Wednesday, June 06, 2007

பெறுநர்: அன்புடன் மடற்குழு மற்றும் திரு.சி.செயபாரதன்-கனடா! (மடல்-1)

தமிழ் விடுதலை ஆகட்டும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையைவைத்துக் கொண்டு ஒன்னே முக்கால் ஆண்டுகளாக இணையமெங்கும் உலாவரும் அருமை நண்பர் திரு.செயபாரதன் அவர்களே, வணக்கம்.

முதலில் இந்தக் கட்டுரையை பதிவுகள் தளத்தில் என்னை நையாண்டிசெய்து எழுதியிருந்தீர்கள். நான் மறுமொழி இடவில்லை.

பின்னர் அதனை திண்ணைக்குத் தூக்கிச் சென்றீர்கள். அங்கும்நான் பதில் இடவில்லை.

இதற்குக் காரணம் தங்கள் கட்டுரைக்கு மறுமொழி இடமுடியாத ஒன்று என்றல்ல. தமிழில் தூய்மை இல்லாவிடிலும், தமிழில் நுட்பக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வரும் தங்களின் ஆர்வத்துக்கும் உழைப்புக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், உங்களையும் என்னையும் அறிந்த அந்த அருமையான நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவும் நான் மறுமொழி இடவில்லை. (அது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆயினும் இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள்.)

ஆனால், தற்போது அன்புடன் என்ற மடற்குழுவில் மீண்டும் அதனைஎழுதி உரையாட்டு நிகழ்த்தி மகிழ்கிறீர்கள் என்று கேள்விப் பட்டு, கீழ்க்கண்ட சுட்டியில் அதனைக் கண்ணுற்று உறுதி செய்து கொண்டேன்.(http://groups.google.com.hk/group/anbudan/msg/a8b3c459426e19c9?&hl=zh-TW)

திரு.செயபாரதன் அவர்களே, நண்பர் புகாரியின் நூல் வெளியீட்டு விழாவில் பல்லோர் முன்னிலையில் பாவேந்தர் பாரதிதாசனை, படு கேவலமாகப்
பேசினீர்கள். அதனை பதிவுகள் தளத்திலும் போட்டீர்கள். அது கண்டு நான் கொதித்து, சற்றே கடுமையாகவே எனது மறுமொழிக் கட்டுரையை எழுதியிருந்தேன்.

பாவேந்தரை ஏன் பழிக்கிறீர்கள் என்று கடிந்த உடன், உடனே அவரின்கவிதை வரியின் நிழலில் ஒதுங்கி மேற்கண்ட கட்டுரையை எழுதி அதனை வைத்துக் கொண்டு விழா எடுத்து வருகிறீர்கள்.

இது எந்த வகையில் நேர்மை என்று தெரியவில்லை.

நையாண்டி செய்யப்படுவது எனக்கு ஒன்றும் பெரிய விதயமேயில்லை. இதை விடப் பல நையாண்டிகளையும், பல வழக்காட்டுகளையும் பார்த்தவன் நான்.

ஆனால், என்னை நையாண்டி செய்யும் சாக்கில், நீங்கள் தூய தமிழ் என்பதனை மிகவும் கேவலப் படுத்தி வருவது தவறு.

பாவேந்தர் பாரதிதாசனைப் பழித்து விட்டு, பின்னர் அவர் கவிதை வரிகளின் நிழலில் நின்று கொண்டு தூய தமிழைப் பழித்துக் கொண்டு, அதனைப் பரப்பியும், பலரைக் குழப்பியும் வருகிறீர்கள். இது ஏற்க முடியாத ஒன்று, ஒரு தடவை அல்ல, இரண்டு தடவை நான் அமைதியாகப் போய்விட்டேன்.

மீண்டும் மீண்டும் என்னைச் சீண்டிவருவதாலும், பிழையுரைகளைப் பரப்பிவருவதாலும் இந்த வழக்காட்டை என் பதிவில் நான் துவக்க வேண்டி வந்திருக்கிறது.

உங்கள் கட்டுரையில் நீங்கள் விடுத்துள்ள வினாக்களுக்கும், இட்டிருக்கும் கருத்துகளுக்கும் நான் இங்கு விடையிறுக்கிறேன். அதே போல வரும் மடல்களில் நான் எடுத்து வைக்கும் வினாக்களுக்கு உங்கள் மறுமொழியை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன் குழுவை நடத்தும் நண்பர் புகாரி அவர்களுக்கு:

உங்கள் மடற்குழுவில் நான் பங்கு கொண்டதில்லை. திரு.செயபாரதனின் கட்டுரையையும் அதன் பின்னணியும் உங்களுக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியும்.

"தனிப்பட்ட முறையில்" பங்கு கொள்ளாதவர்களின் பெயர்களிலே வரும் சர்ச்சைக்கிடமான நையாண்டி மேளங்களை அனுமதிப்பது நல்ல மடற்குழுப் பண்பாடு என்றால் அதனை நீங்கள் தொடர்ந்து செய்து
கொள்ளுங்கள்.

1) தமிழ் ஆராய்ச்சி வட்டம் மடற்குழு நினைவு தங்களுக்கு மறந்திருக்கலாம். ஆனால் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது,

2) தமிழ்-உலகம், அகத்தியர், சந்தவசந்த மடற்குழுக்களில் ஆள் இல்லாத அரங்கில் ஆடும் ஆட்டத்தினை அநாகரிகம் என்று சொல்லும் பண்பாட்டைவைத்திருந்தார்கள். அது சரியா தவறா என்று எனக்கு இப்போது தெரியவில்லை.

எனினும், தூய தமிழைப் பழிக்கும் உங்கள் குழுவைப் பற்றி இந்தத் தொடரில் எழுதத் தூண்டிய உங்கள் குழுவிற்கும், திரு.செயபாரதன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

(தொடரும்)

அன்புடன்
நாக.இளங்கோவன்

7 comments:

Anonymous said...

இளங்கோ சார்,

அன்புடனில் புஹாரியை வாழ்த்துபவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் முன்னுரிமை.


முத்தமிழ் குழுவில் பிராமினர்களுக்கும் மஞ்சூர் ராசா என்கிற சுந்தரை தனிநபர் துதி பாடுபவர்களுக்கும் முன்னுரிமை.

வானாம் சார். அங்கெல்லாம் போகாதீங்க.

வலலப்பதிவு ஒன்றே போதும் உங்களுக்கு!

nayanan said...

பல தகவல்களை அறியத் தந்த
தங்களுக்கு நன்றிகள் அநாநி
அவர்களே.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Anonymous said...

கருத்துக்களை மிகத் தெளிவாக எந்தவிதமான கீழ்த்தரமான சொற்களும் உதிர்க்காமல் உரைத்திருக்கின்றீர்கள்! ஆனால் நீங்களும் நிகழ்ச்சியில் அந்த் ஆளைப்போய் புகழ்ந்திருக்கின்றீர்களே?!
கவிதையைப்பற்றி மட்டும் சொல்லி இருக்கலாமே?! அந்த ஆளின் நிஜமுகம் தெரியுமா உங்களூக்கு? தகவல்கள் வேண்டுமெனில் உங்களுக்குத் தனிமடலில்தான் சொல்லலாம்.

நன்றிகள்.

nayanan said...

//தகவல்கள் வேண்டுமெனில் உங்களுக்குத் தனிமடலில்தான் சொல்லலாம்.
//

அநாநி அவர்களே, நன்றி.
அனுப்பி வையுங்கள் - அறிய வேண்டியது நிறைய இருக்கும் போல
இருக்கிறது.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Anonymous said...

தமிழனின் குணாதிசயத்தைக் கூறுவதற்கு நண்டு கதையை சொல்வார்கள். ஒரு நண்டு மேலே சென்றால் மற்றொன்று அதை இழுத்து விட்டு விடும் என்று. ஆகவே, தயவு செய்து ஒருவர் மற்றொருவரைக் குறை கூறாமல் தமிழின் சுவையை உணர நேரத்தை செலவிடலாம் என்பது என் தாழ்மையான கருந்து.

முன்னவர் தவறாக சொல்கிறார் என்றால் அதை திருத்த முற்படலாம்; இல்லை பேசாது விட்டு விடலாம். சேற்றை வாரி இறைக்க வேண்டாமே! ஏனெனில் இறைப்பவரும் சேற்றுக்குள் இறங்கவேண்டிய கட்டாயம் உருவாகும்!

(அனானியாகவே இருந்து விட்டுப் போகிறேன்!)

nayanan said...

//
Anonymous said...
தமிழனின் குணாதிசயத்தைக் கூறுவதற்கு நண்டு கதையை சொல்வார்கள்.
//

அன்பிற்குரிய அநாநி அவர்களே,
தங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது.
இந்த எண்ணம் உயர்ந்தது. இதனை நான் பல காலமாகப் பேணியும் வருகிறேன்.

ஆயினும், தமிழ் மக்களின்
அடிப்படைகளைப் பாதிக்கும் விதயங்களைப் பரப்புபவர் யாராக
இருந்தாலும் அவர்கள் நல்ல விளக்கங்கள் வரும்போது அதை
நுணுகிப் பார்க்க வேண்டும்.

காலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நண்பர் செயபாரதன் அவர்களின் நுட்பக் கட்டுரைத் திறன் தமிழுக்கு
வேண்டும். ஆனால், அவர் ஏறத்தாழ
ஈராண்டுகளாகியும் தனது பிழையான
எண்ணங்களை மாற்றிக் கொள்ளவே
இல்லை. இருந்த இடத்திலேயே இருக்கிறார். அதோடு பல இளையர்களுக்கும் தவறான கருத்துகளைச் செலுத்துகிறார் என்பதனாலேயே எனக்கு வருத்தம் ஏற்பட்டது.

நான் முகம் பார்த்து கடிவதில்லை.
கருத்து, நோக்கம் பார்த்து மட்டுமே
பெருமளவும் கடிகிறேன்.

அன்புக்கு நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

மறுமொழி இட்ட அனைவருக்கும்:

கருத்துகளுக்கு நன்றி.

தமிழ் மற்றும் தமிழர்களின் அடிப்படைச்
சரவல்களின் பரிமாணங்கள் அதிகமாகிக்
கொண்டே போகின்றன.

இவற்றை நாம் சரியாக அணுக வேண்டும்.

தமிழோடு வாழ்பவர் சீனனாக இருந்தாலும் கொஞ்சி மகிழவேண்டும்.
எந்த வேறுபாடும் பார்க்கக் கூடாது.

அதே போல தமிழின் பால் சேற்றைப் பூசுபவர் யாராக இருந்தாலும், பச்சைத் தமிழனாயினும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி தக்க பதில் சொல்லியே
ஆகவேண்டும். இதில் பாகுபாட்டிற்கு
வேலையே இல்லை.

இங்கே கருத்திட்ட ஒரு நண்பர் ஏனோ
நண்டு என்றெல்லாம் கவலைப்படுகிறார்.
நான் என்ன செயபாரதன் தமிழில்
பாதியை எனக்குக் கொடு என்றா கேட்கிறேன் :-) இல்லை அவரின்
"தூய தமிழைப்" பார்த்து எனக்கு என்ன பொறாமையா :-))

நான் முதல் மடலிலேயே சொன்னதுபோல், அவர் தம் கட்டுரைக்கு
ஏறத்தாழ ஈராண்டுகள் பொறுத்தே
கடியவேண்டியதாகியது. பதிவுகளிலும் சரி, திண்ணையிலும் சரி வேண்டாம்
என்று விட்டு விட்டேன்.

மீண்டும் அன்புடனில் இதை அவர் தொடங்கவுமேதான் அது எனக்கு
வருத்தத்தைத் தந்தது.

சேற்றில் இறங்க வேண்டும் என்றால்
அதற்காக ஒன்றும் கவலைப்படமாட்டேன்.

ஏனெனில் அது எனக்குப் புதிதல்ல.

அன்புடன்
நாக.இளங்கோவன்