இடஒதுக்கீடு என்பது அறிஞர்கள், சீர்திருத்தவாதிகளின் சிந்தனைகளுக்குட்பட்டு, வடநாட்டில் முளைத்து தமிழகத்தைக் காவு கொண்ட வைதீக இந்துமதத்தின் வருண வேறுபாட்டுக் குமுகக் கொள்கையினாலும், வடநாட்டில் பரவியிருந்த கிழாரியம் தமிழகத்திலும் பரவி செய்த கொடுமைகளாலும் ஏற்பட்ட கல்வி, அக, பொருளியல் ஏற்றத்தாழ்வுகளுக்குச் சமன் கொடுக்க வந்த ஒரு திட்டம்.
இந்தத் திட்டமும் ஒரு கால வரையறையை ஏற்படுத்தித்தான் செயல்
படுத்தப் பட்டது. இந்தக் கால வரையறை எதிர்பார்த்த பலன் குமுகத்திற்கு கிடைத்திருக்கிறது என்ற மன நிறைவு ஏற்படும் வரை தொடர்வதிலும், அது தொடர்வதற்கு இடர்கள் ஏற்படுமானால் அதை மறுத்துப் போரிடுவதிலும் நமக்கு எந்த கருத்து வேறுபாடும் குமுக அக்கறையில் இருக்க முடியாது.
அதேபோல, மனிதரே மனிதனை விலங்குகளிலும் கீழாய் நடத்தி, ஆணவத்தாலும் திமிராலும் உரிமை, தன்மானம் என்பதனை உடலிலும் அகத்திலும் மனிதனிடம் இருந்து பறித்துக் கொடுமை புரிந்த அயல் மதமான வைதீக இந்து மதத்தை விட்டே மாற்று மதங்களுக்கு ஓடச் செய்து, ஏனைய அயல்நாட்டு மதங்களை ஓங்கி வளர உற்ற துணையாக இருப்பதுவும் இருந்ததுவும் வைதீக இந்து மதம்தான். விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டுச் சிந்திப்பவர்க்கு இறுதியில் கிடைக்கும்விடை (bottom line)
இதுவாகத்தான் இருக்க முடியும்.
பொருளியல், கல்வி நிலைகளில் இடஒதுக்கீடு என்பதனைச்சமன் தரும் கொள்கையாக ஏற்றுக் கொண்டவர்கள் பல பேர்.
அதேபோல, இந்து மதத்தை விட்டே போவதுதான் சரியானசமனைத் தரும் என்ற கொள்கையில் மதம் மாறினவர்களும்பல பேர்.
இந்த இரண்டு சமன்பாட்டு முயல்வுகளுமே ஒரு தனி மனிதன்என்ற பார்வையில் தனிமனிதனுக்குப் பயனையே தந்திருக்கின்றன என்பது அங்கை நெல்லி.
ஒரு மனிதனின் உரிமையும், அவன் தன்மானமும் மிதமிஞ்சி
தாக்குறும்போது அதன் விளைவுகள் இப்படித்தான் போகும்என்பதனை சார்புள்ளம் இல்லாமல் பார்ப்பவர்களுக்குத் தெளிவாகப் புரியும்.
அண்மையில் மும்பாயில் அம்பேத்கர் விழா ஒன்றில் ஒரு இலக்கம் மக்கள் இந்து மதத்தில் இருந்து விலகி புத்த மதத்தில் சேர்ந்திருக்கின்றனர் என்ற செய்தியே இன்னும் இந்தியாவில் மனிதனை மனிதனாக நினைக்கும்எண்ணம் வளரவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு மட்டுமல்ல, இந்து மதத்தினர் இன்னும் திருந்தவில்லை என்ற செய்தியையும் எடுத்துச் சொல்கிறது.
ஒரு இலக்கம் பேர் ஒரே கணத்தில் தங்கள் அகத்தினைமாற்றிக் கொள்கிறார்கள் என்றால், அவர்கள் அத்தனைபேரும் காசுக்காக மதம் மாறிவிட்டார்கள் என்று குற்றம்சாட்டி விடமுடியுமா?
அவர்கள் அத்தனை பேருமே அறிவற்றவர்கள் என்றுசொல்லி விடமுடியுமா?
ஆனால், இந்து மதத்தின் காவலாளிகள் இந்த இரண்டைமட்டுமே பல்வேறு வசனங்களில் இழைத்து வாய்ப்பந்தல் போட்டு வருகிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, இந்தக் குமுக ஏற்றத்தாழ்வுகளைச் சமன்படுத்த ஒரு மனிதன் ஒன்று இந்து மதத்திற்குள்ளேயே இருந்து கொண்டு அரசாங்கத்தின் இடஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பெற்றுத் தான் இழந்தவைகளை மீண்டும்பெற்றுக் கொள்கிறான்.
வேறொரு மனிதன் இந்த மதத்தையே விட்டொழித்து மற்ற நெறிகளைச் சார்ந்து தனது மான மரியாதைகளை மீட்டெடுத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான்.
பல்வேறு சமயச் சார்பற்ற சிந்தனையாளர்களும், குமுக அக்கறையாளர்களும் இந்த இரண்டினையுமே மிக யதார்த்தமாகவே ஒத்துக் கொண்டிருக்கின்றனர்.
அண்மையில் அ.தி.மு.க அரசு மத மாற்றச் சட்டம்கொண்டு வந்தபோது அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தச் சிந்தனைத் தளம் அதனை எதிர்த்தது.
தற்போதைய தி.மு.க அரசு, இட ஒதுக்கீட்டுக் கொள்கையினை எல்லா மதங்களுக்கும் எடுத்துச் செல்கிற சட்டத்தைக் கொண்டுவர இருக்கிறது.
இந்தச் செயல் இடஒதுக்கீட்டின் அடிப்படையையே தகர்த்து விடுகிறது.
அதோடு, ஏனைய மதங்களிலும் வருண வேறுபாடுகள் உண்டென்ற சூழலை ஏற்படுத்துகிறது.
சாதிச் சமனுக்காக வந்த இடஒதுக்கீடு மதத்திற்கு என்று ஆய், வருங்காலங்களில் இந்து, புத்தம், இசுலாம், கிறித்துவம், சமணம், சீக்கியம் என்று தெருத்தெருவாக பாத்தி கட்டிஅடித்துக் கொண்டு எல்லோரும் சாவதற்கு வழி வகுக்கும்.
சாதிச் சமனுக்காக வந்த இடஒதுக்கீடே இன்னும் சரியாகப் போய்ச் சேரவேண்டியவர்களைப் போய்ச் சேராமல் இருக்கும் இந்த நிலையில் கூட, "இடஒதுக்கீட்டுக்குள் இருக்கும் சாதிகள் அடித்துக் கொண்டதில்லை."
ஆனால், மதவாரியாக இது நிகழுமானால், மத எண்ணிக்கைப்போர் வந்து, பின்னர் குமுகத்தை மேலும் கூறு போட்டு விடும் என்பது உறுதி.
ஒரு மதத்திற்குள் இருக்கும் சாதிகள் அல்லது பிரிவுகள் அடித்துக் கொள்வதற்கும் மதம் என்ற நிலையில் அடித்துக்கொள்வதற்கும் உள்ள வேறுபாடுகளை நாம் நிறைய பார்த்துள்ளோம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த மதமானாலும் தமிழர் என்றஅடிப்படையில் தாய் பிள்ளையாகப் பழகும் பண்பு மிகவும்அதிகம். இந்த மண்ணின் மாண்பும் தொன்மமும் அது.
தமிழர் எனும்போது மதம் என்ற பார்வையில் பார்க்காத இந்தத் தமிழ்க் குமுகத்தை மத வாரியான இட ஒதுக்கீடு என்ற "பொருளியல் வாய்ப்பு" கெடுத்து நாசப்படுத்தப் போகிறது.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பண்போடு இருந்தசங்க காலமாகினும் சரி, எல்லா மதங்களையும் ஒப்புறவோடுபோற்றியது மட்டுமல்லாமல், அம்மதங்களுக்கு நிவந்தங்களும் கொடுத்த பிற்காலச் சோழர் காலமாகினும் சரி, பல்வேறு சூழல்களைப் பார்த்து விட்ட நலமும், அவலமும் கலந்தே இருக்கும் தற்போதைய காலமாகினும் சரி, மதம் என்பது "பெரும்பாலும்" (சில முன் பின் விதயங்கள் இருந்திருக்கலாம்) மிகப் பண்பாகவே பழக்கப்பட்டும் பார்க்கப் பட்டும் வந்திருக்கின்றது தமிழ் மண்ணில்.
காசு என்ற இடஒதுக்கீடு வாய்ப்பு மதவாரியாகக் கட்சி கட்ட வைக்கப் போகிறது.
மாண்புகளும் பண்புகளும் தோற்கப் போகின்றன.
போகாத ஊருக்கு வழி காட்டுகிறார் கலைஞர்!
அது மட்டுமல்ல, சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களே இதனைப் பெரிதும் விரும்பாத நிலையில் இவர் என்னவோ காற்றிலே கத்தியைச் சுழலவிடுகிறார்.
முற்பட்ட என்று சொல்லக் கூடிய எந்தச் சாதியிலும் நான்பிறக்கவில்லை. அதே சமயம் இடஒதுக்கீட்டினால் எனக்கோஎனது குடிவழிக்கோ மயிர் அளவு கூட, (மன்னிக்க வேண்டும்) மீண்டும் சொல்கிறேன் - "மயிருக்குக் கூட பயன் இல்லை". ஆனால், அதனால் பயன் அடைந்தவர்களை எனது கிராமங்களிலும் ஊர்களிலும் பல ஆண்டுகளாகப் பார்த்து மிகப் பெருமையடைகிறேன்.
இடஒதுக்கீட்டின் பயனால் மாறியிருக்கும் மக்களை எல்லாம் நினைத்து
நான் வியந்து போயிருக்கிறேன் எனது ஊர்களில்.
தற்போது அந்த நல்ல திட்டம், அரசுகளும் சிந்தனையாளர்களும், ஏன் கலைஞரும் போராடிக் கொண்டு வந்த முன்னேற்றங்களை பாழாக்கப் போகிறார் கலைஞர் என்று உறுதியாகச் சொல்லமுடிகிறது.
ஏனெனில் இந்த முயற்சியின் "அடிப்படையில் தெளிவில்லை".
அடிப்படையில்லாத கலைஞரின் இந்த முயற்சி வாக்குகளை ஒரு
தேர்தலுக்கு மட்டுமே பெற்றுத் தரும்.
கலைஞரைத் தவிர தமிழகத்தில் இருக்கும் ஏனைய பெரிய கட்சிகளின் தலைமைகளுக்கும் சிந்தனைவற்றி விட்டது போலும். அவர்களும் வாக்குகளுக்குப் பயந்து வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள்.
அல்லது நமக்கென்ன நம்ம தோட்டம் நல்லா இருந்தா போதும்என்று நினைக்கிறார்கள். தொலை நோக்குப் பார்வையில்லாத "தன்னல வல்லடிக்காரர்கள்" என்றே தமிழக அரசியல் வாதிகளைச் சொல்லவேண்டி உள்ளது.
இதிலேயே ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்!
சாதி வாக்கு வங்கிக்கே தொடை நடுங்கும் இந்த அரசியல் வாதிகளா நாளை மதவாரியான பெரும் சரவல்களைத் தீர்த்து விடுவார்கள்?
இவர்களை நம்பி எல்லா மதங்களும் ஏமாறப் போகின்றன
அல்லது எல்லாம் அடித்துக் கொண்டு சாகப் போகின்றன.
எது எப்படியோ, கலைஞர் ஒரு "வரலாற்றுப் பிழையை செய்துகொண்டிருக்கிறார்" என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
பிழை நடக்கவேண்டுமானால் அது நடந்தே தீரும் போல!
அன்புடன்
நாக.இளங்கோவன்
31/மே/2007
Thursday, May 31, 2007
Wednesday, May 30, 2007
இராமர் பாலம்!
கட்டுரையாசிரியர் : திரு.மணி.மு.மணிவண்ணன்.
==============================================================
தமிழ் உலக மடற்குழுவில் இருந்து எனக்குக் கிடைத்த
நண்பர் மணிவண்ணனின் கட்டுரை. அண்மையில் படித்த கட்டுரைகளில்
உயர்வானது இது.
நன்றி: மணிவண்ணன், தமிழ்-உலகம்

ராமர் பாலம், ராமர் சேது என்ற பெயர்கள் இந்திய நாடாளுமன்றத்தையே சூடாக்கிக் கொண்டிருக்கும் நேரம். "ராம ஜன்ம பூமி" என்ற பெயரால் அரசியல் பிழைப்பு நடத்தி ஆட்சிக்கு வந்த அதே கூட்டம் இப்போது "ராம கர்ம பூமி" என்ற பெயரால் மீண்டும் ஆட்சியைக் கைப்பிடிக்க முயற்சி எடுக்கிறது போலும். நாசாவால் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட படத்திலேயே ராமரின் வானரப் படைகள் ராமேஸ்வரத்திலி ருந்து தலைமன்னாருக்குக் கட்டிய திரேத யுகத்தில் கட்டிய பாலம் தெளிவாகத் தெரிகிறது என்று ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன்பு பரபரப்பான மின்னஞ்சல்கள் பறந்து கொண்டிருந்தன. பண்டைய வானரங்கள் இருக்கட்டும், இன்றைய மனிதர்களே, இலங்கையின் மீது படையெடுக்க எண்ணிப் பாலம் கட்ட எண்ணுகிறார்கள் என்றே வைத்துக் கொள்ளுவோம். அதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? போக்குவரத்துக்குப் பாலம் கட்டும் அமைப்பு வேறு, படையெடுக்கக் கட்டும் பாலத்தின் அமைப்பு வேறு. போக்குவரத்துக்குப் பாலம் கட்டுபவர்கள் எப்போதும் நி லைத்து நிற்கும் எண்ணத்துடன் கட்டுவார்கள். பாலத்தின் அகலம் சற்றுக் கூடுதலாகக் கூட இருக்கலாம். கட்டுமானப் பொருள்கள், செலவு, கட்டுவதற்குத் தேவையான ஆட்கள், கட்டத் தேவையான நேரம், கடல் மீது கட்டுவதால் கடல் அரிப்பைச் சமாளிக்கத் தேவையான நுட்பம், என்று எல்லாவற்றையும் சிந்தித்துத்தான் கட்ட வேண்டியிருக்கும். பொதுவாக மனிதர்கள் கட்டும் பாலம் நேர்க்கோட்டில் அமைந்திருக்கும். செலவு அதனால் மி ச்சமாகும். அப்படியே வளைந்து இருந்தாலும், தீவுகளுக்கும், திட்டுகளுக்கும் இடையேயாவது நேர்க்கோட்டில்தான் கட்டுவார்கள். விண்வெளியில் இருந்து தெரியும் இந்த "ராமர் பாலம்" நேர்க்கோட்டு அமைப்பில் இருந்தி ருந்தால் இது கண்டிப்பாக செயற்கையாகக் கட்டப்பட்ட பாலம்தான் என்று உறுதியாக நம்பலாம். இதுவோ, உலகெங்கும் பெருநிலங்களுக்கிடையே இயல்பாகத் தோன்றியிருக்கும் இஸ்த்துமஸ்கள் போல கடலரிப்புகளால் இயல்பாக எழுந்திருக்கக் கூடிய வளைவுடன் தான் காட்சியளிக்கிறது. அது மட்டுமல்ல. இந்த "ராமர் பாலம்" இருக்கும் அதே ராமேஸ்வரம் தீவுக்கும், இந்தியப் பெருநிலத்துக்கும் இடையே உண்மையிலேயே மனிதர்கள் கட்டிய பாலம் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் பாம்பன் பாலம். இந்தப் பாலத்தில் இரயில் வண்டியும் போகும், நெடுஞ்சாலைப் போக்குவரத்தும் இருக்கிறது. இது அண்மையில் முதலில் ஆங்கிலேயர்களும், பின்னர் இந்தியர்களும் கட்டிய பாலம். இருபதாம் நூற்றாண்டின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டிய பாலம். பண்டைய வானரங்கள் திரேத யுகத்தில் "கட்டிய" பாலமே விண்வெளியிலிருந்து தெரிகிறது என்றால், அண்மையில் கட்டிய பாலமும் விண்வெளியிலிருந்து நன்றாகத் தெரியவேண்டும் இல்லையா? அதுதான் இல்லை. நாசாவின் படத்தொகுப்பிலிருந்து பல படங்களைத் துருவித்தேடிப் பார்த்தேன். ஓரிரு படங்களில் பாம்பன் பாலம் என்று பெயர் போட்டிருந்த படங்களைப் பார்த்தேன். நேர்க்கோட்டில், மிக, மி கச் சிறிய அகலத்துடன் பாம்பன் பாலம் படங்கள் இருக்கின்றன. அவற்றோடு ஒப்பிடும்போது திரேதயுக வானரங்களின் தொழில்நுட்பம் மிகவும் சக்தி வாய்ந்ததாய் இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது! ஏனென்றால், படையெடுப்புக்காக ஒரு யுகத்துக்கு முன்பு கட்டிய பாலம் இன்று மிக அகலமாகத் தோன்றுகிறது. சரி, ஒரு யுகத்துக்கு முன்பு கட்டிய பாலம் இல்லையா, ஒரு யுகமாகச் சேர்ந்திருந்த மண்ணால்தான் அது இன்று அகலமாகத் தோன்றுகிறது என்றும் சிலர் நினைக்கலாம். எது எப்படியோ, இது 1,750,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பாலமாய் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், 18,000 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த உறைபனிக்காலத்தின்போது கடல் மட்டம் இன்று இருப்பதைவிட மிகத் தாழ்ந்து இருந்தது. அப்போது இந்தியாவும், இலங்கையும் ஒன்றாய் இணைந்திருந்தன. அன்றைய உலகம் எப்படி இருந்திருக்கும் என்று அமெரிக்காவின் கடல் ஆராய்ச்சித் துறை ஒரு நல்ல படம் ஒன்றை வரைந்திருக்கி றது. அதை கீழ்க்காணும் சுட்டியில் பார்க்கலாம்: ftp://ftp.ngdc.noaa.gov/GLOBE_DEM/pictures/GLOBALsealevelsm.jpg அப்போது இணைந்திருந்த நிலங்கள் கடல் அரிப்பால் பிரிந்து இப்போது தனி நிலங்களாக விளங்குகின்றன. இந்த "ராமர்" பாலம் செயற்கையாகக் கட்டிய பாலமாக இருந்திருக்க முடியாது. ஆனால், ஐஐடி போன்ற உயர்நுட்பக் கழகங்களில் படித்து, அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்று, பெருநிறுவனங்களில் பணியாற்றும் பல அறிவாளிகள் "ராம கர்ம பூமி" போராட்டத்தில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். இது உண்மையி லேயே ராம கர்ம பூமி இல்லை, ஆனால், தமிழ்நாட்டிலிருந்து யானை, பூனை, எலி, புலி எல்லாம் தமி ழர்களோடு தென்னிலங்கைக்குக் குடி பெயர்ந்த பூமிதான் இது என்று தெரிந்தால் இந்த அறிவாளிகள் என்ன செய்வார்கள் தெரியுமா? இந்தச் சேது சமுத்திரத் திட்டம் தமிழ்நாட்டுக்கு நல்லதில்லை என்று பல ஆண்டுகளாய் நான் எழுதி வந்திருக்கி றேன். கல்நெய்க் கலங்கள் இந்த மன்னார் வளைகுடாப் பகுதியைக் கடக்கத் தொடங்கினால், கண்டிப்பாக ஒரு நாள் ஏதோ ஒன்று புயலில் மாட்டி முழுகத்தான் போகிறது. அதனால் விளையும் மாசுகள் சுற்றுச் சூழலை நாசப் படுத்தப் போகிறது. இதை நேர்மையாகச் சொல்லிப் போராடிப் பார்த்தால் ஒன்றும் நடக்கவில்லை. ராம கர்ம பூமிப் போராளிகள் இதைத் தடுக்க முடிந்தால் புண்ணியமாய்ப் போகும். சொல்லப் போனால், குமரிக் கண்டப் போராளிகளும், தனித்தமிழ்ப் படைகளும், இது தமிழன் தென்னிலங்கைக்குச் சென்ற பாலத்தின் எச்சங்கள் புதைந்திருக்கும் இடம், அதனால் இது பாதுகாக்கப் பட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்க வேண்டும். அப்படி நெடுமாறனோ யாராவதோ கொடி பிடித்திருந்தால், எல்லோரும் அவர்களை நையாண்டி செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், ராம கர்ம பூமி என்ற அரசியல் சூழ்ச்சியாளர்களைப் பார்த்து யாரும் அப்படி நையாண்டி செய்வதாகத் தெரியவில்லை. பைபிளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அயோக்கியர்கள் வாழும் பூமியிலிருந்து எழுதுகிறேன். சமய நூல்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அயோக்கியர்களை நம்பவே நம்பாதீர்கள்.
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலிபோர்னியா
அமெரிக்கா.

Friday, May 25, 2007
இரியால் மட்டுமா? - கவிதை
தலைப்பு: இரியால் மட்டுமா?
பாவகை: கட்டளைக் கலித்துறை
(அந்தாதியுடன்)
(அரபு நாட்டில் பல காலம் பணிபுரிந்தவர் தமிழகம் திரும்பும்போது பணத்தை மட்டும்தான் எடுத்துச் செல்ல இருக்கிறதா என்று வினவும்தலைப்பில் நடந்த
கவியரங்கில் பாடிய பாடல். இரியால் --> சவுதி அரேபியாவின் பணம்)
இறைவணக்கம்
இழைக்கும் எழுத்துக்(கு) உயிர்தனை ஒத்தியால்! ஈசஉன்னை
அழைக்கும் அடியேன் அவமதை ஒத்ததே; ஆதரவே,
மழைக்குந் நிகர்இத் தமிழ்பொழி மன்றிலே, ஒன்றறியேன்
குழைக்கும் பொருளில் குறைஅறக் கொட்டுவாய் வல்லபமே!
தலைமை வணக்கம்
வல்லபம் வற்றிலி, வைய வகையெலாம் வாகுடையச்
சொல்லினில் செய்திடும் செம்மொழிச் சுந்தர, சீருடையத்
தொல்லியத் தண்மொழித் தொய்வறத் தந்திடு தோளுடைய
மெல்லிய முன்னவ மொய்ப்பதில் யாமும் மகிழ்கிறமே!
சபை வணக்கம்
மகிழும் மனவர் மயக்கும் மொழியினர் மாமொழியால்
அகிலம் இணைத்தோர் அணியோர் அணிஅணி ஆனவர்கள்
நெகிழும் மனதால் நிதிய மளிப்பவர் சேரரங்கில்
முகிலின் பெயலாய் முந்தி வணங்கினனன் (அன்)புற்றிவனே!
பாடல்
புற்றறு ஈசல் புலபுல வென்றெங்கும் பூப்பதுபோல்
பெற்றனள் பாரத அன்னையும் பொங்கிடுஞ் சோறதுபோல்
கற்றவர் கற்பவர் உற்றவை உந்திடச் சிந்தினராம்
வற்றின பாலையில் கொஞ்சம் வெளிமிச்சம் எங்கனுமே! (1)
எங்கனும் மேவிய ஈரம்இல் மண்ணின் இடுப்படியில்
தங்கியநல் லூற்றில் தழைக்குந் தகைகொள் இரியால்கள்,
மங்கல மாதன, மாநிலத்(து) இன்சுவை யீச்சமுடன்
இங்குள மாடதும் ஏர்தரும் ஒட்டம் அறிந்ததுவே! (2)
அறிந்தனம் பொன்மணி அள்ளி முடிகையில், சிந்தைஒன்றிச்
செறிந்தம் பசுமையின் செம்பொருளை, சொந்தத் திருமண்ணில்,
வெறியில் வெளியினில் வெம்மை விதைப்பவர் உள்ளமதைப்
பிறிந்து கழனிகள் கட்டிப் பதிப்பம் பயிர்தனையே! (3)
பயிரைப் பிரிந்திட்டப் பாலைப் பொழுதினில் போர்த்தமுடி
மயிரின் கருகலை மோந்த கணங்கள் மனம்நிலவி
செயிர்செய் தமிழ்நிலம் சீர்செய, சந்ததி சீர்பெருக,
வெயில்வெல் மருந்தாம் வளர்தரு நீழல் விதைத்திடுமே! (4)
விதைக்கும் வனங்கள் விளைகையி லெண்ணுவம் புண்பரங்கி
பதைக்கக் கொளுத்திய பண்டைச் சிவகங்கைச் சீமைவனம்;
அதையும் கடந்தோ அரபின் வறட்சி? இனிவருநாள்
எதையும் இழக்கினும் எம்வன மென்றும் மறுக்குவமே! (5)
மறுத்திடும் அண்டை நதியை முடக்குது; நம்பொழிலை
வெறுத்திடும் பண்பில் விதைப்பது கண்டோம் பெரியபாலை;
நறுக்கதன் நீளம் நதியிலாப் பண்பிங்கே நாமறிவோம்,
அறுக்குவம் அண்டைச் சதியினைச் செல்லும் அணியமைத்தே! (6)
அணியும் உடைகள் அரபியன் பீடது சொல்கிறதே
பணியும் பழைய அரபுத் தலைப்பாய் தமிழனதாம்!
துணிகள் நவமென வாயினும் துண்டுவேட்டி சீலையினைப்
பிணியைப் போலப் பதுக்காமல் தொல்பெருமை பேசிடுமே! (7)
பேசும் மொழியினில் வீசும் ஒளியினில் வாளரபி
வீசும் மொழியினைப் பேசும் பழியினில் தாழ்தமிழர்
காசும் பணமுமே தாசியின் பேரையும் பேசிடுந்தான்
தேசு தமிழ்நிதம் பேசிப் பெருமைகள் கொள்ளுவமே! (8)
கொள்ளோம் மனதில் இனியும் தமிழ்ப்பறிக் கூட்டுதன்னை
விள்ளோம் பிழைமொழி வேண்டோம் குறைமொழி, வென்றிடவே
உள்ளோம் தமிழுடைத் தொன்மம்; அரபூரில் கற்றதையாம்
தள்ளோம் தரணியில் தள்ளித் தவியோம் முகவரிக்கே! (9)
முகமே முகத்தின் சுடரே சுடர்தரு நெஞ்சுடைய
அகமே அகத்தில் விளையும் சுகமே அறிந்திலர்க்குப்
பகமே பகத்தின் முடிபே பரமன் தருதமிழே
தொகமே உனைவிட ஒன்றில்லைத் தேடி இழைத்தனனே! (10)
(பாடல் நிறைவு)
இறைக்கு நன்றி
இழைக்கும் எழுத்துக்(கு) உயிர்தனை ஒத்தியால்! ஈசஉன்னை
அழைத்த அடியேன் அவமதை ஒத்ததே; ஆதரவே,
மழைக்குந் நிகர்இத் தமிழ்பொழி மன்றிலே, ஒன்றறியேன்
குழைத்த பொருளில் குறைஅறக் கொட்டினாய், நன்றிகளே!
(நிறைவு)
பாடல் விளக்கம்/பொருள்/குறிப்பு:
இறைவணக்கப் பாடல்:
நாம் எழுதும் ஒவ்வொரு எழுத்திற்கும் உயிர் உண்டல்லவா? அதுவே இயக்கம். "இழைக்குமெழுத்துக்குயிரே ஒத்தியால்"என்ற சுந்தர மூர்த்தி நாயனாரின் திருவரியில் துவங்கும் தேவாரப் பாடல் ஒன்றுஅற்புதமானது. அந்த வரியில் சில மாற்றத்தோடு இந்தப் பாடல் துவங்கிற்று.
அவமதை = அவம் + அதை ; அவம் என்று சொன்னது இறைவனின் முன்னர் எத்தனைஇழிந்தவன் அடியேன் என்ற சிறுமையைச் சொன்னது.
தலைமை வணக்கப் பாடல்:
தலைமை வணக்கப் பாடல்:
"வைய வகையெலாம்" என்று சொன்னது கவியரங்கத் தலைவர்,தமிழ் மரபு, ஐக்கூ, கசல், கானா போன்ற உலகில் உள்ள பல கவிதைகளிலும்திறன் கொண்டவர் என்பதுரைக்க.
சபைவணக்கப் பாடல்:
மனவர் = மனம் கொண்டவர் (கன்மனவீர் என்பார் அப்பர் பெருமான்)
"அணியோர் அணிஅணி ஆனவர்கள்" என்றதுபெரிய கூட்டு/சங்கமாகவும், சிறு சிறு கூட்டு/அணி/சங்கம் ஆக சேர்ந்தோஅல்லது பிரிந்தோ பொதுவில் காணப்படும் அமைப்பினை, குறிப்பாக தமிழர்களின்பெருங்குழு, சிறுகுழுத் தன்மையைச் சொன்னது.

பெயலாய் = பெயல் + ஆய்; பெயல் = பெய்தல், பொழிதல்
பாடல் - 1:
புற்றறு = புற்று + அறு: புற்றினை அறுதல் என்பது புற்றை விட்டு வெளிப்போதல்

பாடல் - 2:
ஈரம்இல் மண்ணின் = உலர்ந்த நீர் தங்காத பாலை மண்மங்கல மாதன = மங்கல மாது + அன = மங்கல மாதினை ஒத்த.அரபி மண்ணில் கால காலமாய் நித்தியக் கல்யாணிபோல் என்றும் காய்த்து வரும்பேரீச்சையை மங்கல மாதென்று சொன்னது.
ஈச்சு = பேரீச்சை
மாடதும் = மாடு + அதும்; மாடு = செல்வம், பரம்பரைச் சொத்து.(மாட்டுப் பெண் என்று சொல்லப்படும் வழக்கை நோக்குக)
ஒட்டம் = ஒட்டகம். (இந்த மண்ணின் பரம்பரைச் செல்வம் ஒட்டகம் என்று சொன்னது)

பாடல் - 3:
"வெளியினில் வெம்மை விதைப்பவர்" என்று சொன்னது, நமது நாட்டிலே வழி வகைஆராயாமல் நீர் வளம் இயற்கை வளம் பெருக்காமல், கண்போன படி விளை நிலங்களையும்வனங்களையும் வணிக, சொந்த, அரசியல் காரணங்களுக்காக அழித்து வரும் நம்மவரைப் பற்றியது.
போற போக்கில் "ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை" என்று நமது நிலமும்ஆகிவிடுமோ என்ற கவலையில் எழுதிய பாடல் இதுவும் அடுத்த சிலவும்.

பாடல் - 4:
செயிர் = நோய், அவலம், தவறு
"செயிர்செய் தமிழகம்" என்றது, நம்மூர் தவறுகளைத் தன்னோடு சேர்த்துக் கொள்வதாக/கொண்டதாக எண்ணுவது.
"சந்ததிகள் சீர்பெருக" என்றது நாம் அமைத்துக் கொடுக்கும் இயற்கைச் சூழலேநமது பின்னவர்களுக்கு நாம் தரும் நல்ல சீர்வரிசையாக இருக்கும் என்ற பொருளில்.
(இல்லாவிட்டால், வரும் தலைமுறைகளின் தலைமயிர் நம்மூர் வெயிலில்பொசுங்கும் வாடை அடிக்கும் நிலை வருமோ என்று அஞ்ச வேண்டி உள்ளது)
வளர்தரு நீழல் விதைத்திடுமே என்றது "நிழல் கொடுக்கும் பெரிய மரங்கள் கொண்ட காடுகள், வனங்கள், சோலைகள் எங்கும் வளர்ப்பதும் பெருக்குவதும்குறித்தது.

பாடல் - 5:
சிவகங்கை, இராமநாதபுரம் பகுதிகள் வறட்சியால் பாதிக்கப் படுவது, ஆங்கிலேயர்மருது பாண்டியரைக் கைது செய்ய, சிவகங்கைச் சீமைக்கு வளமாக விளங்கியமிகப் பெரிய காட்டைக் கொளுத்தி முழுவதுமாக அழித்து நாசப்படுத்தியதால். அன்று அவன் செய்த கொடுமையால் இன்று அந்தப் பகுதியில் துன்பம் மிகுந்து போய் இருக்கிறது. ஏறத்தாழ பாலையாகவே அதுவும் இருக்கிறது.இதனைப் பற்றிய மிக அருமையான வரலாற்றுக் கட்டுரையை முனைவர் இராம.கி அவர்கள்valavu.blogspot.com என்ற தனது தளத்தில் எழுதியிருக்கிறார். அனைவரும் படித்துப்பயன்பெற வேண்டியக் கட்டுரை அது.
அதன் நினைவு வர இந்தப் பாடலில் அதனைச் சேர்த்தேன். காடுகளை கண்மண்தெரியாமல் வெட்டி எறியும் நம்மவர்க்கு பட்டும் புத்தி வர மாட்டேன்கிறதே என்ற எண்ணத்தில் சொன்னது.
"அதையும் கடந்தோ அரபின் வறட்சி?" என்றது, அந்த வறட்சியில் துவண்டு பலர்அரபிய, மலேயப் புறங்களுக்கு மிகக் குறைந்த ஊதியத்துக்கு வேலைக்கு வருகிறார்கள். ஆகவே, அரபிப் பாலைவனத்தின் வறட்சியை விட நம்மூர் இராமநாதபுரம், சிவகங்கை வறட்சி அதிகம் என்று சொல்ல முனைந்த பாட்டு என்றறிக.

பாடல் - 6:
தமிழகத்தைச் சுற்றியுள்ள மாநிலங்கள் நீர்தர மறுத்து அயோக்கியத்தனம் செய்து வருகின்றன. இது போகப் போக நமது ஊரையும் பாலையாக்கிவிடும் என்ற கவலையில் சொன்னது.
"நறுக்கதன் நீளம் நதியிலா"; நறுக்கு = சிறு ஓலையில் கிள்ளியது அல்லது கீற்றினில் நறுக்கியது.
அரேபியாவில் "சொல்லிக் கொள்ளும்படியான" நீரோட்ட நிலைகள் இல்லை என்றுசொல்ல வந்தது; "பண்பிங்கே" என்றது, இதனால் பசுமைக் காட்சிகள் குறைந்திருக்கிறது என்று உணர்த்தச் சொல்லியது.
"செல்லும் அணியமைத்தே" என்றது, இயற்கை வளங்களில் அக்கறை கொண்டோருடன்மட்டும் நம்பிக்கை வைப்பது என்று சொல்லியது. "செல்லும்" என்றது செல்லுபடியாகிறஅணியம் என்ற பொருளில்.

பாடல் - 7:
அரபிய ஆடவரின் உடைகளில் இருக்கும் கம்பீரம் மற்றும் அதில் அவர்கள் அடையும்பெருமை குறித்துச் சொல்லியது.
"பணியும் பழைய அரபு" என்றது, இறைவனைப் பணிகின்ற அரபியர்; அவர்களின் பழையதலைப்பாகை மரபு நமது ஊரில் நாம் துண்டு அல்லது நீளத் துணியைத் தலையில்சுற்றிக் கட்டுவது போலாம். பண்டைய கால தமிழ மேற்கத்திய உறவுகளின் கலப்பா,அல்லது இயல்பா என்பது ஆயத் தக்க விதயம். அரபியாவில் நம்மூர் தலைப்பாகைமாதிரி அணிபவர்கள் சிலரைப் பார்த்திருக்கிரேன். இன்னும் செங்கடல் சுற்றிய பகுதிகளிலும் சூடானின் சில பகுதிகளிலும் வேட்டி, தலைப்பாகை அணியும் பழக்கம் இருப்பதாகச் சொல்லிதமது தந்தையார் படத்தைக் காட்டினார் ஒரு சூடானியர். அதனைக் காட்டாகச் சொல்ல வந்து,நமது மக்கள் வேட்டியையும், துண்டையும் ஏழைக்கும் பிச்சைக் காரனுக்கும் மட்டும்சொந்தம் போல எள்ளுவதை வருந்திச் சொன்னது இப்பாடல்.
மாற்றத்தை ஏற்றுக் கொண்டு ஆடை தரிப்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.ஆயினும் இகழாத பண்பும், பழம் மரபும் மனதில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்சொன்னது. இந்த வகையில் அரபிய ஆடவர் என்னைக் கவரவே செய்கிறார்கள்.

பாடல் - 8:
"பேசும் மொழியினில் வீசும் ஒளியினில் வாளரபி!"
வாளரபி = வாள் + அரபி; வாள் = ஒளிர்தல் (புற்றில் வாள் அரவும் அஞ்சேன் என்றமாணிக்கவாசகரின் வரியை கவனிக்கவும்).
தாய்மொழியைப் பேசும்போதும் அதனை மிகத் தூய்மையாக அவர்கள்பேசும்போது, ஒவ்வொரு அரபியும் பெருமிதத்தோடு ஒளிர்கிறார்கள் என்றுசொன்னது.

இந்தப் பெருமிதம் ஒவ்வொரு அடிமைப் புத்தியும், கொண்ட தமிழனுக்கும் உரைக்க வேண்டும். தாம் பேசும் மொழியில் பெருமிதப்படாவிடிலும்அதனைச் சிறுமைப் படுத்துவோரை அரபியருடன் ஒப்பிட்டுப் பார்த்துநான் வேதனைப் படும் கணங்கள் அதிகம்.
"வீசும் மொழியினைப் பேசும் பழியினில் தாழ்தமிழே!" என்றது, தமிழ் மக்களில்
பலரும் மொழியின் தடம் மறந்து பேச்சிலும் எழுத்திலும் பொறுப்பற்றுக் கிடப்பதையும்அவர்கள் மொழி வீசுகிறது என்றும் சொன்னது. வீச்சம் என்றால்

"முடை நாற்றம்" என்றுபொருள். மதுரை நெல்லைப் பகுதியில் "என்னலே வீசுது" என்று மூக்கைப் பிடிப்பார்கள்.
அந்த வீச்சத்தைப் பேசுவது பெரும் பழிக்கு உள்ளானது என்று சொல்லி அதனால்தமிழர் தாழ்கிறார்கள், தாழ்ந்து போகிறார்கள், தாழ்த்திக் கொள்கிறார்கள் என்றுசொன்னது.
தேசு = சுடரும், ஒளிரும், சோதி என்பன ஆகும். வடமொழியில் இதனை "thEjus"என்பார்கள்.
"தேசுடைய இலங்கையர் கோன்" என்று சுந்தரர் பெருமான் சொல்வார்."தேசுடைய விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தி" என்பார் மாணிக்கவாசகர்.

பாடல் - 9:
விள்ளோம் = சொல்லோம்; விள்ளுதல் என்றால் சொல்லுதல் என்று பொருள்.

பாடல் - 10:
பகம் + ஏ = பகமே;பகம் = பிரிவு, பகுப்பு, பிளவு.
அற்புதமான நமது தமிழையும் தமிழ்த் தொன்மங்களையும் அறியாதவர் மற்றும் அறிய மறுப்பவர், முக்கியமாக அதனை"அவமதிப்பவர்", "தமிழத்தில்" இருந்து விலகிப் போய்விடுவர்.

"பகத்தின் முடிபே" என்றது, அப்படிப் பிரிந்து போனவர்களுக்கு ஒரே கதி, அதன்வலியை உணர்ந்து மீண்டும் தமிழுக்கும் நமது இயற்கை ஒத்த தொன்மங்களுக்கும்மீளுவதே என்று சொன்னது.
"பரமன் தரு தமிழே" என்றது, "பண் ஆர் இன் தமிழாய் பரமாயப் பரஞ்சோதி" என்றசுந்தரரின் மொழியால் என்று அறிக.

தொகமே = தொகுப்பு; தமிழ் என்பது மொழியாகவும், பண்பாடாகவும்,தொன்மமாகவும், நெறியாகவும், செம்மையாகவும், நமது முகவரியாகவும்,நமது முக ஒளிக்கும் பெருமைக்கும் நமது குமுக முன்னேற்றத்திற்கும்நமது அடிப்படைகளைப் பேணுவதில் இருப்பதால், பல் வேறு சாதி சமயவேறுபாடுகள் கொண்ட நமது நாட்டில் நம்மை இணைப்பதற்கும் தொகுத்துச்சேர்ப்பதற்கும் தமிழை விட்டால் வேறொன்றுமில்லை என்று அதன் உயர்வையும்உண்மையையும் சொல்லிப் பாடிய பாடல் இது.
இறுதியாக, இங்கே காணக்கூடிய மக்களின் அன்றாட வாழ்வில்பெருமிதமாகக் கருதுகிறார்கள் என்பதனை, நாம் மற்றும் நமது மக்களோடுஒப்பிட்டுப் பார்த்து நிறைகளைப் பற்றிச் சிந்திக்க இடம் நிறையவே இருக்கிறது என்று சொல்ல முனைந்த பாடல்கள் இவை.
எந்த அயல்நாடாக இருந்தாலும், பீடுடன் இருக்கும் எல்லா நாடுகளும்,தங்கள் மொழியிலும் மரபிலும் தொன்மங்களிலும் பெருமிதங் கொண்டுஉயர்கிறார்கள். தமிழர்கள் இந்த விதயத்தில் தமது குரவத்தை இழந்து, தம்மையும் இழப்பதுவே தற்போதைய கவலையான தமிழ்ச்சூழல் அல்லவா?
அன்புடன்
நாக.இளங்கோவன்
(20/4/2007)
Thursday, May 17, 2007
பெரியார் திரைப்படம்!
இந்தத் திரைப்படம் யாருக்காக என்று யாரேனும் என்னைக் கேள்விகேட்டால், "இன்று அரசியல் மற்றும் இதர வழிகளில் பொதுவாழ்வில் ஈடுபடுவோரின் படிப்பினைக்காக" என்று சொல்வதே என் விடையாக இருக்கும். அதோடு தற்போதையத் தலைமுறைக்குமிகச்சரியானதொரு புரிதலைத் தருமாறும் அமைந்திருக்கிறது.
அப்படியானதொரு ஆழ்ந்த சிந்தனைத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது பெரியாரின் வாழ்க்கை பற்றிய இந்தத் திரைப்படம்.
பெரியாரைப் பற்றித் தங்கள் பாட்டி சொன்ன கதை, உறவுகள் சொன்னதிரிப்பு, (பெரியாரைப்) படிக்காத சோம்பரின் கற்பனை உலகு, சாதிப்பிடிப்பில் பேதலித்துப் போனச் சார்புகள், அங்கொன்றும் இங்கொன்றுமாய்மேடைகளில் கேட்ட தரங்கெட்டப் பேச்சாளர்களின் பரப்புரைகள், மற்றும் இவற்றை அப்படியே அச்சு மாறாமல் ஏற்றிக் கொண்டு வழக்காடும் மிடையங்கள், இணையக் குமுகம், சிந்தனை வட்டம் போன்ற பல்வேறுநிலைகளுக்கு ஒரு உயர்வான புரிதலையும் படிப்பினையும் இந்தப் படம் தந்திருக்கிறது.
திராவிடக் காளைகளும் பாட்டாளிகளும் பலகணிப் பித்துக்குளிகளும் போட்டி போட்டுக் கொண்டு கருத்துச் சுதந்திரத்தைக் காலால்மிதி மிதி என்று மிதித்துக் கொண்டிருக்கிற கால கட்டத்தில் இந்தத் திரைப்படம், வெள்ளைக்காரஞ் சட்டமும்,வைதீகச் சட்டமும் முழுமையாகக் கோலோச்சிய கால கட்டத்தில், கட்டிலாக் கருத்துகளுடன் கருத்துரிமைக்காகப் போராடிய பெரியாரை அரிமாவாகக் காட்டுகிறது.
இன்றைக்கு கருத்துரிமை என்பது மிடைய முதலாளிகளின் எண்ணக்கிடக்கையாக இருந்து உலகுவாழ் தமிழர்களை நசுக்குவதாகஒருபுறமும், மிடையங்களின் சில்லறைக் கருத்துக்களுக்கே சினுங்கிக்கொள்ளும் அரசியல் தளங்களாக மறுபுறமும் நம்முன் காட்சியளிப்பது வெட்கக்கேடுகளில் ஒன்று.
சாதீயத்தின் மொத்த வடிவமாக வைதீகமும், அந்த வைதீகத்தின்மொத்த உரிமையாளராக பார்ப்பனக்குமுகமும் இருந்ததை இரண்டே காட்சிகளில் (ஈரோட்டுக்கு எழுந்தருளிய ஒரு சாமியார் காட்சியிலும், காசி அன்னதானச் சத்திரக் காட்சியிலும்)காட்டிப் பெரிய புரிதலை ஏற்படுத்தும் திரைப்பட வித்தையை இராசசேகரன் செய்திருக்கிறார்.
அது மட்டுமல்ல, அந்த வைதீகப் பார்ப்பனீயத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்த பார்ப்பனரல்லாத சாதியினர் மற்றும் பணக்காரர்களின் முகத்திரையையும் நார் நாறாகக் கிழித்துவிடுகின்றது காசி அன்னச்சத்திரக்காட்சி. இராமசாமி நாயக்கரின் தந்தையாரும், காசிச் சத்திர செட்டியாரும் சாதியக் கொடுமைகளின் வேரை விளங்கவைத்து விடுகின்றனர் இப்படத்தில்.
"பார்ப்பனீயத்தின் உரிமையாளராகப் பார்ப்பனர்களே இருந்தபோதும், அதன் பங்காளிகளாக மாறிவிட்டிருந்த ஏனைய சாதியரையும் எடுத்துக்காட்டின இந்த இரண்டு காட்சிகளும், தண்ணீர்க் குழாய் உள்ளிட்டஇன்ன சில காட்சிகளும்", என்று சொன்னால் மிகையாகாது.
"பார்ப்பனக் கொடுமைகளுக்குப் பக்க வாத்தியமாக இருந்த பாவத்தின் சம்பளம்"தான் அண்மையில் கூட நாம் கண்டு மனம் வெகுண்ட பாப்பாப்பட்டி,கீரிப்பட்டி, நாட்டார் மங்கலக் கிராமத் தீண்டாமை.
பெரியாரின் பேரில், பார்ப்பனர்களை மட்டும் சாடுமாறு குமுகத்தைத் திருப்பிவிட்டு "பார்ப்பனீயத்தின் பங்காளியம்" சாமர்த்தியமாகத் தப்பிக்கொண்டதன் விளைவுதான் தமிழகத்தில் இன்றும் நடக்கும் சாதிச்சண்டைகளும் சாதி அரசியலும்.
பார்ப்பனீயத்தைப் பெரியார் எதிர்த்தார் என்று சொல்லி சொல்லியேபார்ப்பனீயப் பங்காளிகள் தம்மை வளப்படுத்திக் கொள்கின்றனர் என்றமறுக்கமுடியாத உண்மையை இந்தப் படம் சிந்தனைக்கு இழுத்து வருகிறது.
"பார்ப்பனர்களும் சரி சாதீயத்தில் அவர்களின் பங்காளிகளாக உள்ளவர்களும் சரி, இன்றைக்கும், உள்ளுறும நுட்பவியல் (informationtechnology) துறையில் இருந்து வேளாண்மைத் துறை வரை தாங்கள்பேணி வருகிற மிகையான சாதீய வெறிப் போக்கை மீள் பார்வை செய்துகொள்ள இப்படம் ஒரு நல்ல வாய்ப்பு".
ஒரு சிக்கலான, நெருடலான, மிக நீண்ட போராட்ட வரலாற்றின் வேரைசில காட்சிகளில் விளக்கி விட்ட இராசசேகரனின் உழைப்புவியக்க வைக்கிறது.
குழந்தை மணத்தின் கொடுமையை, பாவேந்தர் பாரதிதாசன் இப்படிக் கூறத் துவங்குவார்.
"ஏழு வயதே எழிற் கருங்கண் மலர்,
ஒரு தாமரை முகம்,
ஒரு சிறு மணி இடை,
சுவைத்து அறியாத சுவை தருங் கனிவாய்,
கூவத் தெரியாத குயிலின் குஞ்சு,
தாவாச் சிறு மான்,
மோவா அறும்பு,
தாலி அறுத்துத் தந்தையின் வீட்டில்...."
இந்த வரிகளை அப்படியே மனத்தில் கொண்டு வந்து தாக்கியது
பெரியாரின் இல்லச் சிறுமிக்கு நடந்த மணமும், அதைத் தொடர்ந்து அந்தச் சிறுமிக்கு தாலி அறுத்த நிகழ்வும். சற்றே மனத்தை உறையவைக்கின்ற காட்சி கண் முன் வந்து சென்றது.
ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வது கை வந்த கலை. அப்படி இல்லாமல், அந்தச் சிறுமிக்குத் மீண்டும் திருமணம் செய்து வைத்து, தன் இல்லத்தில் இருந்து குமுகப் பணியைத் துவக்கிய பெரியாரின் ஆன்மா மிக நேர்மையானது.
நாகம்மையாரை இழந்து அவர் குலுங்கி அழுத காட்சியும், தனிமையும்
அதன் பின்னர் "நான் யார்" என்ற அவரின் ஆன்மத் தேடலும் மனிதத்தின் இயல்பைக் காட்டியது.
பெரியார் என்றவுடன் குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்வது போல பாய விளைவோருக்கும், பெரியார்என்று பேசும்போழ்து ஆன்மத்தையும் மனித இயல்பையும் தத்துவங்களையும் தொலைத்துவிட விளைவோருக்கும் பெரியாரின் ஆழ்ந்த அக உணர்வுகளைஎடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.
யாக்கை நிலையாமை ஒவ்வொரு மனிதனையும் கலக்கிவிடத்தான் செய்கிறது. அந்தக் கலக்கம் இயல்பானது. தவிர்க்க முடியாதது.
பட்டினத்தார் தனது தாயாரை இழந்தபோது புலம்பியதற்கும், பெரியார் அவரின் மனைவியாரை இழந்தபோது புலம்பி நின்றதற்கும் யாரால் வேறுபாடு
காணமுடியும்?
இந்தச் சூழலை இராசசேகரன் காட்சியாக்கி விதம், சத்யராசின் நடிப்பு,தங்கர் பச்சானின் ஒளியோவியம் என்ற இந்த மூன்றன் கூட்டணியின் உழைப்பு பாராட்டத் தக்கது.
பெரியார் - இராசாசி என்ற இருவரின் சித்தாந்த வேறுபாட்டுக்கிடையேயும் இருந்த நட்பும் பண்பும் போற்றத்தக்கது. அதை மாண்புடன் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
இந்தக் கால கட்டத்தில் அரசியல் வாதிகள் ஒருவருக்கொருவர் காறிக் காறி உமிழ்ந்து கொள்கிற கேவலமான அரசியலும், அவர்களின் மொழிகளும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளச் சகிக்காத பண்பாட்டுச் சீரழிவும் மனதில் ஆடி மிகவும் வருந்த வைத்துவிடுகிறது.
ஏற்பட்ட அரசியல் மாற்றங்களில் மணியம்மையாருடன் ஆன திருமணமும் சிக்கிக் கொண்டது சங்கடமான ஒன்று. அந்தக் குழப்பமான அரசியலின் தொடக்கையும் பின்னர் பேரறிஞர் அண்னா அதனைக் குறித்து வருந்திச் சொன்ன சேதியும் மிகப் பக்குவமாகக் கையாளப்பட வேண்டிய விதயங்களில்ஒன்று. பலரது எதிர்பார்ப்பையும் கடந்த பக்குவத்தோடு படமாக்கியிருக்கிறார்கள். பாராட்டுகள் இங்கு பலமாகக் கொடுக்க வேண்டும்.
பெருகியிருந்த நமசுகாரங்களும் இன்ன பிற சமற்கிருதப் பேச்சுவழக்கும், தற்போதைய அவற்றின் மாற்றங்களும் புரிந்து கொள்ளுமாறு
பதியப்பட்டிருப்பது, நம்பிக்கையை அளிக்கிறது.
பெண்களை முன்னணிப் படுத்திய இரு பெரும் தமிழ்த் தலைவர்கள் என்றால் அந்தப் பெருமை பெரியாரையும் பிரபாகரனையும்தான் சேரும்.
இருபெரும் தலைவர்களில் முதுபெரும் தலைவரான பெரியார் கள்ளுக் கடை மறியலுக்காக தனது சொந்தத் தென்னைகளையெல்லாம் வெட்டி, தன் இல்லப் பெண்களையே அந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்க வைத்தது அவரின் கொள்கைப்பிடிப்பையும் சூதற்ற அரசியலையும் முன்மாதிரியையும் காட்டுகிறது. சொல்லவேண்டிய முக்கிய செய்திகளைச் சுருக்காக அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள்.
வைக்கம் போராட்டத்தின் பகுதியாக வைக்கப் பட்ட "கடவுளா அல்ல கல்லா" என்ற பாடல் பெரியார் குமுகத்திற்கு சிந்திக்க வைத்த வினாக்களை எல்லாம் பட்டியலிட்டு விடுகிறது. இந்தப் பாடல் பெரியாரின் பல மேடைப்பேச்சுக்களை அகத்தில் கொண்டு படத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.
வைக்கம் போராட்டத்தின் எதிரொலியாக பெரியார் தெய்வ நிந்தனையாளராகச் சித்திரிக்கப் பட்டு அவரின் "எளிமையான கேள்விகளை" எதிர் கொள்ளமுடியாதவர்கள் "கடுமையான யாக வேள்விகளை", மந்திர தந்திரங்களைச்செய்வதானச் சூழலை எண்ணிப் பார்க்க வைத்து அதிர வைக்கிறது படம். இப்பொழுது கூட அரசியலாளர்கள் ஊர் ஊராக மாநிலம் மாநிலமாகச் சென்று யாக வேள்விகள் செய்து அரசியல் செய்வதை நாம் கண்டு கொண்டிருப்பது, பெரியாரை எதிர்த்துச் செய்யப்பட்ட இந்த மந்திர தந்திரப் போராட்டத்தை நம்ப வைக்கிறது.
ஈரோட்டில் சேர்மனாகப் பணியாற்றும்போது சாலையை அகலப் படுத்துவதற்கு ஏற்பட்ட எதிர்ப்பும், தற்காலத்திலே கூட சாலை அகலப்படுத்த இடம்தரமாட்டேன் என்று சொல்லி அடம் பிடிக்கும் அரசியலையும் காணும்போது இன்னும் நாம் போக வேண்டிய தொலைவு நிறையவே இருக்கிறதுஎன்று தோன்றியது.
பெரியாரை மய்யமாகக் கொண்ட படத்தில் எங்கே பிற தலைவர்களின் காட்சிகள் அதிகமாகிடுமோ என்ற அய்யம் முன்பு இருந்தது. ஆனால், மிகப் பக்குவமாக அப்படி ஆகிடாமல் செய்திருக்கிறார் இராசசேகரன். இராசாசி மட்டும் அடிக்கடி வருவார் படத்தில். சிறு வயதில் இருந்தே அரசியல் பொதுவாழ்வில் நண்பரானவர்கள் என்பதால் இராசாசி சம்பந்தப்பட்டக் காட்சிகள் அதிகம் இருந்தது மிகப் பொருத்தமாகவும் தேவையாகவும் இருந்தன. எதிர்பார்த்த அளவிற்குக் கூட அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் தொடர்புடையக் காட்சிகள் இல்லாமல் அதே நேரத்தில் வைத்தவற்றில் நேர்த்தியாகவும் கையாண்டிருக்கிறார்கள்.
பல தளங்களிலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நின்று போராடிய,வரையறுக்கப்பட முடியாத அந்த மாமனிதரின் பல்வேறு செயல்களையும் படத்தில் குறுகிய நேரத்தில் காட்டிவிடுவது என்பது மிக அரிய செயலாகும். அந்த முயற்சியில் மிகப் பெரிய அளவு வெற்றியை இந்தப் படத்தில் செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தையே முழுமையாக ஆய வேண்டுமானால் நிறைய பக்கங்கள் பிடிக்கும். அந்தளவுச் செறிவுடன் செய்திருக்கிறார்கள்.
தொடக்கக் காட்சிகள் சில காட்சித் தொகுப்பு போல் இருந்ததாகப் பட்டாலும்15, 20 நிமிடங்களில் படத்திற்குள் முழுமையாகக் கொண்டு போய்விடுகிறார்கள்.
இறுதிக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றியது. கலைஞரின் அறிக்கையோடும் அரசு மரியாதையோடு அவர் மறைவு காட்டப்பட்டதோடு மேலும் மக்களின் உள்ளங்கள் அங்கே சேர்க்கப் பட்டிருக்கலாம்.
பாரதிதாசன், அண்ணா, கலைஞர், நாவலர், மதியழகன் போன்றோர் வந்துபோகிறார்கள். அண்ணா மற்றும் கலைஞர் இவர்களின் ஒப்பனையில் சற்று கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அவர்களாக நடித்தவர்களும் இன்னும் சிறப்பாக செய்திருக்க இடமிருக்கிறது. அண்ணாவின் மீசை மிகையான வெள்ளையாக இருந்தது. கலைஞரின் கண்ணாடி நடிகருக்கு அவ்வளவாகப் பொருந்தவில்லை. வீரமணியாக நடித்தவரின் உரையாடல்
ஒத்து வரவில்லை.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குசுபுவின் நடிப்பு முழுமையாக வெளியாகி இருந்ததாகத் தெரியவில்லை. அவரை அறிமுகம் செய்த காட்சியமைப்பிலும் இன்னும் சற்று இயல்பைக் கூட்டியிருக்கலாம்.
சத்யராசு ஒரு சில இடங்களில் பெரியாராகவே ஒன்றிப் போயிருக்கிறார். அருமையான நடிப்பு. அவரின் ஒப்பனையும் கவனமாகச் செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், உடலில் இருந்த முதுமையை, கரங்களை ஆட்டிப்பேசும்போது சத்யராசின் கரங்களில் இருக்கும் இளமை காட்டிக் கொடுத்திருக்கிறது. இந்த இடத்தில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
அதேபோல, மிக முதியவராக இருந்த காலங்களில் படுக்கையில் இருந்து எழுவதில்,மேடைகளில் கைகளை ஆட்டிப் பேசும்போதும் இருந்திருக்க வேண்டியஇயல்பான நிதானத்தில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். இராசாசியை மட்டும் ஆரம்பம் முதல் இறுதி வரை அதே இளமை அல்லது முதுமையோடு காட்டியதாகத் தெரிந்தது. அவரின் முதுமைக் காட்சியில் இன்னும் கொஞ்சம் ஒப்பனையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இப்படத்தை இவ்வளவு கவனமாக எடுத்திருப்பதைப் பார்த்ததும்
இளையராசா தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டு விட்டார்
அல்லது அவரை இந்தப் படத்தினர் தவற விட்டு விட்டார்கள்
என்றே இப்போது எனக்கு சொல்லத் தோன்றுகிறது.
பெரியார் குறித்த புரிதல்கள் அறவே இல்லாமலும், சரியாக இல்லாமலும்,
குழப்படியாகவும், குழப்ப முற்பட்டும் கிடந்த இச்சூழலிற்கு பெரியாரின்ஆன்மாவை அப்படியே எடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.
பெரியாரின் சில உரைகளை மட்டுமே வைத்துக் கொண்டுஅவரை ஆதரித்தும் வெறுத்தும் கருத்து கொண்ட அனைவருக்கும் இந்தப் படம் ஒரு நல்ல அறிதலாக இருக்கும்.
இந்த அளவு பணியாற்றிக் கூடவா இன்னும் இந்த மண்ணில்இத்தனை சாதீய அட்டூழியங்கள் அரசுத்துறை, தனியார்த் துறை, ஆன்மீகம் மற்றும் குமுகத்தின் பல நிலைகளிலும் பார்ப்பனீயமும் பார்ப்பனீயத்தின் பங்காளியமும் பெருகிக் கிடக்கின்றனவே என்று எண்ணும்போது திருமூல நாயனாரின் திருமந்திரத்தில் இருந்து ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.
"ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு
சூரையங் காட்டிடைக் கொண்டு போய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே"
திருமந்திரம்: 145
இந்தப் பாடலின் துவக்கத்தில் பெரியார் என்ற பெயரைச் சேர்த்துப் படித்தால் நமது குமுகாயம் எந்த அளவுக்குப் பெரியாரின் நேரிய எண்ணங்களில் இருந்து விலகி, "நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தது போல்" போலியாகப் பிதற்றிக் கொண்டிருக்கிறது என்பது புரியும்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
17/மே/2007

Sunday, May 06, 2007
பாவேந்தர் பாரதிதாசன் வாரம், விழா, அர்ரியாத் - 2007
04/மே/2007 ஆம் நாள் அர்ரியாத்தில் நினைவில் நிற்கும் நாள்.
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் புகழ் போற்றும் விழா இந்நகரில் அமைந்தது. அர்ரியாத் தமிழ்ச்சங்கம் சார்ந்த எழுத்துக்கூட மடற்குழுவில் பாரதிதாசன் வாரமாக அவர் நினைவுகள் கூரப்பட்டுப் பின்னர் மே 4 ஆம் நாள், அரேபியாவிற்கான இந்தியத் தூதரும், புதுச்சேரியின் முன்னாள் முதல்வரும் ஆன, மதிப்பிற்குரிய திரு எம்.ஓ.எச். பரூக் மரக்காயர் அவர்களின் தலைமையில் பாரதிதாசன் விழாவாக நடந்தது. அவரோடு புதுவை மாநிலத்தின் கல்வி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சரான திரு.சாசகான் அவர்கள் கலந்து கொண்டது சிறப்பினைக் கூட்டியது.
கூட்டத்தின் முக்கிய நிகழ்ச்சியாக பாவேந்தரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார் மேதகு தூதுவர் அவர்கள். குறிப்பாக சவுதி அரேபிய நாட்டில் நிகழ்ந்த முதல் பாரதிதாசன் விழா இது.
நடைபெற்ற கருத்தாடல்கள் மிகச் சுவையானவை. இந்தியத் தூதர் அவர்கள் புதுவையில் பாவேந்தருக்குச் செய்யப் பட்ட சிறப்புகள் பற்றி நிறைய கூறினார்.
மேதகு தூதுவர் பரூக் மரக்காயர் அவர்கள் பாவேந்தரின் பல பாடல்களைப் பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். பேரா.மாசிலாமணி, திரு.வெற்றிவேல், திருமதி மலர்ச்செல்வி, திரு.இம்தியாசு, திரு.சயாவுதீன், திரு.மொய்தீன் மற்றும் பலர் இந்தக் கலந்தாடலை மிகப் பயனுள்ளதாக ஆக்கினர்.
அரேபிய மண்ணில் அரேபிய ஆடவர் தொன்ம உடையில் மிடுக்காக வருவது போல, தமிழ் விழாவிற்கு அதே பெருமிதத்தோடு நண்பர்கள் நமது தொன்ம உடையில் வந்தது மிக இனிமையாக இருந்தது பார்ப்பதற்கு.
புதுவை அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக பாவேந்தரின்
"வாழ்வினில் செம்மை..." என்று தொடங்கும் பாடலை சட்டப்படுத்தியிருக்கிறது
என்ற செய்தியை இந்தியத்தூதர் சொன்னது அனைவருக்கும் அறிதலாக
இருந்தது. (கீழே அந்தப் பாடல் தகுதரத்தில் ஒட்டப்பட்டிருக்கிறது).
¾Á¢ú
Å¡úŢɢø ¦ºõ¨Á¨Âî ¦ºöÀÅû ¿£§Â!
Á¡ñÒ¸û ¿£§Â ±ý ¾Á¢úò ¾¡§Â!
Å£úÅ¡¨Ã ţơР¸¡ôÀÅû ¿£§Â
Å£ÃÉ¢ý Å£ÃÓõ, ¦ÅüÈ¢Ôõ ¿£§Â!
¾¡úó¾¢Î ¿¢¨Ä¢ɢø ¯¨É Å¢Îô§À§É¡?
¾Á¢Æý±ó ¿¡Ùõ ¾¨ÄÌÉ¢ §Å§É¡?
Ýúó¾¢ýÀõ ¿ø¸¢Îõ ¨Àó¾Á¢ú «ýÉ¡ö
§¾¡ýÚ¼ø ¿£¯Â¢÷ ¿¡ýÁÈô §À§É¡?
¦ºó¾Á¢§Æ! ¯Â¢§Ã! ¿Úó§¾§É!
¦ºÂÄ¢¨É ã¨É ¯Éì¸Ç¢ò§¾§É!
¨¿ó¾¡ ¦ÂÉ¢ø¨¿óÐ §À¡Ì¦Áý Å¡ú×
¿ýÉ¢¨Ä ¯É즸ɢø ±ÉìÌó ¾¡§É!
Óó¾¢Â ¿¡Ç¢É¢ø «È¢×õ þÄ¡Ð
¦Á¡öò¾¿ý ÁÉ¢¾Ã¡õ ÒÐôÒÉø Á£Ð
¦ºó¾¡Á¨Ãì ¸¡Î âò¾Ð §À¡§Ä
¦ºÆ¢ò¾±ý ¾Á¢§Æ ´Ç¢§Â šƢ!
----------
தனிப்பட்ட முறையில், இணைய மடற்குழுக்களான தமிழ்.நெட், தமிழ்-உலகம் என்ற குழுக்களில் பல பாவேந்தர் பாரதிதாசன் வார விழாக்களை நடத்திப் பங்கு பெற்ற எனக்கு இம்முறை எழுத்துக்கூடம் என்ற அர்ரியாத்தின் மடற்குழுவில் முதன்முதலாக பாரதிதாசன் புகழ் போற்றுதலில் பங்கு கொண்டதும், அதன் பின்னர் பாவேந்தர் பிறந்த மாநிலத்தின் மூத்த அரசியலாளராகவும், முன்னாள் முதலமைச்சராகவும், நடுவண் அரசில் அமைச்சராகவும் இருந்த, தற்போது அரேபியாவிற்கான இந்தியத் தூதுவராகவும் இருக்கும் மாண்புமிகு திரு. எம்.ஓ.எச்.பரூக் மரக்காயர் அவர்களின் தலைமையில், புதுவை மாநில அமைச்சர் திரு.சாசகான் அவர்களின் சிறப்பு பங்கேற்றலோடு நடந்த பாவேந்தர் கூட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு இவ்வருடம் எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சியை அளித்தது.
இவற்றை விட மேலாக, தலைமை உள்ளிட்ட கூட்டத்தில் பங்கேற்ற அனைவரிடமும் பாவேந்தர் என்ற சொல்லிடம் காட்டிய அன்பும் உற்சாகமும் கண்டு உள்ளூர உவகை அடைந்தேன். திரளாக வந்திருந்த அனைவருக்கும் தமிழ்ப் புத்தணர்வைக் கொடுத்தார் பாவேந்தர் என்று சொன்னால் மிகையாகாது. நமது அன்புக்குரிய மலேசியக் கவிஞர் கரு.திருவரசு அவர்கள் எப்பொழுதும் எழுதும் , 'வெல்லத் தமிழினி வெல்லும்' என்ற சொற்றொடர் இந்தக் கூட்டத்தில் மிகப் பொருத்தமாக நினைவு கூரப்பட்டது.
மேதகு இந்தியத் தூதுவர் அவர்கள்,
1) பாரதியார் மற்றும் பாரதிதாசன் நூல்கள் அனைத்தையும், சவுதி அரேபியாவில் உள்ள பல வேறு நகரங்களில் உள்ள தமிழ்ச் சங்கங்களுக்குப் புதுவை அரசின் சார்பாக தந்தளித்து இவர்கள் புகழ் பரவச் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை புதுவையின் கல்வியமைச்சர் ஏற்றுக் கொண்டு ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்.
2) புதுசை அரசு, பாவேந்தரின் குடும்ப விளக்கு என்ற காவியத்தினை நாடகமாக ஆக்கியிருக்கிறது என்ற தகவலைச் சொல்லி அதன் படிகளையும் இங்குள்ளத் தமிழ்ச் சங்கங்களுக்கு அனுப்பிட ஆவன செய்யவேண்டும் என்ற அவரின் கோரிக்கையையும் கல்வியமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது மகிழ்ச்சியான ஒன்று.
குறிப்பாக, இந்திய/தமிழகக் குடும்பக் கலை மற்றும் பண்பாட்டைத் தேட, ஆய முனையும் அரேபிய ஆய்வாளர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்பது மகிழ்ச்சியான விதயம்.
3) பாரதிதாசன் விழா தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இங்கே நடைபெற வேண்டும் என்ற அவரின் அறிவுரை அனைவராலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளப் பட்டது.
மேலும், தமிழ் விழா என்றாலே, தமிழில் தங்கு தடையின்றிப் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் நிலையாக எங்கும் ஒலிப்பதைக் கண்டு வருகிறோம். அதனை இந்தக் கூட்டத்திலும் என்னால் உணர முடிந்தது. இது ஏறத்தாழ ஒரே இராகத்தோடு கூடிய புலம்பலாக தமிழ்ப்புலங்கள் எங்கனும் கேட்பதை என்னால் உணர முடிந்தது. இந்தப் புலம்பல் பாவேந்தர் காலத்தில் இருந்தே இன்னும் தீராமல் இருக்கிறதே என்று எண்ணி உள்ளூரவும், வெளிப்பட்டும் நகைக்க மட்டுமே முடிகிறது.
அந்த வகையில், அர்ரியாத் தமிழ்ச் சங்கத்தினர் ஆற்றல் கூடம் என்ற அமைப்பையும் தங்களது இதர அமைப்புகளோடு சேர்த்து தமிழ் வளம் கூட்ட ஆரம்பித்திருப்பது ஆறுதலைத் தருகிறது. இது பாவேந்தரின் சொல்லான "எங்கள் தமிழ் உயர்வென்று சொல்லிச் சொல்லிக் காலம் பல கழித்தோம்; குறை களைந்தோமில்லை" என்பதனை மேற்கோளாகக் கொண்டு குறை களைய வளம் கூட்ட எடுத்த நடவடிக்கை அது.
இந்தக் கூட்டத்திலும் எனக்கு பங்குபெற வாய்ப்புக் கிட்டியது. தமிழ் பேசுவதில் தமிழர்களுக்கு இருக்கிற இன்றைய இடர்களைப் பேசியதுடன் அது களையவும் முனைப்பெடுத்தனர்.
தனித்தமிழ்ச் சொல்வளமும், அதனைச் சொல்லும் வளமும் வளரவேண்டியதன் தேவையையும் விரைவையும் திரு.பாலமுகுந்தன் அவர்களும், திரு.இம்தியாசு அவர்களும் திரு.இராசா அவர்களும் வலியுறுத்திப் பேசினதைக் கேட்டு வாய்பிளந்து அமர்ந்திருந்தேன்.
அதனை அடைவதற்கான அணுகுமுறையைப் பேராசிரியர் மாசிலாமணி அவர்கள் மிக அருமையாகவும் கச்சிதமாகவும் வரையறுத்து விளக்கினார். மகிழ்ந்து போனேன்.
ஆற்றல் கூடம் அமைத்ததில் திரு.மு.வெற்றிவேல், பேரா.மாசிலா ஆகியோர் மிகவும் பாராட்டுதற்குரியவர்கள்.
பாவேந்தர் பாரதிதாசன் விழா சிறப்புற நடைபெற ஆர்வத்துடன் உழைத்த அர்ரியாத்தின் தமிழ்ச்சங்கத்தின் கலை இலக்கியக் குழுத் தலைவரான திரு.மு.வெற்றிவேல், சங்கத்தின் தலைவர் திரு.சயாவுதீன், சங்கச் செயலர் திரு.இரா.சுவாமிநாதன், எழுத்துக் கூட ஒருங்கிணைப்பாளர் திரு.கே.வி.இராசா ஆகியோர் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.
தமிழ்நாட்டில் இலக்கியக் கூட்டங்களில்
இவ்வளவு பாரதிதாசன் விழாவிற்கு எவ்வளவு பேர் திரளுவார்களோ
அதைவிட அதிகமாகவே இருந்ததாக எனக்கு உணர்வு.
இது ஒரு இனிய சித்திரை மாதம்!
அன்புடன்
நாக.இளங்கோவன்
6 மே 2007

Subscribe to:
Posts (Atom)