கழுகெனப் புனைந்த அண்டங்காக்கைகள்!
(பார்க்க: http://jataayu.blogspot.com/2007/02/blog-post_15.html)
பல வருடங்களாக இணையத்தைப் பார்க்கும் போது, சில விதயங்களின்மேலான புரிதல்கள் உறுதிப்படுவதுடன் - அதன்பால் ஏனோ சினம் வர மறுக்கிறது.
மாறாக மேலே உள்ள பதிவு மற்றும் 'கொட்டிய' சிகப்பு போன்ற பதிவுகளின் பால் நமக்கு இரக்கம்தான் வருகிறது.
மேலே குறிப்பிட்ட பதிவில் சாணத்தை அள்ளித் தெளித்திருக்கிறார் பதிவர் என்றால், சிகப்பாகக் கொட்டுபவர் :-) புழுக்கைகளாகப் போட்டிருக்கிறார்;
காரணம் சற்றுப் புதியதாக இருக்கக் கூடும்.
சமற்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் தமிழ்எதிர்ப்பு என்பதும் அதோடு இணைந்த வேறு சில காரணங்களையும்தான் பொதுவில் நாம் படித்திருக்கிறோம்.
ஆனால், உண்மையான காரணம் இவர்களுக்கு உளநோயாகஇருக்குமோ என்று எண்ண வேண்டியுள்ளது. அதனால் மட்டுமேஇவர்களைக் கண்டு இரங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
// cryoptology என்பதற்கு நான் முதலில் பயன்படுத்தியிருந்த "குறியீட்டு இயல்" என்ற சொல்லே வந்தது கண்டு மகிழ்ந்தேன்.//
குறியீட்டு இயல் என்று இவர் குதப்பியது, தப்பித் தவறி கலாம் வாயிலும் வந்துவிட்டதால் உடனே இவருக்குஆனந்தம் தாங்கவில்லையாம்!
உடனே தனது ஆனந்தக் குரங்கை அவிழ்த்து விட்டு அதற்குக்கள்ளையும் ஊற்றிவிட்டிருக்கிறார்.
'cryptology க்கு நமக்குத் தமிழ் தெரியல - அங்கே பார் அப்துல் கலாமுக்கும் தமிழ் தெரியல! ' என்று கலாமையும் கொச்சைப் படுத்தும் முயற்சியாகத்தான்இது தெரிகிறது.
Cryptology என்றால் குறியீட்டு இயல் என்று சொல்லி,
கள் மாந்தி உளறும் பதிவு மேதைகள்,
Coding, Encoding, Symbolization CipheringDeciphering
போன்ற சொற்களுக்கு என்ன தமிழ் வைத்திருக்கிறார்கள்?
ஏன்... மிக எளிமையாகக் கேட்கிறேன்! marking technology ஐயும் Cryptology ஐயும் செவ்வனேவேறுபடுத்தி பொருத்தமான சொற்களைக் கொடுக்கட்டும்பார்க்கலாம்.
சரி - அது கூட வேண்டாம்.
Cryptology சொல்லைக் கொண்டு குதிப்பவர்கள்,
Cryption, Encryption & Decryption என்பவற்றுக்கு ஒழுக்கமான சொல்லைக் கொடுக்கட்டும் பார்க்கலாம்?
Cryptologyக்கு குதிப்பவர்கள் Cryptography க்கு என்னசொல்வார்கள்?
குறியீடு என்ற சொல்லை சாணி மிதிப்பது போல் மிதித்து, நைத்து ஏதாவது ஒரு கழிவை எடுத்துக் கொடுப்பதைத் தவர வேறு எதையும் இவர்களால் தர முடியாது :-)))
இவர்களால், இந்த முட்டுச் சிந்தனைக் களங்களால் நிச்சயம் செய்ய முடியாது என்பதனை, குறைந்தது ஒரு மாமாங்கமாக இணையம் பார்த்துத்தான் வருகிறது.
//ஆனால் அதே நேரம் தமிழ்ப்படுத்துகிறேன் என்று பல பெயர்ச்சொற்களை தமிழில் படுத்தும் போக்கை ஏற்காதவன்//
ஏற்காதவர் என்பதில், எவ்வளவு அறியாமையை தன்னுள்தேக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த மேதாவிகள்என்று எண்ணிப் பாருங்கள். இவர்கள் வீட்டுக் கொல்லைப்புறம் முதல், எதிர் வீட்டுத் தாழ்வாரம் வரை இவர்கள் சொல்வதுசரியென்று ஏற்றுக் கொண்டால் உலகமே இவர்களைச் சரிஎன்று சொல்லி விடும் என்று எண்ணும் அறியாமையில்புழுக்களைப் போல் நெளிந்து கிடக்கும் இவர்களின்ஆணவ மலத்திற்குத்தான் கற்பம், விகற்பம் என்று வகையிட்டிருக்கிறார்கள்.
இவற்றை ஆழ்ந்து பார்ப்பவர்கள் நான் ஏன் இவர்களைக் கண்டு 'இரங்க' வேண்டும் என்று சொல்கிறேன் என்பதனைநன்கு புரிந்து கொள்வர்.
//ஸ்டாலின் என்ற பெயரை இசுடாலின் என்று இங்கே ஒருவர் எழுதுகிறார். இதே போக்கில் ஸ்விட்ஸர்லாண்ட் என்பதற்கு இசுவிச்சர்லந்து என்பதையும் ஸ்பெய்ன் என்பதற்கு இசுபெயின் என்பதையும் என்னால் (கொஞ்சமாவது பொதுப் புத்தியும், அழகியல் பற்றிய பிரக்ஞையும் உள்ள யாராலும்) ஏற்க முடியாது. //
இசுடாலின் என்று யாரோ எழுதுகிறார்களாம். எனக்குயாரென்று தெரியவில்லை ;-) அது இவருக்கு அருவெறுப்பாகஇருக்கிறதாம்.
சுவிட்சர்லாந்து என்று ஏறத்தாழ எல்லா ஏடுகளும் எழுதுகின்றன. இவர் ஏதோ வேண்டும் என்றேகிறுக்குகிறார் :-)
அழகியல் பற்றி வேறு பேசுகிறார் அசிங்கமான அழுக்காறோடு.
இது எப்படி இருக்கின்றது என்றால், "அவ மாரைப் பாரு எப்படி எடுப்பா இருக்கிறது! - ம்ம்ம்...உனக்கும் இருக்குதே மச்சம் வைச்சாற்போல" என்றுபெற்ற தாயை பிள்ளை கேட்பது போல் இருக்கிறது.
இதுதான் இவர்கள் காட்டும் அழகியல்! இதுதான்அழகியல் என்றால் அதில் மயிரளவும் நமக்குத் தேவையில்லை :-((
நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பேசிக் கொண்டு எழுதிக் கொண்டு போங்கள். இசுடாலின் என்று எழுதவில்லையே,சமக்கம் கூட்டி எழுதுகிறீர்களே என்று யாரும்சண்டைக்கு வருவதில்லை. வரப்போவதில்லை.அது உங்கள் விருப்பு.
ஆனால், அவ்வாறு எழுதுபவர்களை நக்கலடிக்க, துளியேனும் அருகதையோடு வாருங்கள்.
//இதே அடிப்படையில் தமிழில் இயல்பாகப் புழங்கும் சம்ஸ்கிருதச் சொற்களை வேண்டுமென்றே நீக்கி, அபத்தமான "தனி"த் தமிழ் என்பதாக எழுதுவதையும் எதிர்க்கிறேன்.
திரு. பத்ரி அவர்களும் இதில் என்னுடன் உடன்படுகிறார்.
//
நான் எல்லாத் தமிழர்களையும் கேட்கிறேன்! அவர்கள்சிந்தனைக்கும் விடுகிறேன்.
1) தமிழில் எப்படிங்க, *இயல்பாக* சமற்கிருதச் சொல் புழங்கும்?
2) வேலியிலே போனதை வேட்டிக்குள் விட்டுக் கொண்டுஅது "இயல்பாகப் போகுது" என்று சொன்னால் நம்பும்படியாகஉள்ளதா?
3) தமிழில் சமற்கிருதம் புழங்குகிறதா என்றால் - ஆம் புழங்குகிறது - தமிழர்கள் புழங்குகிறார்கள். ஆனால் அது இயல்பாக ஒன்றும் புழங்கவில்லை.
முழுவதும் தமிழாயிருந்து, மெல்ல மெல்ல முழுதும் சமக்காக ஆகி, மணிப்பிரவாளம் என்ற பெயரில் தமிழ் கொள்ளை போய், பின்னர் தமிழர்களின் நற்பணிகளால் மெல்ல மெல்ல மீண்டும் தமிழாக ஆகிக் கொண்டு இருக்கிறது. இதற்கு நூற்றுக் கணக்கான ஆண்டுகளின் வரலாறு இருக்கிறது.
இதனைத் தமிழ் மக்கள் உணராமல் இல்லை.
இதனைக் கிடுக்குபவர்களில் இரண்டு வகையினர் உண்டு.
அ) பெருவாரியான சமக்கப் பாசத்தில் "நல்ல தமிழின்" மேல் சாணம் வீசும் சமக்கதாசர்கள் ஒரு வகை.
ஆ) சிந்திக்க முயன்றும், சிந்தனையில் தெளிவுகள் இருந்தும் "செகவாசக் குறைகளினால்" பிறழ்வைப் பேசுபவர்கள் இரண்டாம் வகை.
இவற்றில் மேற்கண்ட கருத்தை எழுதியிருப்பவரின்வகை என்ன என்பதை வாசிப்பவர்கள் சிந்தனைக்குவிட்டு விடுகிறேன்.
4) தனித்தமிழ் இவருக்கு அபத்தமாம் - அதை எதிர்க்கிறாராம்.
தமிழ், செந்தமிழ், தூயதமிழ், தனித்தமிழ், கொடுந்தமிழ்என்ற இவற்றிற்கு உரிய வேறுபாட்டை இந்தக் காகங்கள்தெளிவாகக் கற்றுக் கொண்டு வரும்போது இதற்கு நான்விடையளிக்கிறேன். அறியாப் பேதைகளிடம் இதனைப் பற்றிப்பேசுவது காலவீண்.
இருப்பினும், தனித்தமிழ் அபத்தம் என்று சொல்லும்அளவிற்குத் துணிவு வந்திருக்கிறதென்றால் "திமிர் ஏறிவிட்டது"என்றுதான் பொருள்.
இந்தத் திமிருக்கு, இன்னும் தமிழின் திமிர் எவ்வளவு என்றுதெரியவில்லை போலும்!
ஆனால் - ஒன்று புரியவில்லை; தன் கருத்துக்களுக்குஏன் பத்ரியின் கையெழுத்தையும் இவரே சேர்த்துப் போட்டுவிடுகிறார் என்று! ;-)
//இரண்டாயிரம் ஆண்டு தமிழ் இலக்கியத்தின் பாரம்பரியத்திற்கே எதிரானது இந்த "தனித் தமிழ்" ஜல்லி.
தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலம்பு, திருக்குறள், கம்பராமாயண காலத்திலிருந்து இந்த நூற்றாண்டு வரை ஒரு உயிர்த் துடிப்புள்ள மொழி செய்துவரும் அற்புதமான பரிசோதனைகளின் பரிமாணங்கள் தான் சம்ஸ்கிருத மற்றும் பிற மொழிச் சொற்களின் இயல்பான கலப்புகள். இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாதவர்கள் குருட்டுத் மொழித் தீவிரவாதிகளே அன்றி மொழியை வளர்ப்பவர்கள் அல்லர்.
//
மீண்டும் இதே முட்டாள் தனமான கருத்தையே ஒரு மாமாங்கமாக இணையத்தில் கண்டு வருகிறேன்.
நான் உள நோய் பிடித்தவர்கள் என்று சொல்வது இதனாலும்.
இவர்களுக்கு ஏதோ அரிப்பு - உளறிக் கொண்டே இருக்கிறார்கள்.
நானும் பல களங்களிலே இந்த முட்டாள்களிடம்இருந்து ஏதேனும் நல்ல சிந்தனை முகிழ்ப்பு வருகிறதா என்று பார்ப்பதுண்டு. குறைந்த பக்கம் ஏரணத்தோடு கூடியவாதத்தை வைக்கிறார்களா என்பது என் எதிர்பார்ப்பு.
அரைத்த மாவையே அரைப்பது போல, திராவிடம், ஆரியம், கருணாநிதி, பெரியார்ஆத்திகம் நாத்திகம் என்ற இதனுள்ளேயே கிடந்துஉழன்று கொண்டு,தமிழ் இலக்கியங்களைச் சாடிக் கொண்டு, இலக்கியங்கள் காட்டும் நாயக நாயகியரைத் தாழ்த்திக் கொண்டு, யாரேனும் முனைந்து ஓரளவு தமிழ் எழுதினாலும் காழ்ப்பைக் கொட்டிக் கொண்டு, அதற்குத் தமிழ் வெறி, மொழித் தீவிரவாதிகள் என்று பெயரிட்டுக் கொண்டு, பொறுப்பற்றுத்திரிகிறார்களேஒழிய, ஒருப்படவே மாட்டேன்கிறார்கள்.
இதனால்தான் இவர்களை உளவியல் வழியே பார்க்கத் தோன்றுகிறது.
இந்த மனநோயாளிகள் திருந்த வேண்டும்.
அவர்களுக்கு சொல்ல வேண்டியவை இவைதான்:
1) அ-னா ஆவன்னாவிலும் கருணாநிதியும் பெரியாரும்தெரிந்தார்கள் என்றால் அவசியம் உங்களுக்கு மனநோயாகத்தான்இருக்க வேண்டும். மருத்துவரைப் பாருங்கள்.
2) குறியீட்டு இயல் போன்ற சிறு சொற்களை சொல்வதால் உங்களை தாழ்த்துகிறேன் என்று எண்ணாதீர்கள். உங்களால் முடிந்த சொற்களைக் கொண்டு வாருங்கள். ஆனால், அதுவே முடிவான முடிவு என்று சாதித்து, அதனினும் மேலே நல்ல அடிப்படைகளுடன் வரும் சொற்களையும் அந்தச் சொற் சிற்பிகளையும் நக்கலடித்து உங்களின் தரத்தைத் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். இது ஆணவம்.
3) உங்களுக்குப் பிடித்ததை, தெரிந்ததை, உங்கள் அளவுக்கு முடிந்ததை, கலந்தோ குதப்பியோ எழுதிக் கொள்ளுங்கள். ஆனால், யாராவது கலப்பற்ற தமிழ் எழுதினால, ஆய்வெழுதினால் மொழித்தீவிரவாதி, தமிழ்த் தாலிபான், தமிழ் வெறியர்கள் என்று சொல்லி உங்கள் அறிவின் அளவை வெளிச்சம் போட்டுக் காட்டாதீர்கள்.
உங்களால் முடிய வில்லை - உங்களுக்குத் திறன் இல்லை என்பதனை ஏற்றுக் கொண்டு, எழுதுபவர்களிடம் முடிந்தால் கற்றுக் கொள்ளுங்கள் - இல்லாவிடில் பக்கம் செல்லாதீர்கள்.
யானையின் பக்கத்தில் சென்று சிலிர்த்துக் காண்பித்தால் மட்டும்
ஈரப்பன்றி வீரப்பன்றியாகிவிடாது.
அடிப்படையில் சில பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
4) குறிப்பாக மொழியாக்கம், கலைச்சொல் காணல் போன்ற பணிகள் பேருழைப்பையும் பேரறிவையும் மூலதனமாகக் கொண்டவை. அவற்றை சிறுமைப் படுத்தி அசிங்கப் பட்டுக் கொள்ளாதீர்கள். இன்னும் சொல்லப்போனால் உங்களின் உள நோயுடன் அப்பதிவுகள் பக்கத்தில் செல்லக் கூட அருகதை இல்லை.
5) பல பேர் கலப்புத்தமிழ் எழுதுகிறார்கள். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக வெகு சிலர் கலப்பில்லாத் தமிழ் எழுதுகிறார்கள். அவர்களைப் போய் நீ தாலிபான், தீவிரவாதி என்று சொல்லிஏன் சிறுமைப் படுத்துகிறீர்கள்? அதற்கு உங்களின் தேவை என்ன?"
6) யாரோ சிலர் கலப்பு இல்லாத் தமிழ் எழுதினால் உங்களுக்குஎன்ன ஆகிறது? நீங்கள் இழப்பது என்ன?
7) ஏன் தமிழில் கலந்து எழுது கலந்து எழுது என்று போர் முரசுகொட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்?
அய்யோ சமக் இல்லாமல் எழுதுகிறார்களே என்று உங்கள் மனம் ஏன் பதைக்கிறது? வெட்கமாக இல்லை?
8) இங்கே இணைய உலகில் எழுதுபவர்களில் எத்தனை விழுக்காடு பேர் கலப்பில்லாத் தமிழ் எழுதுகிறார்கள்?
ஒரு காலத்தில் தூய்தமிழ் எழுதிக் கொண்டிருந்த நானறிந்த சில நண்பர்களே, தற்போது தங்களது மொழியை முழுவதும் ஊத்தையாக ஆக்கிக் கொண்டுவிட்டார்கள் இப்பதிவுலகில் என்பது என்னை வாட்டியது.
நிலை இப்படியிருக்க, குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தாற்போல, தனித்தமிழ்-அபத்தம்-தீவிரம் என்றெல்லாம் எழுதி இட்டம்போல
மந்தியாட்டம் போடுகிறீர்கள்!?
முட்டாள் தனமாக இல்லை?
9) உங்களை யார் சீண்டுகிறார்கள்? ;-) யாரொருவருக்கு நற்றமிழ் வாய்க்கிறதோ ஆர்வமுளதோஅவர்களை உங்களின் ஊத்தை வாய்களால் ஒன்றும் செய்ய முடியாது. நல்ல மாற்றங்களைத்தடுக்க யாராலும் முடியாது.
10) வழக்கமான வடமொழி, பார்ப்பனம், திராவிடம், ஆரியம்போன்ற உங்களின் உளறல்களோடு, தேவாரங்களை வேறுஎழுதி, ஞான சம்பந்தர் என்ற அந்த மகானிற்கு இழுக்கையும் சேர்த்து வைக்கிறீர்கள்.
ஏன்யா... நிசமாகவே கேட்கிறேன். உங்களுக்கு மனசாட்சி இல்லை?
பெருகிய தமிழ் விரகினன் ஞானசம்பந்தனும்,
பண் ஆர் இன் தமிழ் ஆய் பரமாய பரஞ்சுடரே என்றுஎழுதிய சுந்தரமூர்த்தி நாயனாரும், "அய்யோ ஒரு நாளும் உன்னை தமிழால் பாடாமல் இருந்ததில்லை" என்று அஞ்சிப் பதைபதைத்துப் பாடிய நாவுக்கரசரும் பாடிய அப்பழுக்கில்லாத தூயதமிழ்ப் பாமாலைகளான தேவாரத்தையும் அதனைஆக்கிய நாயன்மார்களையும் வேறு கூட்டி வந்துவடமொழிக் கலப்பிற்கு, சமக்கப்புரட்டிற்கு சாட்சியாகக் கொண்டு வருகிறீர்களே!உங்களுக்கு நாணமாக இல்லை?
அவர்கள் பாடிப்பரவிய தமிழ் கணக்கிலடங்காதது.
கணக்கில் கிடைத்தது மட்டும் தேன் சொட்டும் இன்பத்தமிழ்.அப்பேர்ப்பட்ட மகான்களின் கலப்பில்லாத, தூயதமிழைப் பார்க்காமால் அவர்களையேஉங்கள் வடமொழிக் கலப்பிற்குத் துணையாகக்கொண்டு வருகிறீர்களே, எப்பேர்ப்பட்ட எத்தர் நீங்கள்!
வடமொழிக் கலப்பு வேண்டும் என்ற வழக்கிற்கு தேவாரத்தை சாட்சிக்குக் கொண்டு வந்த ஒன்றை வைத்துத்தான் இவர்களுக்கு இருப்பதுஅறியாமையும் உளநோயும் என்றுஉறுதியாகக் கொள்ள வேண்டியிருக்கிறது.
திருந்துங்கள் புரட்டர்களே!.
மனநோயில் இருந்து விடுபடுங்கள்!!
எனது இனிய நண்பர்களே, எனது இணையப் பட்டறிவில் இந்த மன நோயாளர்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்றால்:
வீட்டில் மதிற்சுவரிலோ கூரையிலோ காகம் கரைந்தால்
என்ன செய்கிறோம்? பேசாமல் இருக்கிறோம்!
அதே காகம் அண்டங்காகமாக இருந்தால்? ...ச்சூ என்றுவிரட்டுகிறோம் அல்லவா? அது போல ..ச்சூ என்ற சொல்/எழுத்துக்கு மேல் இந்த உள நோயாளிகளுக்குவிடையாகச் சொல்வதெல்லாம் வீண்!
அண்டங்காக்கையை ஏன் விரட்டுகிறோம் என்று அனைவருக்கும்
நன்கு தெரியுமல்லவா? ;-)
இவர்களுக்குத் தேவையான விளக்கங்கள் ஞாயமாகவும்அறிவின்பாற்பட்டும் எவ்வளவோ சொல்லியாயிற்று.
ஆயினும் இவர்கள் திருந்தாத, திருத்த முடியாதவர்கள் என்றே தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள்.
அண்டங்காக்கையை "...ச்சூ" என்று விரட்டுவது போல எளிதாக தவிர்த்துவிட்டு, அவரவர் கடமையை ஆற்றவேண்டும். குறிப்பாக நல்ல தமிழ்ப்பணிகளில் முனைபவர்கள் இவர்களுக்குஅரையெழுத்தும் பதில் எழுதி காலத்தை வீணடிக்கக் கூடாது.
அதே வேளையில் சட்டையைக் கிழித்துக் கொண்டுத் திரிபவர்களுக்கு மேலும் வெறி பிடித்து, இடையூறு பெருத்தால் சரி செய்ய வேண்டியது பலரின் கடமையாகிறது.
நாக.இளங்கோவன்
Thursday, February 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
என்னாங்க அய்யா மாருங்களே
கேள்வியா கொட்டினீங்களே.
//Cryptology என்றால் குறியீட்டு இயல் என்று சொல்லி,
கள் மாந்தி உளறும் பதிவு மேதைகள்,
Coding, Encoding, Symbolization CipheringDeciphering
போன்ற சொற்களுக்கு என்ன தமிழ் வைத்திருக்கிறார்கள்?//
இதுக்கு பதில் சொல்லுங்காணும்.
//இசுடாலின் என்று யாரோ எழுதுகிறார்களாம். எனக்குயாரென்று தெரியவில்லை ;-) அது இவருக்கு அருவெறுப்பாகஇருக்கிறதாம்.
சுவிட்சர்லாந்து என்று ஏறத்தாழ எல்லா ஏடுகளும் எழுதுகின்றன.//
ஒங்க தினமலரும் அப்படித்தான் எழுதுதுங்கிறேன்.
//1) தமிழில் எப்படிங்க, *இயல்பாக* சமற்கிருதச் சொல் புழங்கும்?
2) வேலியிலே போனதை வேட்டிக்குள் விட்டுக் கொண்டுஅது "இயல்பாகப் போகுது" என்று சொன்னால் நம்பும்படியாகஉள்ளதா?
3) தமிழில் சமற்கிருதம் புழங்குகிறதா என்றால் - ஆம் புழங்குகிறது - தமிழர்கள் புழங்குகிறார்கள். ஆனால் அது இயல்பாக ஒன்றும் புழங்கவில்லை.//
கேள்விக்கு என்ன பதில்?
இந்தத் தலைப்பைப் பூங்காவில் பார்த்துவிட்டு ஏதோ நல்ல கதை என்று வந்தால், இங்கே சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். என்னடா என்று நேரம் செலவழித்து எல்லாம் படித்துப் பார்த்தேன்..
// வழக்கமான வடமொழி, பார்ப்பனம், திராவிடம், ஆரியம்போன்ற உங்களின் உளறல்களோடு, தேவாரங்களை வேறுஎழுதி, ஞான சம்பந்தர் என்ற அந்த மகானிற்கு இழுக்கையும் சேர்த்து வைக்கிறீர்கள். //
இது பெரிய பொய்யா இருக்கிறதே? அந்தப் பதிவில் சம்பந்தர் பற்றி எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார். இழுக்கு என்று எதைச் சொல்கிறீர்கள்?
"சம்பந்தர் வடமொழியை வெறுத்தவர், வேதத்தையே வெறுத்தவர், அவரைக் கொளுத்தி விட்டார்கள்" (இன்னும் கொஞ்சம் விட்டால் அவர் சிவனையே வெறுத்தவர் என்று எழுதியிருப்பார்கள் போலிருக்கிறதே!)
இது போன்ற மோசமான பொய்களுக்கு நல்ல பதிலடி அல்லவா அளித்திருக்கிறார்! நீங்க சொல்லுவது சுத்தமா புரியல.
// இந்த மனநோயாளிகள் திருந்த வேண்டும். //
எனக்கு இப்ப சந்தேகம் வருது யாருக்கு மனநோய் என்று?
// அதே வேளையில் சட்டையைக் கிழித்துக் கொண்டுத் திரிபவர்களுக்கு மேலும் வெறி பிடித்து, //
ஜடாயு எழுதியது மிகவும் நிதானமாக, 'கூலாக' இருக்கிறது.
எனக்கு என்னவோ நீங்கள் தான் இப்படி செய்வதாக தோன்றுகிறது.
இப்படி ஒரு பிரயோசனமில்லாத கட்டுரையை இதழில் போட்டு அநாவசியமாக என் நேரத்தை வீணடித்த பூங்கா குழுவைக் கண்டிக்கிறேன்.
// தமிழில் எப்படிங்க, *இயல்பாக* சமற்கிருதச் சொல் புழங்கும்? //
உங்க பதிவுக்கு "நயனம்" அப்படின்னு நல்ல சமற்கிருதச் சொல்லில் பேர் வச்சிருக்கீங்க இல்ல.. அப்படி, அப்படித் தாங்க!
"கண்" அப்படின்னு ஏன் பேர் வைக்கல?
// அது இயல்பாக ஒன்றும் புழங்கவில்லை.//
// கேள்விக்கு என்ன பதில்? //
பதில் தான் நயனம் ஐயாவே சொல்லி விட்டாரே!
நயனம் என்ற சொல் வடமொழியா?
படித்ததும் சிரிக்க ஆரம்பித்தவந்தான்
இன்னும் நிறுத்தவேயில்லை.
சாதாரண மூனாம் வகுப்பைத் தமிழ்ப்
பள்ளிக் கூடத்தில் படித்தவர்களுக்கே
'நயனம்' என்ற சொல் சமற்கிருதம்
அல்ல என்று. நீங்க சராசரி அளவிற்கு தமிழாக இருக்கிறீர்கள் - தெரியவில்லையே!!
அது தமிழ்!
இப்பவாவது தெரிந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டீர்களே !
வாழ்த்துக்கள்!
மற்றவர்களிடமும் போய்ச் சொல்லுங்கள்.
(வெறும் சமற்கிருதத்தையும், அதற்குப்
போற்றி பாடுபவர்களையுமே படித்தால்
'தமிழ்' என்ற சொல்லே சமற்கிருதம்தான் என்று சொல்லத்தோன்றும். எனவே அப்பப்ப
கொஞ்சம் தமிழ் நூல்களையும் படியுங்கள்.)
எல்ல அண்ணாமலை:
( வேறொன்றுமில்லை - Hello Annamalai - என்று தூயதமிழில் சொன்னேன் :-) )
தனித்தமிழை, தூய தமிழை நக்கலடிப்பவர்களுக்கு,
தேவாரத்தையும், சம்பந்தப் பெருமானையும் பேசவே அருகதையில்லைங்கண்ணா!
//
// அதே வேளையில் சட்டையைக் கிழித்துக் கொண்டுத் திரிபவர்களுக்கு மேலும் வெறி பிடித்து, //
ஜடாயு எழுதியது மிகவும் நிதானமாக, 'கூலாக' இருக்கிறது.
எனக்கு என்னவோ நீங்கள் தான் இப்படி செய்வதாக தோன்றுகிறது. //
உங்க பார்வையே வேறுங்கண்ணா!
அது உங்கள் சார்பானதுங்கண்ணா!
அதனால அது 'கூலா'த்தாங்கண்ணா
இருக்கும்.
நமக்கு எது 'கூழு', எது சூடு, என்று
நல்லாத்தெரியுங்கண்ணா.
அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படிங்கண்ணா!
இப்பதானே கச்சேரிக்கே என்னை
இழுத்து வந்திருக்கீங்க!!
பொறுங்கண்ணா!
(சும்மா போகுது போகுது என்று
இருந்தால் ஏகத்துக்கும் ஆட்டம்
போடுதாங்களே...ம்..ம் ?? )
நயனன் அவர்களே,
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். நானும் நல்ல தமிழில் எழுத ஆசைப்படுகிறேன். ஆனால் சில பெயர்ச்சொற்களை எழுதும்போது கிரந்த எழுத்துக்களைத் தவிர்க்க முடியாது என்பதே என் கருத்து. ரஜினி சிவாஜி என்பதை இரசினி சிவாசி என்றால் கடுப்பாய் இருக்கிறது. இதற்கு என்ன மாற்று சொல்கிறீர்கள்?
ரஜினிராகவ்
//
ரஜினி சிவாஜி என்பதை இரசினி சிவாசி என்றால் கடுப்பாய் இருக்கிறது. இதற்கு என்ன மாற்று சொல்கிறீர்கள்?
ரஜினிராகவ்
//
அன்பிற்குரிய திரு.இரசினிராகவ்,
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி. மிகச் சரியான வினாவை
கேட்டிருக்கிறீர்கள்.
விரிவான விளக்கத்தை அவசியம்
விரைவில் எழுதுகிறேன்.
பயனுள்ள மறுமொழிக்கு மிக்க நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்
Anglophones do not bother to be stupid like the Sankritologists, who neither know Sanskrit or Grantha. They simply transliterate with limited sounds. The Sanskritologists who have very less to contribute positively to Tamil, come in droves with their wagging tails, only when it comes to proper nouns. Hell to them. They are like the half baked idilis, cause stomach ache and nothing else.
John is better written as Yowan. It is the original Hebrew word. There is no ja in Hebrew. The Sryrian Christians in India still call John and Yohan.
Tamil can do well with or without Grantha and people should choose their own style. Nayanan's language is simple, clean and crisp.
Post a Comment