Sunday, September 09, 2007

அன்புமணியின் கிராம சேவை சட்டம்!?

மருத்துவ மாணவர்களை கிராம சேவை செய்யக் கட்டாயப்படுத்தும்திட்டம், கிராமங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற "நல்ல எண்ணம்" என்று எண்ணினாலும் அதனை நடைமுறைப் படுத்தும்முறை மட்டம்.

1) மருத்துவப் படிப்பு என்பது செல்வந்தர்களுக்கு செல்வப் படிப்பாகவும்மற்றவர்களுக்கு காலங்கடந்துதான் வாழ்வளிக்கும் படிப்பாகவும்இருந்துவருகிறது. ஆறரை ஆண்டுகாலம் ஒரு பட்டம் வாங்கக் காத்திருப்பது என்பது மிகக் கொடுமையானது.

2) எம்பிபிஎசு முடித்து மேலே படிக்கப் போவோர்களை கட்டாயப்படுத்தி படிப்பில் இருந்து தள்ளி வைப்பது போல இது இருக்கிறது.

3) இதையெல்லாம் விட, சரவல்களால் வாடிக் கொண்டிருக்கும்கிராமங்களில் பணி புரிய, பயிற்சியும் பட்டறிவும் இல்லாதமாணவர்களைக் கொண்டு போய் அங்கு பணியில் போடுவதுஎந்த வகையில் மக்களுக்குப் பயனளிக்கும்?

4) பட்டறிவு இல்லாத மாணவர்களுக்கு அங்கே பட்டறிவு கிடைக்ககிராம ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் என்ன வசதிஇருக்கிறது?

5) பட்டறிவு இல்லாத கன்றுகளை கிராமங்களுக்கு அனுப்புந்திட்டம் பட்டறிவு கொண்ட மருத்துவர்களின் கிராமப் புறக்கணிப்பைஏற்புமை ஆக்கிவிடுகிறது.

கிராமங்களின் மருத்துவ நிலையங்கள்/அமைப்புகள்வசதி கொண்டவையாக ஆக்கப் பட்டு, குறைந்தது 5 ஆண்டுகள் பட்டறிவு கொண்ட மருத்துவர்களை குறைந்தது 3 ஆண்டுகள் ஏதாவது ஒரு கிராமத்தில்பணி புரிய வைக்கவேண்டும். அதுமட்டுமல்லாது அந்த மருத்துவர்களுக்கும் நல்ல ஊதியம் அளிக்க வேண்டும்.

அதனை மறுக்கும் மருத்துவர்களின்பட்டங்களை வெடுக்கென்று பறித்து விட சட்டம் செய்ய வேணும்.

அதுவே கிராமங்களைக் காப்பாற்றும்.

எய்ம்சு வேணுகோபாலிடம் மட்டுமே அடத்துக்கு என்றேவிளையாண்டு கொண்டிருப்பது போல மாணவர்களிடம் விளையாடாமல், துணிச்சலான முடிவாக "பட்டறிவு கொண்டமருத்துவர்களை கிராமத்துக்கு அனுப்பவேண்டும்".

துணிவில்லாது கொல்லைப்புற அரசியலாகத் தேர்ந்தெடுத்துநடத்தும் இராமதாசு போல இல்லாமல் இந்த விதயத்தில்அன்புமணி துணிவாக சட்டம் செய்ய வேண்டும்.

இல்லாவிடில் அமைதியாக இளைஞர்களை பாதிப்பதோடல்லாது கிராம மக்களுக்கும் புண்ணியமில்லாத தற்போதைய சட்டத்தைப் பின்னெடுத்துக் கொண்டு விடவேண்டும்.

(பா.ம.கட்சிக் காரர்களே, தில்லியில் உட்கார்ந்து கொண்டு மூர்த்தியையும் வேலுவையும் விட இவர் என்னதான் செய்தார் என்று கணக்குப் பார்த்து "சின்ன ஐயா" என்பதற்கு பதிலாக "தத்தி ஐயா" என்று சொல்லிவிடுவார்களோ
என்று ஐயுற வேண்டியிருக்கிறது. அதனால் அன்புமணி துணிவாகச்
செயல்படவேண்டும் :) )

அன்புடன்
நாக.இளங்கோவன்

0 comments: