்று பறித்து விட சட்டம் செய்ய வேணும்.
அதுவே கிராமங்களைக் காப்பாற்றும்.
எய்ம்சு வேணுகோபாலிடம் மட்டுமே அடத்துக்கு என்றேவிளையாண்டு கொண்டிருப்பது போல மாணவர்களிடம் விளையாடாமல், துணிச்சலான முடிவாக "பட்டறிவு கொண்டமருத்துவர்களை கிராமத்துக்கு அனுப்பவேண்டும்".
துணிவில்லாது கொல்லைப்புற அரசியலாகத் தேர்ந்தெடுத்துநடத்தும் இராமதாசு போல இல்லாமல் இந்த விதயத்தில்அன்புமணி துணிவாக சட்டம் செய்ய வேண்டும்.
இல்லாவிடில் அமைதியாக இளைஞர்களை பாதிப்பதோடல்லாது கிராம மக்களுக்கும் புண்ணியமில்லாத தற்போதைய சட்டத்தைப் பின்னெடுத்துக் கொண்டு விடவேண்டும்.
(பா.ம.கட்சிக் காரர்களே, தில்லியில் உட்கார்ந்து கொண்டு மூர்த்தியையும் வேலுவையும் விட இவர் என்னதான் செய்தார் என்று கணக்குப் பார்த்து "சின்ன ஐயா" என்பதற்கு பதிலாக "தத்தி ஐயா" என்று சொல்லிவிடுவார்களோ
என்று ஐயுற வேண்டியிருக்கிறது. அதனால் அன்புமணி துணிவாகச்
செயல்படவேண்டும் :) )

Subscribe to:
Posts (Atom)